அமெரிக்காவில்.. இனி இந்திய ஆண்கள் - பெண்கள் இடையே திருமணம் நடக்காது போலயே! டிரம்ப் முடிவால் சிக்கல்
நியூயார்க்: அமெரிக்காவில் இனி கொஞ்சம் கொஞ்சமாக இந்திய ஆண்கள் பெண்கள் இடையே திருமணம் நடப்பது நாளுக்கு நாள் குறைய வாய்ப்பு உள்ளது. அமெரிக்காவில் அதிபர் டிரம்ப் கொண்டு வந்த புதிய விதி காரணமாக இந்த வழக்கம் குறைய வாய்ப்புகள் உள்ளன.
பொதுவாக ஒரு குழந்தை அயல் நாட்டில் பிறந்தால் அது அந்த நாட்டு குடிமகனாக மாறும். அதாவது ஆட்டோமேட்டிக் குடியுரிமை என்று இதை அழைப்பார்கள். உலகம் முழுக்க பல நாடுகளில் இந்த முறை உள்ளது. ஒரு குழந்தை அயல் நாட்டில் பிறந்தால் அதன் தாய் - தந்தை அந்த நாட்டு குடிமகனாக இல்லை என்றாலும் என்றாலும் அந்த குழந்தை அந்த நாட்டு குடிமகனாக மாறும். அமெரிக்காவில் இந்த சட்டம் அமலில் உள்ளது. இந்த சட்டத்தைதான் டிரம்ப் நீக்குவதாக அறிவித்துள்ளார்.

அமெரிக்காவில் குடியுரிமை கிடைப்பதில் சிக்கல்:
டிரம்ப் அமெரிக்காவில் ஆட்டோமேட்டிக் சிட்டிசன்சிப் முறையில் மாற்றத்தை கொண்டு வர அவர் முடிவு செய்துள்ளார். அவரின் தேர்தல் அறிக்கையில் இது இடம்பெற்றுள்ளது. டிரம்ப் ஆட்சிக்கு வந்த முதல் நாளே அதை நடைமுறை படுத்தி உள்ளார்.
1. இனி அங்கே பிறக்கும் குழந்தை ஒன்றிற்கு தானாக குடியுரிமை கிடைக்க வேண்டும் என்றால் அதன் பெற்றோர்களில் ஒருவர் கண்டிப்பாக அமெரிக்கராக இருக்க வேண்டும். அல்லது கிரீன் கார்டு வைத்திருக்க வேண்டும்.
2. இந்த புதிய விதிப்படி.. அமெரிக்காவில் பிறக்கும் வந்தேறி பிரிவை சேர்ந்த குழந்தைகளுக்கு இனி ஆட்டோமேட்டிக் சிட்டிசன்சிப் கிடையாது. அதாவது பெற்றோர்களில் ஒருவர் கண்டிப்பாக அமெரிக்கராக இருக்க வேண்டும்.
3. இனி அங்கே சிட்டிசன்ஷிப் பெறுவதற்கு குடியுரிமை அல்லது அமெரிக்காவில் ஏதாவது ஒரு கிரீன் கார்டு அல்லது அதிகாரபூர்வ இருப்பிட சான்று வைத்து இருக்க வேண்டும்.
4. இவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு மட்டுமே குடியுரிமை வழங்கப்படும் என்று டிரம்ப் மிக முக்கியமான முடிவை எடுக்க உள்ளார். இதனால் ஆட்டோமேட்டிக் சிட்டிசன்ஷிப் மூலம் பலன் அடைந்த பல ஆயிரம் இந்தியர்கள் பாதிக்கப்படும் வாய்ப்புகள் உள்ளன.
திருமணங்கள் குறையும்:
இந்த புதிய விதி காரணமாக அமெரிக்காவில் இனி கொஞ்சம் கொஞ்சமாக இந்திய ஆண்கள் பெண்கள் இடையே திருமணம் நடப்பது நாளுக்கு நாள் குறைய வாய்ப்பு உள்ளது. ஏனென்றால் அங்கே எல்லா இந்தியர்களிடமும் கிரீன் கார்டு இல்லை.
பலரும் எச் 1 பி விசா வைத்துள்ளனர். இப்போது ஆண் பெண்களில் ஒருவராவது கிரீன் கார்டு வைத்து இருக்க வேண்டும் . அப்படி இருந்தால்தான் பிறக்கும் குழந்தைக்கு குடியுரிமை கிடைக்கும். இதன் காரணமாக கிரீன் கார்டு உள்ள இந்திய ஆண் அல்லது பெண்ணுக்கு திருமணம் நடக்கும்.
கிரீன் கார்டு வைத்து இருப்பவர்களை திருமணம் செய்ய மட்டுமே பெரும்பாலும் ஆணோ, பெண்ணோ முன் வருவார்கள். இது ரிஸ்க்கான விஷயம்.. அதோடு கிரீன் கார்டு உள்ள பல இந்தியர்கள் கிடைக்க வாய்ப்பு இல்லை என்பதால் இந்தியர்கள் அமெரிக்கர்களை திருமணம் செய்து கொள்ள வாய்ப்புள்ளது. அல்லது அமெரிக்காவில் குடியுரிமை உள்ள பிற நாட்டினரை திருமணம் செய்து கொள்ள வாய்ப்பு உள்ளது. இதனால் அமெரிக்காவில் இனி கொஞ்சம் கொஞ்சமாக இந்திய ஆண்கள் பெண்கள் இடையே திருமணம் நடப்பது நாளுக்கு நாள் குறைய வாய்ப்பு உள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications