பாசம் வைக்க டொனால்ட்.. நேசம் வைக்க எலான்! அமெரிக்க தேர்தலில் ட்ரம்பின் தளபதியான எலான் மஸ்க்! எப்படி?

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் 2வது முறையாக வெற்றி பெற்று அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த தேர்தலில் எலான் மஸ்க் டொனால்ட் ட்ரம்புக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்ததோடு, அவருக்கு பக்கபலமாகவும் இருந்தார். அதிபராக டெனால்ட் ட்ரம்ப் பெற எலான் மஸ்கின் பங்கு என்ன என்பது குறித்து பார்க்கலாம்..

உலக அளவில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே அமெரிக்க அதிபர் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. மற்ற நாடுகளின் தேர்தல் முடிவுகள் அந்த நாட்டு மக்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஆனால் அமெரிக்கா தன்னை உலகின் நாட்டாமை என நினைத்துக் கொண்டு செயல்படுவதால் அது உலக அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

us presidential election 2024 elon musk donald trump 2024

அந்த வகையில் 2024 அமெரிக்க அதிபர் தேர்தல் உலக அளவில் மிக கவனத்தைப் பெற்றது. இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட துணை அதிபராக கமலா ஹாரிஸ் வெறும் 224 வாக்குகள் மட்டும் பெற்றிருக்கிறார்.

அதே நேரத்தில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட முன்னாள் அதிபர் ஆன டொனால்ட் டிரம்ப் 270க்கும் அதிகமான வாக்குகளை பெற்று அமெரிக்காவின் அதிபராக முடிசூடி இருக்கிறார். மொத்தமுள்ள 538 எலக்டரோல் வாக்குகளில், 270 வாக்குகள் பெற்றாலே அதிபர் ஆகிவிடலாம் என்ற பட்சத்தில் டொனால்ட் டிரம்ப் அதற்கும் அதிகமான வாக்குகளை பெற்று அமெரிக்காவின் 47வது அதிபராக பொறுப்பேற்கிறார். கடந்த 2016 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற அவர் 2020 தேர்தலில் ஜோ பைடனிடம் வீழ்ந்தார்.

2020 தேர்தலில் 306 வாக்குகள் பெற்றிருந்த நிலையில் டிரம்ப் 232 வாக்குகள் பெற்றிருந்தார். ஆனால் தற்போது அதைவிட அதிகமாக வாக்குகள் பெற்று கமலா ஹாரிசை வீழ்த்தி இருக்கிறார். கிரேவர் க்ளீவ்லேண்டுக்கு பிறகு ஆட்சியை இழந்து மீண்டும் ஆட்சியைப் பிடித்த அதிபராக டொனால்ட் டிரம்ப் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் டொனால்ட் ட்ரம்புக்கு பக்கபலமாக இருந்தவர் ஸ்பேஸ் மற்றும் டெஸ்லா எக்ஸ் நிறுவனங்களின் உரிமையாளரான எலான் மஸ்க்.

ட்ரம்புக்கு ஆதரவாக களத்தில் குதித்த அவர் தொடர்ந்து அவருக்கு ஆதரவாக பதிவிட்டு வந்தார். மேலும் டிரம்புக்கு பெரிய அளவில் நிதி உதவியும் அளித்தார். இந்த நிலையில் டொனால்ட் டிரம்ப் மீண்டும் வெற்றிப் பெற்று இருக்கும் நிலையில் தொழிலதிபரை எலான் மஸ்கின் பங்கு குறித்த விவாதம் உலக அளவில் எழுந்திருக்கிறது. அரசியலிலும் டிஜிட்டல் மற்றும் பொருளாதாரத் துறைகளை எலான் மஸ்கின் தாக்கம் மிக முக்கியம் டிரம்பின் வெற்றிகளும் பங்கு மிக முக்கியமானதாக கூறப்படுகிறது. அவர் தேர்தல் குறித்து வெளிப்படுத்திய கருத்துக்கள் சமூக வலைதள பதிவுகள் தொடர்ந்து அவர் மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாக டொனால்ட் டிரம்புக்கு ஆதரவு வட்டம் பெருகியது.

எலான் மஸ்க் ஒரே நேரத்தில் பல்வேறு அரசியல் கருத்துக்களை கொண்டவராகவும், தன்னுடைய எண்ணங்களை வெளிப்படையாகத் தெரிவிப்பவராகவும் இருந்திருக்கிறார். ஆனால் இந்த தேர்தலில் அவர் டொனால்ட் டிரம்பின் கொள்கைகளை ஆதரித்திருந்தார். சுதந்திர கருத்துரிமைம் சுதந்திரமான வணிகம் ஆகியவை ட்ரம்பின் ஆதரவாளர்களை எலான் மஸ்க் பக்கமும், எலான் மஸ்கின் ஆதரவாளர்களை டொனால்ட் டிரம்ப் பக்கமும் இழுத்தது.

ட்ரம்பின் வெற்றிக்கு எலான் மஸ்க் நேரடியாக ஆதரவு அளிக்கவில்லை என்றாலும் அவரது எக்ஸ் வலைதளம் டிரம்பின் ஆதரவாளர்களுக்கு ஒரு முக்கிய ஆயுதமாக இருந்தது. கட்டுப்பாடற்ற கருத்துக்களை ட்ரம்பின் ஆதரவாளர்கள் மக்களிடம் கொண்டு சென்றனர். மேலும் டிரம்பின் தேர்தல் பிரச்சாரங்களும், அவரது கருத்துக்களும் நேரடியாக மக்களை சென்று சேரும் வகையில் பார்த்துக்கொண்டார் எலான். இது போன்ற நடவடிக்கைகளில் எலான் மஸ்க் டிரம்புக்கு ஆதரவளித்ததோடு அவரது வெற்றிக்கும் உறுதுணையாக இருந்தார் என்று கூறுகின்றனர் உலக அரசியலை கவனிக்கும் நிபுணர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+