Facebook: "பேஸ்புக்" பெயர் மாறியது.. இனிமேல் இந்த பெயரில்தான் இயங்கும்.. வெளியானது காரணம்?
பேஸ்புக் பெயர் மெட்டா என்று மாற்றம் செய்யப்படுகிறது
நியூயார்க்: ஃபேஸ்புக்கின் பெயர் மாற்றப்பட்டுள்ளதாகவும், மெட்டா என்பது தற்போதைய புதிய பெயர் என்றும் அதன் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் அறிவித்துள்ளார்.
இன்றைய காலகட்டத்தில் சோஷியல் மீடியா என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது.. இதில் மிக மிக முக்கியமானது ஃபேஸ்புக்..
கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது.. நாளுக்கு நாள் இதன் பயன்பாடுகளும், வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே வருகிறது..

பெயர் மாற்றம்
எனினும், இதன் தரத்தை மேம்படுத்தும் பொருட்டு, இந்நிறுவனத்தின் பெயரை மாற்ற திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி வந்த நிலையில், திடீரென ஒரு அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஃபேஸ்புக் நிறுவனத்தின் மாநாடு அதன் செயல் அதிகாரி மார்க் ஜூக்கர் பெர்க் தலைமையில் நடந்தபோது, இப்படி ஒரு அறிவிப்பை அவர் வெளியிட்டார். ஃபேஸ்புக் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்...

அத்தியாயம்
அதில் சமூக வலைதளங்களில் முன்னணி நிறுவனமாக விளங்கும் பேஸ்புக்கின் பெயர் "மெட்டா" என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது... உலகம் முழுவதும் நிலவி வரும் சமூக பிரச்னைகளுடன் போராடி கற்றுக் கொண்டதை அடிப்படையாக கொண்டு, இப்போது புதிய அத்தியாயத்தை உருவாக்கி வருகிறோம்... அதே சமயம், தங்களுடைய மேலான சேவையும், வாடிக்கையாளர் மீதான அக்கறையும் மாறவில்லை..

அப்ளிகேஷன்கள்
அப்ளிகேஷன்கள் மற்றும் அதன் பிராண்டுகள் அப்படியே இருக்கும். அதில் எந்தவித மாற்றமும் இல்லை.. இந்த நொடி முதல் மெட்டாவெர்ஸ் தான் எங்களின் முதல் இலக்கு, தவிர பேஸ்புக் அல்ல.. அடுத்த 10 ஆண்டுகளில் பல கோடி பயனாளர்கள் இருப்பார்கள்" என்று நம்பிக்கை தெரிவித்தார். ஃபேஸ்புக், மெய்நிகர் ஆன்லைன் உலகமான மெட்டாவெர்ஸ் என்ற அடுத்தக்கட்டத்துக்கு தன்னை திசை திரப்பி வருகிறது.. அதற்காகவே இப்படி ஒரு புது பெயரையும் மாற்றி அறிவித்துள்ளது..

பிரபலம்
ஏற்கனவே இப்படி பேஸ்புக் நிறுவனம் தன்னுடைய பெயரை மாற்றியிருக்கிறது.. ஆரம்பத்தில் இதற்கு "தி ஃபேஸ்புக்" என்றுதான் பெயர்.. அதற்கு பிறகு "பேஸ்புக்" என்று மறியது.. இப்போது இன்னொரு பெயர் மெட்டாவும் இணைந்துள்ளது.. ஃபேஸ்புக் பெயர் இப்போது எப்படி ஃபேமஸ் ஆக உள்ளதோ, அதே அளவுக்கு மெட்டாவும் பிரபலமடையும் மக்களிடம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications