எலான் எனும் சம்பவக்காரன்! மொத்தமாய் புறக்கணித்த மீடியாக்கள்.. எக்ஸ்-ஐ வைத்தே சம்பவம் செய்த ட்ரம்ப்!
நியூயார்க்: அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று வரலாறு படைத்திருக்கிறார் டொனால்ட் ட்ரம்ப். அமெரிக்காவின் ஒட்டுமொத்த மீடியாக்களும் கமலா ஹாரிஸையே முன்னிலைப்படுத்திய நிலையில், வெறும் எக்ஸ் வலைதள ப்ரோமோசன்களை மட்டுமே வைத்து ட்ரம்புக்கு அணிலாக இருந்து வெற்றி தேடித் தந்திருக்கிறார் எலான் மஸ்க்.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே உலக அளவில் முக்கியத்துவம் பெற்றிருந்த அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற்று முடிவடைந்த நிலையில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் 300க்கும் அதிகமான எலெக்ட்ரோல் வாக்குகளை பெற்று அமெரிக்காவில் அதிபராக இரண்டாவது முறையாக பதவி ஏற்றிருக்கிறார்.

538 எலெக்ட்ரோல் வாக்குகளின் 270 வாக்குகளை பெற்றாலே அதிபர் ஆகிவிடலாம் என்ற நிலையில் டொனால்ட் டிரம்ப் மொத்தமாக 301 எலெக்ட்ரோல் வாக்குகளை பெற்றிருக்கிறார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட கமலா ஹாரிஸ் வெறும் 226 எலக்ட்ரோல் வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது.
2016 ஆம் ஆண்டு முதன்முறை அதிபரான டொனால்ட் டிரம்ப் 2026 தேர்தலில் 232 எலக்ட்ரோல் வாக்குகளை மட்டுமே பெற்று 306 வாக்குகள் பெற்றிருந்த ஜோ பைடனிடம் வீழ்ந்தார். ஆனால் நான்கு ஆண்டுகளில் மீண்டும் அரசியலில் ஆழமாக கால் பதித்து தற்போது 301 வாக்குகள் பெற்று மீண்டும் அதிபராகி இருக்கிறார் ட்ரம்ப். அதே நேரத்தில் அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்புக்கு பக்கபலமாக இருந்தவர் எலான் மஸ்க் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒட்டுமொத்தமாக அனைத்து மீடியாக்களும் கமலா ஹாரிஸ் பக்கமே நின்றன. அவரது செய்திகள், அவரது பேச்சு, விவாதம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதாக எலானே பலமுறை குற்றம் சாட்டியிருந்தார். அதே நேரத்தில் அவற்றையெல்லாம் தவிடு பொடியாக்கி அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் மீண்டும் வெற்றி பெற்று வரலாற்றுச் சாதனை படைத்திருக்கிறார். அமெரிக்காவின் பெரும்பாலான மீடியாக்கள் கமலா ஹாரிஸுக்கு ஆதரவாகவே செய்திகள் வெளியிட்டன.
அதே நேரத்தில் டொனால்ட் ட்ரம்ப் உலகளவில் பெரும் பணக்காரரும் புத்திசாலித்தனமாக செயல்படுபவருமான எலான் மஸ்கை தன்னுடன் வைத்துக்கொண்டு தனது வெற்றியை உறுதிப்படுத்த பல புதிய வழிகளை மேற்கொண்டார். குறிப்பாக எக்ஸ் பக்கத்தில் அதிக அளவு பிரமோஷன் இருந்தது. மேலும் அவருக்கு முழுமையாக ஆதரவு வழங்கினார் எலான். அது மட்டுமல்லாமல் மெக்டொனல்டில் சிப்ஸ் செய்து கொடுப்பது, டோல்கேட்டில் வேலை செய்வது என உள்ளூர் அரசியல்வாதிகளை போல் அல்லாமல் வித்தியாசமாக பல ப்ரோமோஷன் மேற்கொண்டது அவரது வெற்றிக்கு முழு காரணமாக பார்க்கப்படுகிறது.
அதே நேரத்தில் அமெரிக்காவில் உள்ள மக்கள் மீடியாக்களின் நிலைப்பாட்டையும் மீறி சமூக வலைதளங்கள் மூலம் முடிவுகளை மாற்ற முடியும் என்பதை எலான் மஸ்க் நிரூபித்திருக்கிறார். எலான் தனது எக்ஸ் பக்கத்தில் பல்வேறு விதமான ப்ரோமோஷன்களை செய்து வந்தார். அது டிரம்ப்பின் வெற்றிக்கு வலுவாக துணை புரிந்தது.
அமெரிக்க அரசியலில் சமூக ஊடகங்களின் தாக்கம் பிரபல மீடியாக்களை விடவும் அதிகமாக இருப்பதை டிரம்பின் வெற்றி பிரதிபலித்துள்ளது. மேலும் அமெரிக்க மக்களிடையே தனது கருத்தை கொண்டு செல்லவும், பிரபல செய்தி நிறுவனங்களின் கருத்துகளுக்கு மாற்று கருத்துக்களை, சிந்தனைகளை விதைக்க தனது எக்ஸ் வலைதளத்தை முழுமையாக பயன்படுத்திக் கொண்டார் எலான். இது டிரம்பின் ஆதரவாளர்களுக்கு பெரிய அளவில் உற்சாகத்தை கொடுத்தது. பலரும் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தி டிரம்பின் வெற்றிக்கு ஆதரவாக இருந்தனர். எலான் மஸ்க் எனும் சம்பவக்காரன் செய்துள்ள இந்த சம்பவம் எதிர்காலத்தில் அரசியல்வாதிகளுக்கு சமூக ஊடகங்களின் முக்கியத்துவத்தையும் ஆற்றலையும் இந்நேரம் நிரூபித்திருக்கும்.












Click it and Unblock the Notifications