என்னது இத்தாலி பிரதமர் மெலோனியுடன் டேட்டிங்கா? எலான் மஸ்க் கொடுத்த ரிப்ளை
நியூயார்க்: டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் ஓனரும், உலகின் மிகப்பெரிய பணக்காரருமான எலான் மஸ்க், சமீபத்தில் இத்தாலி பிரதமர் மெலோனியுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் சோஷியல் மீடியாக்களில் வேகமாக பரவியது. உடனே இருவரும் டேட்டிங்கில் இருக்கிறார்கள் என தகவல்கள் பரவின. இதற்கு மஸ்க் விளக்கமளித்துள்ளார்.
உலகின் மிகப்பெரும் பணக்காரராக வலம் வருபவர் எலான் மஸ்க். இவர் தொட்டதெல்லாம் தூள் பறந்து வருகிறது. விண்வெளி துறையில் வேறு எந்த தனியார் நிறுவனமும் எட்டாத உயரத்தை இவர் எட்டியிருக்கிறார். அதேபோல ஆட்டோமொபைல் துறையில் எலான் மஸ்க்கின் சாதனையை அடித்துக்கொள்ள வேறு ஒருவர் பிறந்துதான் வர வேண்டும். அந்த அளவுக்கு கெத்து காட்டி வருகிறார். இவரது சாதனையை பேச, டெஸ்லா கார் ஒன்றே போதும்.

ராணுவ வாகனங்களுக்கு இணையான கம்பீரமும், நவீன டெக்னாலஜியும் கொண்ட இந்த கார்களை போல, வேறு எந்த நிறுவனமும் இதுவரை தரமான கார்களை உற்பத்தி செய்தது கிடையாது.
அப்படியே தொழில்நுட்ப துறை பக்கம் வந்தால்.. ட்விட்டரை வாங்கி, அதன் பெயரை x என மாற்றி, மேலும் பல மாறுதல்களை செய்து மக்கள் மத்தியில் பயன்பாட்டுக்கு விட்டிருக்கிறார். திரும்பும் பக்கமெல்லாம் 'ஜோனு மழை' என்கிற பாணியில், எந்த பக்கம் திரும்பினாலும் மஸ்க்கின் தயாரிப்புகள் கண்ணுக்கு தெரிகின்றன.
இப்படியாக சோஷியல் மீடியாவில் ஆஹா, ஓஹோனு பேசப்பட்டு வந்த மஸ்க் சமீபத்தில் காதல் சர்ச்சையிலும் சிக்கியுள்ளார். அவருக்கு சொந்தமான x தளத்திலேயே, அவரை பற்றி நிறைய புரளிகள் வர தொடங்கிவிட்டன. காரணம் இத்தாலி பிரதமருடன் இவர் எடுத்துக்கொண்ட போட்டோதான்.
'அட்லான்டிக் கவுன்சில் குளோபல் சிட்டிசன் விருது' வழங்கும் விழாவில்தான் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. உலக ஒற்றுமைக்காக பாடுபட்டவர், இதற்காக குறிப்பிடத்தக்க முயற்சிகளை எடுத்தவர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. கடந்த 2010ம் ஆண்டிலிருந்து இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. நடப்பாண்டில் இத்தாலி பிரதமர், ஜார்ஜியா மெலோனிக்கு விருது வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் எலான் மஸ்க்கும் பங்கேற்றிருந்தார்.
அப்போது மெலானிக்கு விருதை வழங்கி சிறப்பித்து பேசிய மஸ்க், "மெலோனி நான் போற்றக்கூடிய நபர்களில் ஒருவர். அவர் இத்தாலியின் பிரதமராக நம்ப முடியாத பணிகளை செய்திருக்கிறார். நேர்மையானவர், உண்மையானவர்" என்று பாராட்டி தள்ளியிருக்கிறார். பின்னர் இருவரும் சேர்ந்து உணவருந்தியுள்ளனர்.
இந்த போட்டோதான் சோஷியல் மீடியாவில் வேகமாக பரவியிருந்தது. இது குறித்து 'டெஸ்லா ஓனர்கள்' என்று பெயரிடப்பட்ட x பயனர் ஒருவர், "என்ன மஸ்க்! டேட்டிங்கா?" என்கிற ரீதியில் கேள்வி எழுப்ப, மஸ்க் இதற்கு மறுப்பு தெரிவித்திருக்கிறார். "இது டேட்டிங் இல்லை" என்று தெளிவாக கூறியிருக்கிறார்.
நேத்து லட்டு, இன்னைக்கு எலான் மஸ்க் என ஒவ்வொரு சோஷியல் மீடியாவில் பல்வேறு விஷயங்கள் தீவிரமாக விவாதிக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications