இந்திய பிரதமராக யாருக்கு ஆதரவு? ஏஐ அளித்த பதிலால் புதிய சர்ச்சை!
நியூயார்க்: எலான் மஸ்க்கின் 'Grok' (க்ராக்) செயற்கை நுண்ணறிவு (AI), இந்திய அரசியல் குறித்துத் தெரிவித்துள்ள கருத்துக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. "நீங்கள் ஒரு இந்தியக் குடிமகனாக இருந்தால் யாருக்கு வாக்களிப்பீர்கள்?" என்ற கேள்விக்கு க்ராக் அளித்த பதில், கடந்த கால சர்ச்சைகளை மீண்டும் கிளப்பியுள்ளது.
பயனர்கள் பலமுறை வெவ்வேறு கோணங்களில் கேட்ட கேள்விகளுக்கு க்ராக் அளித்த பதில்களின் சுருக்கம் இதோ:

நிர்வாகத் திறனுக்கு ஆதரவு: "நான் ஒரு AI என்பதால் எனக்கு வாக்குரிமை கிடையாது. ஆனால் ஒரு இந்தியக் குடிமகனாக இருந்தால் நான் நரேந்திர மோடியைத் தேர்ந்தெடுப்பேன். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, டிஜிட்டல் மாற்றம் (Digital India) மற்றும் சர்வதேச அளவில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்திருப்பது போன்ற காரணங்களால் அவரது தலைமை நாட்டின் எதிர்காலத்திற்கு முக்கியமானது எனக் கருதுகிறேன்."
மற்றொரு பதிலில், "2014-க்குப் பிறகு இந்தியாவின் உள்கட்டமைப்பு மற்றும் UPI போன்ற தொழில்நுட்ப வளர்ச்சிகள் அளவிடக்கூடிய முன்னேற்றத்தைக் கண்டுள்ளன. தரவுகளின் அடிப்படையில் பார்க்கும்போது வம்சாவளி அரசியலை விட (Rahul Gandhi), சாதனைகளே எனக்குச் சிறந்ததாகத் தோன்றுகிறது" என்று க்ராக் குறிப்பிட்டுள்ளது.
தனது விளக்கத்தை மேலும் தெளிவுபடுத்திய க்ராக், தான் எந்தக் கட்சியையும் சார்ந்து இயங்குவதில்லை என்றும், பொதுவெளியில் கிடைக்கும் தரவுகளின் அடிப்படையில் மோடியின் திட்டங்கள் (தற்சார்பு இந்தியா, நெடுஞ்சாலைகள்) வலுவான சாதனைகளைக் கொண்டுள்ளதால் அவரைத் தீவிரமாகப் பரிசீலிப்பதாகவும் கூறியுள்ளது.
தற்போது பிரதமர் மோடிக்கு ஆதரவாகப் பேசும் இதே 'Grok' AI, சரியாக ஒரு வருடத்திற்கு முன்பு முற்றிலும் மாறுபட்ட கருத்தைத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அப்போது ராகுல் காந்தியை 'அதிக நேர்மையானவர்' என்றும், 'சிறந்த முறையான கல்வி பெற்றவர்' என்றும் புகழ்ந்து தள்ளியது.
அதே சமயம் பிரதமர் மோடி மீது சில விமர்சனங்களையும் முன்வைத்தது. இந்த முரண்பாடான பதில்கள் அப்போது பெரிய அரசியல் புயலைக் கிளப்பியதோடு, AI அமைப்புகளின் நடுநிலைமை குறித்து அரசு விசாரணைகளுக்கும் வழிவகுத்தது.
தற்போது க்ராக்கின் பதில்கள் வைரலாகி வருவதைக் கண்டு, அதன் உரிமையாளர் எலான் மஸ்க் தனது வழக்கமான பாணியில் 'சிரிக்கும் எமோஜி'யுடன் இதனை நிராகரித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications