ஏஐ வசமாகும் உலகம்? களத்தில் குதித்த எலான் மஸ்க்! சாட் ஜிபிடிக்கு போட்டியாக புது ஏஐ.. ரெடியாகும் டீம்
ஓபன் ஏஐ நிறுவனத்தை உருவாக்கியவர்களில் மஸ்க்கும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நியூயார்க்: ஓபன் ஏஐ நிறுவனத்தின் சாட் ஜிபிடிக்கு எதிராக எலான் மஸ்க் இன்னொரு ஏஐ நிறுவனத்தை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக உலகின் டாப் அறிவியலாளர்களை அழைக்க மஸ்க் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
உலகம் முழுக்க சாட் ஜிபிடி தற்போது பெரிய அளவில் கவனம் பெற்று வருகிறது. ஏஐ தொழில்நுட்பம் கொண்ட தேடுபொறி நிறுவனமான இது நாம் கேட்கும் கேள்விகள் அனைத்திற்கும் பதில் அளிக்கும். அதோடு ஏற்கனவே அளிக்கப்படும் பதில்களை வைத்து.. அது தன்னை தானே மெருகேற்றிக்கொள்ளும்.
கூகுள் போல் அல்காரிதம் அடிப்படையில் இதை ஏமாற்ற முடியாது. மாறாக இது மெய்நிகர் சிந்திக்கும் திறன் கொண்டது. அதாவது குறிப்பிட்ட எல்லை வரை சுயமாக சிந்தித்து இது பதில்களை வழங்கும். உலகம் முழுக்க உச்சத்தில் இருக்கும் ஏஐ தொழில்நுட்பத்தின் புதிய பாய்ச்சலாக இந்த சாட் ஜிபிடி பார்க்கப்படுகிறது.

சாட் ஜிபிடி
ஓபன் ஏஐ நிறுவனத்தின் மூலம் இந்த சாட் ஜிபிடி ஏஐ உருவாக்கப்பட்டது. ஓபன் ஏஐ என்பது வருமானம் சாராத நிறுவனம் ஆகும். இந்த நிறுவனத்தை உலகின் டாப் பணக்காரர்கள், அறிவியலாளர்கள் இணைந்து உருவாக்கினார்கள். இந்த ஓபன் ஏஐ தற்போது உலகின் 5வது பெரிய சூப்பர் கணினியில்தான் இயங்கிக்கொண்டு இருக்கிறது. அமெரிக்காவின் சான் பிரான்சிசுகோவில் இந்த நிறுவனம் 2015ல் தொடங்கப்பட்டது. சாம் ஆல்ட்மன், ரீட் ஹாஃப்மேன், ஜெசிகா லிவிங்ஸ்டன், எலான் மஸ்க், இல்யா சுட்ஸ்கேவர், பீட்டர் தியேல் ஆகியோர் இணைந்து இந்த நிறுவனத்தை உருவாக்கினார்கள்.

மைக்ரோசாப்ட்
மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்த நிறுவனத்தில் மட்டும் 11 பில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளது. இந்த நிலையில்தான் தற்போது உலகம் முழுக்க சாட் ஜிபிடி சக்கை போடு போட்டுகொண்டு இருக்கிறது. இந்த ஓபன் ஏஐ நிறுவனத்தின் சாட் ஜிபிடிக்கு எதிராக எலான் மஸ்க் இன்னொரு ஏஐ நிறுவனத்தை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக உலகின் டாப் அறிவியலாளர்களை அழைக்க மஸ்க் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக புதிய ரிசர்ச் டீம் ஒன்றை அவர் உருவாக்கி வருகிறாராம். இகோர் பாபுஷ்கின் என்பதும் டாப் ஏஐ ஆராய்ச்சியாளர் ஒருவரை இதற்காக பணிக்கு எடுத்துள்ளார்.

ஏஐ
இதற்கு முன்பாக கூகுளின் தாய் நிறுவனமான அல்பபெட் நிறுவனத்தின் டீப்மைண்ட் ஏஐ நிறுவனத்தில் இகோர் பாபுஷ்கின் பணியாற்றி வந்தார். அவர்தான் தற்போது மஸ்க் டீமில் இணைந்து உள்ளார். தற்போது உருவாக்கப்பட்டு உள்ள சாட் ஜிபிடி கோடிங் எழுதும், வரையும், ஆடியோ உருவாக்கும், கதை சொல்லும், கணக்கு போடும், இன்னும் கஷ்டமான டாஸ்குகளை செய்யும். இதை பார்த்து எலான் மஸ்க் கூட பாராட்டி இருந்தார். இது சிறப்பாக இருக்கிறது என்று கூறி இருந்தார். ஆனால் இந்த ஓபன் ஏஐ நிறுவனத்தில் இருந்து 2018லேயே மஸ்க் வெளியேறிவிட்டார்.

கருத்து வேறுபாடு
சில கருத்து வேறுபாடு காரணமாக அவர் வெளியேறிவிட்டதாக கூறப்படுகிறது. அதேபோல் அவருடைய டெஸ்லா நிறுவனத்திற்காக தனியாக ஏஐ ஒன்றை உருவாக்கி வந்தார். இதற்காக அவர் ஆட்களை நியமனம் செய்து வந்தார். இதனால் இந்த ஓபன் ஏஐ நிறுவனத்திற்காக அவர் சரியாக இயங்க மாட்டார் என்ற கருத்து நிலவியது. இதன் காரணமாக அங்கிருந்து மஸ்க் வெளியேறினார். இந்த நிலையில்தான் தற்போது சாட் ஜிபிடிக்கு போட்டியாக புதிய நிறுவனத்தை தொடங்க மஸ்க் முடிவு செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications