Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஒரேயடியாக ஓரம் கட்டப்பட்ட சாம் ஆல்ட்மேன்! ஓபன்ஏஐ எடுத்த திடீர் முடிவு! புதிய சிஇஓவான எம்மெட் ஷியர்

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: 'ஓபன்ஏஐ' நிறுவனத்தின் இடைக்கால சிஇஓவாக மிரா முராட்டி நியமிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த நியமனம் நடந்து 3 நாட்களுக்குள் தற்போது இந்த பொறுப்புக்கு ட்விட்ச் இணை நிறுவனர் 'எம்மெட் ஷியர்' நியமிக்கப்பட்டிருக்கிறார். இந்த நியமனம் சாம் ஆல்ட்மேனை ஒரேயடியாக ஓரம்கட்ட செய்திருக்கிறது.

மனிதர்கள் கண்டுபிடித்ததில் மிகவும் அற்புதமான விஷயங்களில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமும் ஒன்று. இதை அனைத்து தரப்பு மக்களுக்கும் கொண்டு சேர்க்க உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரரான எலான் மஸ்க், சாம் ஆல்ட்மேன் ஆகியோர் கடந்த 2015ல் ஒன்று சேர்ந்து OpenAI எனும் தனியார் செயற்கை நுண்ணறிவு தனியார் ஆராய்ச்சி ஆய்வகத்தை தொடங்கினார்கள். இப்படியாகதான் கடந்த 2022ம் ஆண்டு ChatGPT களத்திற்கு வருகிறது.

 Emmett Shear named OpenAIs new CEO, ousting Sam Altman

மனிதர்களின் வேலையை எளிதாக்கும் என்று சொல்லப்படும் இது, எதிர்காலத்தில் மனிதர்களின் வேலையை பறிக்கவும் வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. இதனை சாம் ஆல்ட்மேன்தான் கண்டுபிடித்தார். இதன் பணிகள், பயன்பாடுகள், எப்படி பயன்படுத்துவது? எதுவெல்லாம் செய்யும், இதில் இருக்கும் பிரச்னைகள் என அனைத்தையும் உலகுக்கு தெரியப்படுத்த நாடு நாடாக சுற்றி பயணித்தார். இப்படி இருக்கையில் ஆல்ட்மேன் மீது எழுந்த சர்ச்சைகள் காரணமாக அவர் சிஇஓ பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார். இது தொழில்நுட்ப உலகில் பேருபொருளானது.

இதனையடுத்து சிஇஓ பொறுப்புக்கு 34 வயதான மிரா முராட்டி என்பவர் நியமிக்கப்பட்டார். இவர் இடைக்கால சிஇஓவாக செயல்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால் ஓபன் ஏஐ-ன் முதலீட்டாளர்கள் பலரும் ஆல்ட்மேனை மீண்டும் சிஇஓவாக ஆக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கைகள் ஒருபுறம் தீவிரமடைந்து வந்த நிலையில், மறுபுறம் அதிரடி அறிவிப்பு ஒன்று வெளியானது. அதாவது ஓபன்ஏஐ நிறுவனத்தின் புதிய சிஇஒவாக 'எம்மெட் ஷியர்' நியமிக்கப்பட்டிருக்கிறார் என்பதுதான் அந்த அறிவிப்பு.

மிரா முராட்டி நியமிக்கப்பட்ட மூன்று நாட்களுக்குள் புதிய சிஇஓவாக ஷியர் நியமிக்கப்பட்டிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர் அமேசானின் வீடியோ ஸ்ட்ரீமிங் சேவையான 'ட்விச்சின்' சிஇஓவாக இருந்தார். ஆனால் சமீபத்தில்தான் இந்த பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து ஓபன்ஏஐ-ன் புதிய சிஇஓவாக நியமிக்கப்பட்டிருக்கிறார். இதனை ஓபன்ஏஐ இணை நிறுவனர் இலியா சுட்ஸ்கேவர் உறுதி செய்திருக்கிறார். நேற்றிரவு அதன் ஊழியர்களுக்கு அனுப்பப்பட்ட மெயிலில் இந்த தகவல் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இந்த நியமனம் குறித்து அதிகாரிகள் கூறுகையில், "தொழில்நுட்ப உலகின் மிகவும் முன்னோடியாக இருக்கும் பலரும் எம்மெட் ஷியரை பரிந்துரைத்ததன் பேரில்தான் இந்த நியமனம் நடந்திருக்கிறது" என்று கூறியுள்ளனர். ஓபன்ஏஐ நிறுவனத்தில் அடுத்தடுத்து சிஇஓக்கள் மாற்றப்படுவது தொழில்நுட்ப உலகில் விவாதத்தை கிளப்பியிருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+