மூளைக்குள் பொருத்தப்பட்ட சிப்.. வேலையை காட்ட தொடங்கிய எலான் மஸ்க்! நியூராலிங்கின் முதல் வெற்றி
நியூயார்க்: பக்கவாதம் பாதிக்கப்பட்டுள்ள மனிதர்களின் மூளைக்குள் 'சிப்' பொருத்தி, அவர்களை இந்த பாதிப்பிலிருந்து மீட்க எலான் மஸ்க் நியுராலிங்க திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். இந்நிலையில் இந்த திட்டத்தின் முதல் கட்ட சோதனை வெற்றிகரமாக நடந்து முடிந்திருப்பதாக அவர் கூறியுள்ளார்.
நியூராலிங்க் என்றால் என்ன?: ஏஎல்எஸ் அல்லது கழுத்து பகுதியில் ஏற்பட்ட பாதிப்பால் பக்கவாத பாதிப்புக்கு ஆளான நோயாளிகளின் மூளையில் சிப் பொருத்தப்படும். இதன் மூலம் அவர்களது எண்ணத்தின் அடிப்படையில் கணினியின் கர்சர் மற்றும் கீபோர்டு கட்டுப்படுத்தப்படும். சுமார் ஆறு ஆண்டு காலம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்படும். இப்போதே சோதனைகள் வெற்றிகரமாக நடந்தாலும் கூட இதுபோன்ற ஒரு 'சிப்' சந்தைக்கு வர குறைந்தது 10 ஆண்டுகள் ஆகும்.

முதல்கட்ட சோதனை: இந்த ஆய்வுக்காக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்க அரசிடமிருந்து எலான் மஸ்க் அனுமதி பெற்றிருந்தார். எனவே பக்கவாதம் பாதிக்கப்பட்ட நபர்களிடத்தில் ஆய்வு தொடங்கப்பட்டது. அதன்படி கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த சிப் முதன் முதலில் வெற்றிகரமாக மனிதருக்கு பொருத்தப்பட்டது என்றும், அவர் தற்போது குணமடைந்து வருகிறார் எனவும் எலான் மஸ்க் கூறியுள்ளார். இந்த சோதனை இறுதியானது அல்ல. இது ஓரு ஆரம்பக்கட்ட சோதனை மட்டுமே. இருப்பினும் இது வெற்றி பெற்றிருக்கிறது.
இதனை எலான் மஸ்க் x சோஷியல் மீடியா தளத்தில் பதிவிட்டுள்ளார். ஏற்கெனவே அவர் குரங்கு உள்ளிட்ட விலங்குகளை கொண்டு இந்த சோதனையை மேற்கொண்டிருந்தார். இதன் தொடர்ச்சியாக முதல் முதலாக மனிதர்களை இதில் பயன்படுத்தியிருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. இந்த முதல்கட்ட வெற்றி என்பது மனித குலத்திற்கு மிகப்பெரிய வரமாக அமையும் என அறிவியலாளர்கள் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்கள்.
பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிப் பொருத்துவதன் மூலம் அவர்களால் எழுந்து நடக்க முடியும். மட்டுமல்லாது மூளையிலிருந்து வரும் சமிஞ்சைகளை பயன்படுத்தி அவர்களால் கம்ப்யூட்டரையும் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications