சேட்டை புடிச்ச பையன் சார்! ஒரே ட்வீட்டில் நெட்ஃப்ளிக்ஸ் சோலியை முடித்த எலான்! பாதாளத்தில் பங்குகள்
நியூயார்க்: சமீபத்தில், தொழிலதிபர் எலான் மஸ்க் சமூக வலைதளத்தில் பதிவிட்ட ஒரே ஒரு ட்வீட்டால் நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்தின் பங்குகள் தொடர்ச்சியாக சரிந்து வருகிறது. இதன் எதிரொலியாக, உலகளவில் #CancelNetflix ஹேஷ்டேக் டிரெண்ட் ஆகி, ஆயிரக்கணக்கானோர் தங்கள் நெட்ப்ளிக்ஸ் சந்தாவை ரத்து செய்த அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர்.
உலக அளவில் பிரபலமான ஓடிடி தளமாக நெட்ப்ளிக்ஸ் உள்ளது. 100க்கும் மேற்பட்ட மொழிகளில் உலகம் முழுவதும் இந்த நிறுவனம் தங்கள் ஓடிடி சேவையை வழங்கி வருகிறது. திரைப்படங்களில் மட்டுமல்லாது, வெப் சீரிஸ்கள், சீரியல்கள், டாகுமெண்ட்ரிகள் உள்ளிட்டவைகளையும் வழங்கி வருகிறது.
இந்நிலையில், நெட்ஃப்ளிக்ஸ் மீது ஒரு மிகப்பெரிய சர்ச்சை, குழந்தைகள் பார்க்கும் அனிமேஷன் தொடரான Dead End: Paranormal Park காரணமாக கிளம்பியுள்ளது. இந்த தொடர் 2022 ஆம் ஆண்டு லண்டன் சார்லஸ் இயக்குநர் ஹாமிஷ் ஸ்டீல் மூலம் தயாரிக்கப்பட்டது.

நெட்ஃப்ளிக்ஸ்
இந்த தொடரில் LGBTQ கலாச்சாரத்தை வலியுறுத்தும் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்த சூழலில், அமெரிக்காவில் வலதுசாரி ஆதரவாளர் சார்லி கிர்க் கொல்லப்பட்டார். பின்னர், Dead End: Paranormal Park ஹாமிஷ் ஸ்டீல் சமூக வலைதளங்களில் அவரை 'நாஜி' என்று குறிப்பிட்டதால், பெரும் சர்ச்சை கிளம்பியது. இதனால் சமூக வலைதளங்களில் நெட்ஃப்ளிக்ஸ் மற்றும் அதன் தயாரிப்புகள் மீதும் விமர்சனங்கள் பரவின. குறிப்பாக சார்லி கிர்க் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்ட ஒருவரை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் பணியில் அமர்த்தியுள்ளது பெரும் விவாதமாக மாறியது.
எலான் மஸ்க்
இது மட்டுமின்றி அவர் இயக்கிய தொடரில் LGBTQ கலாச்சாரத்துக்கு ஆதரவான கருத்துகள் இடம்பெற்றிருப்பதால் தனது நெட்ஃப்ளிக்ஸ் சந்தாவை ரத்து செய்வதாக பயனர் ஒருவர் எக்ஸ் தளத்தில் எழுதியிருந்தார். இந்த ட்விட்டை ரீட்வீட் செய்த எலான் மஸ்க், தானும் தனது சமூக வலைதள பின்வரும் பயனர்களை பாதிப்பதாக கூறி நெட்ஃப்ளிக்ஸ் சந்தாவை ரத்து செய்வதை உறுதி செய்தார். இதன் பிறகு, #CancelNetflix ஹேஷ்டேக் உலகம் முழுவதும் டிரெண்டாகி, நெட்ஃப்ளிக்ஸ் சந்தா ரத்து செய்தோரின் பதிவுகள் சமூக வலைதளங்களில் பரவியது.
நெட்ஃப்ளிக்ஸ் சந்தா ரத்து
இதற்கிடையே எலான் மஸ்கின் பதிவுகளைத் தொடர்ந்து, நெட்ஃப்ளிக்ஸ் பங்குகள் கடந்த இரண்டு நாட்களாக மளமளவென சரிந்துள்ளன. அதன் பங்கு மதிப்பு 507.25 பில்லியன் டாலர்களாகக் குறைந்துள்ளது, இது நிறுவனம் சந்தையில் $5.33 பில்லியன் இழப்பை சந்தித்தது என பொருளாதார நிபுணர்கள் கணிக்கின்றனர். கடந்த ஐந்து ஆண்டுகளில், நெட்ஃப்ளிக்ஸ் பங்குகள் முதலீட்டாளர்களுக்கு 128%-க்கும் மேலான வருமானத்தை வழங்கியுள்ளன. 2024-ஆம் ஆண்டில் பங்கு 61%-க்கும் மேல் உயர்ந்தது, 2025-ஆம் ஆண்டில் 30%-க்கும் மேலான உயர்வைப் பெற்றது. இருப்பினும், கடந்த மாதம் 4.60% வீழ்ச்சி ஏற்பட்டது. இந்நிலையில், எலான் மஸ்கின் ட்வீட் புதிய சர்வதேச சர்ச்சையாக மாறியுள்ளது.
#CancelNetflix ஹேஷ்டேக்
எலான் மஸ்க் vs நெட்ஃப்ளிக்ஸ் விவகாரம், LGBTQ உரிமைகள், குழந்தைகள் பாதுகாப்பு, மற்றும் பொது பார்வையாளர்களின் கருத்து ஆகியவை தொடர்பாக சமூக வலைதளங்களில் பரபரப்பான விவாதங்களை கிளப்பியுள்ளது. லட்சக்கணக்கான பயனர்கள் கருத்து பகிர்ந்து வருகின்றனர், சிலர் சந்தாவை ரத்து செய்துள்ளனர். அதே நேரத்தில், இந்த சர்ச்சை தற்காலிகமாகவே இருக்கும் என்றும், சமூக வலைதளங்களில் சர்ச்சைகள் ஓய்ந்ததும் நெட்ஃப்ளிக்ஸ் பங்குகள் மீண்டும் மீள உயரக் கூடும் என்றும் தெரிவித்துள்ளனர் பொருளாதார நிபுணர்கள்.












Click it and Unblock the Notifications