விதிகளை மதிக்கல.. பெரிய விபத்து நடந்திருக்கும்.. முதல் நாளே சர்ச்சையில் சிக்கிய டெஸ்லாவின் ரோபோ கார்
நியூயார்க்: எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனம் இப்போது தானியங்கி ரோபோ டாக்சிகளை அறிமுகம் செய்துள்ளது. இருப்பினும், முதல் நாளே அது ஏகப்பட்ட சர்ச்சைகளில் சிக்கியுள்ளது. டெஸ்லா கார் கொஞ்ச நேரத்திலேயே பல சாலை விதிகளை மீறியதாக நெட்டிசன்கள் வீடியோக்களை பரப்பி வருகிறார்கள். இந்த விவகாரத்தில் இப்போது அமெரிக்கப் போக்குவரத்து அதிகாரிகளும் விசாரணையில் இறங்கியுள்ளனர்.
அமெரிக்காவில் எலக்டிரிக் கார்கள் உற்பத்தியில் டெஸ்லா நிறுவனம் தான் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக இருக்கிறது. டெஸ்லா தொடர்ச்சியாக பல்வேறு புதுமைகளைக் கொண்டு வந்து கொண்டே இருக்கிறது. இதற்கிடையே டெஸ்லா நிறுவனம் இப்போது அடுத்த கட்டமாகத் தானியங்கி ரோபோ டாக்சிகள் அறிமுகப்படுத்தியுள்ளது.

ரோபோ டாக்சி
அங்குள்ள ஆஸ்டின் நகரில் இந்த சேவை கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால், முதல் நாளிலேயே ரோபோ டாக்சிக்கள் பல்வேறு போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாகப் புகார்கள் எழுந்துள்ளன> இது குறித்து அமெரிக்க வாகன பாதுகாப்பு அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.
சமூக வலைத்தளங்களில் இது தொடர்பான வீடியோக்கள் வெளியாகியுள்ளன. அதில் டெஸ்லா டாக்சிகள் பல்வேறு விதிகளை மீறுவது தெரிகிறது. இதையடுத்து அமெரிக்கத் தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாகம் டெஸ்லாவை தொடர்பு கொண்டு கூடுதல் தகவல்களைக் கோரியுள்ளன. அதேநேரம் இந்த விவகாரத்தில் டெஸ்லா மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்பது குறித்துத் தெளிவாகத் தெரியவில்லை.
விதி மீறல்கள்
ராப் மவுரர் என்பவர் தான் இந்த தானியங்கி டாக்ஸி குறித்த வீடியோவை எடுத்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்திருந்தார். டெஸ்லா தனது மாடல் Y கார் மூலம் டாக்சி சேவையை வழங்கியது. முதலில் டெஸ்லா ரோபோ டாக்சி இடது திரும்பும் பாதையில் நுழைந்தது. ஆனால், அந்த கார் உடனடியாக திரும்பவில்லை.. சிறிது தூரம் வலதுபுறம் திரும்பி எதிர் வாகனங்கள் வரும் ரூட்டில் சென்ற பிறகே திரும்பியது.
கிட்டதட்ட விபத்து
மேலும், ஆஸ்டன் நகரில் சாலையில் இரட்டை மஞ்சள் கோடுகள் இருந்தால் அங்கு லேன் மாறக்கூடாது. ஆனால், அந்த விதியையும் மீறி டெஸ்லா கார் லேனை திடீரென மாறியிருக்கிறது. இதனால் இன்னொரு வாகன ஓட்டி சட்டென பிரேக் பிடித்து ஹாரன் எழுப்ப வேண்டி இருந்தது. டெஸ்லாவின் இந்த செயலால் கிட்டதட்ட விபத்து நடந்திருக்கும். மேலும், மணிக்கு 30 மைல் வேகத்தில் செல்ல வேண்டிய பகுதியில், மணிக்கு 35- 39 கிமீ வேகத்தில் டெஸ்லா கார் சென்றதாகவும் சிலர் வீடியோவை பகிர்ந்தனர்.
அதேநேரம் நெட்டிசன் ஒருவர், "இது இப்போது 39 மைல் வேகத்தில் செல்கிறது. ஆனால் இது சரியானது என்றே நினைக்கிறேன். ஏனென்றால் இங்கு வேக வரம்பு 35 மைலாக இருந்தாலும் யாரும் அதைப் பின்பற்றுவதில்லை. இதனால் டெஸ்லா ரோபோ கார் மற்ற வாகனங்கள் செல்லும் வேகத்தில் செல்கிறது. விபத்துகளைத் தடுக்க இதுவே சரியான வழி என்று நினைக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
சரியும் டெஸ்லா பங்குகள்
ஏற்கனவே டிரம்ப் உடனான மோதல் காரணமாக டெஸ்லாவின் பங்குகள் கடந்த சில காலமாகவே சரிந்து வந்தன. இந்தச் சூழலில் இந்த ரோபோ டாக்சி விதிமீறல்களும் டெஸ்லாவின் நற்பெயரை டேமேஜ் செய்துவிட்டது. இதனால் டெஸ்லா பங்குகள் ஒரே நாளில் 1.4% வரை சரிந்தன.
முதல்முறை இல்லை
மறுபுறம் டெஸ்லா கார்களின் தானியங்கி டிரைவிங் சர்ச்சையில் சிக்குவது இது முதல்முறை இல்லை. ஏற்கனவே கடந்த பிப்ரவரி மாதம் தான் டெஸ்லா நிறுவனம் சுமார் 3.62 லட்சம் கார்களை திரும்பப் பெற்றிருந்தது. அதாவது டெஸ்லா கார்களின் தானியங்கி கார் சிஸ்டம் உள்ளூர் விதிகளைப் பின்பற்றுவதில்லை என புகார் எழுந்ததால் டெஸ்லா நடவடிக்கை எடுத்தது. இதற்கிடையே டெஸ்லா நிறுவனம் இப்போது மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளது.
-
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க!












Click it and Unblock the Notifications