தாறுமாறாக உயரப் போகுது தங்கம்.. ட்ரம்ப் நினைச்சு கூட பாத்துருக்க மாட்டார்.. திருப்பி அடித்த ஐரோப்பா!
நியூயார்க்: அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற நிலையில் பதிலுக்கு பதில் வரிவிதிப்பை கொண்டு வந்துள்ளார். உலக அளவில் வர்த்தக போர் தீவிரமடைந்திருக்கும் நிலையில் சீனா, கனடா, மெக்சிகோ உள்ளிட்ட நாடுகளின் மீது வரி விதிப்பு ஏப்ரல் இரண்டாம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இந்த நிலையில் டொனால்ட் ட்ரம்புக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்க பொருட்களுக்கு வரி விதிப்பதாக ஐரோப்பிய யூனியன் அதிரடியாக அறிவித்துள்ளது.
அதிபர் தேர்தல் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்ற பிறகு, அவரது நடவடிக்கைகள் பல உலக நாடுகளுக்கு எதிராக இருப்பதாகவே குற்றம் சாட்டப்படுகிறது. பல நாட்டு தலைவர்கள் உடன் நட்பு கொண்டிருந்தாலும் வரி விதிப்பு உள்ளிட்ட விவகாரங்களில் இந்தியா கூட எதிரி எனக் கூட பேசி இருக்கிறார்.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க பயணம் மேற்கொண்ட நிலையில், வெள்ளை மாளிகையில் டொனால்ட் ட்ரம்பை சந்தித்து பேசினார்.
அப்போது வர்த்தகம், வரி விதிப்பு, எண்ணெய் மற்றும் எரிவாயு இறக்குமதி ஆகியவை குறித்து இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் வரிவிதிப்பு குறித்து பேசிய ட்ரம்ப்," இந்தியா எவ்வளவு வரி விதிக்கிறதோ அதே அளவு வரியை நாங்களும் விதிப்போம் என கூறி இருந்தார். இந்த நிலையில் ஏப்ரல் 2ஆம் தேதி முதல் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு அந்த நாடுகள் அமெரிக்க பொருட்கள் மீது விரிக்கும் அதே அளவு வரி விதிக்கப்படும் என அதிரடியாக அறிவித்திருக்கிறார் டொனால்ட் டிரம்ப்.
இதற்கு சீனா, கனடா, மெக்ஸிகோ உள்ளிட்ட பல நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறது. அதே நேரத்தில் இந்தியா இதுவரை இந்த விவகாரம் தொடர்பாக வாய் திறக்கவில்லை. இந்த நிலையில் புதன்கிழமை முதல் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கு கொடுத்திருந்த வரிவிலக்குகள் சலுகைகள் முடிவுக்கு வந்தது. இதை அடுத்து ஸ்டீல் மற்றும் அலுமினிய இறக்குமதிக்கு 25% வரியை விதித்துள்ளது.
இந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தற்போது 26 பில்லியன் யூரோ மதிப்பிலான அமெரிக்க பொருட்களுக்கு வரி விதிக்கும் முடிவை ஐரோப்பிய யூனியன் கையில் எடுத்துள்ளது. இது தொடர்பாக புதன்கிழமை ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஐரோப்பிய நாட்டில் தயாராகும் ஸ்டீல் மற்றும் அலுமினிய பொருட்களுக்கு அமெரிக்கா தொடர்ந்து வரி விதித்துள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தற்போது நடைமுறை இருக்கும் வரி விலக்கு சலுகைகள் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் ரத்து செய்யப்படுகிறது. ஏப்ரல் மாத மத்தியில் அமெரிக்க பொருட்களை குறி வைத்து கூடுதல் வரிவிதிப்பு நடவடிக்கைகளை அறிவிக்கவும் தயாராகி வருவதாக கூறியுள்ளது.
ஏற்கனவே அட்லாண்டிக் கடலுக்கு ஒரு பகுதியில் வர்த்தக போர் வெடித்திருக்கும் நிலையில் மறுமுனையிலும் வர்த்தக போர் வெடித்திருக்கிறது. இது தொடர்பாக பேசியுள்ள ஐரோப்பிய கமிஷனின் தலைவர் ஊர்சுலா வான் ஒன் ஐரோப்பிய ஒன்றியத்தின் பதிலடி அமெரிக்காவில் அறிவிப்புக்கு சமமான பொருளாதார தாக்கத்தை கொண்டிருக்கும். இந்த வரிவிதிப்பு நடவடிக்கைகள் இரண்டு கட்டங்களாக அமல்படுத்தப்படும். ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் கட்டமும், முழுமையான வரி விதிப்பு அமலாக்கம் ஏப்ரல் 13-ஆம் தேதியும் நடைமுறைக்கு வரும். என கூறியுள்லார். ஐரோப்பிய யூனியனின் இந்த நடவடிக்கையால் தங்கம் முதல் பங்குச்சந்தை வரையில் அனைத்து வணிகமும் பெரும் தடுமாற்றத்தை எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐரோப்பிய யூனியனை பொருத்தவரை அமெரிக்காவுக்கு ஆதரவாகவே இதுவரை பல நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது. வரிவிதிப்பு என்று இல்லாமல் முதன் முறையாக அமெரிக்காவுக்கும் ட்ரம்புக்கும் எதிராக ஐரோப்பிய யூனியன் களமிறங்கி இருப்பதை உலக நாடுகள் ஆச்சரியத்துடன் பார்க்கின்றன..












Click it and Unblock the Notifications