"ஆணுறைகள்".. அத்தனை பேர் கூடியிருக்க.. மொத்தமாக குவித்து.. மலைத்து போன மக்கள்.. ஆமா, அதென்ன பேஷன் ஷோ
மிலன் பேஷன் ஷொவை இந்த வாரம் வித்தியாசமாக நடத்த டீசல் செய்த முயற்சிதான் இது.
நியூயார்க்: அமெரிக்காவில் சுமார் 2 லட்சம் ஆணுறை குவியலுக்கு மத்தியில் பேஷன் ஷோ நடந்திருக்கிறது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள நிலையில் நெட்டிசன்கள் மத்தியில் இது பேசுபொருளாகியுள்ளது.
ஒவ்வொரு நாளும் சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமான மக்களுக்கு பாலியல் நோய்கள் பரப்பப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த நோய்கள் பெரும்பாலும் அறிகுறியற்றதாக இருப்பதால் மக்களால் இதனை சரியாக அடையாளம் காண முடிவதில்லை. எனவே பாதுகாப்பான செக்ஸ் குறித்து அரசாங்கம் தன் நாட்டு மக்களுக்கு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இப்படி இருக்கையில் ஒரே இடத்தில் சுமார் 2 லட்சம் டன் ஆணுறையை கொட்டி அதற்கு நடுவில் பேஷன் ஷோ நடத்தப்பட்டிருக்கிறது. 'டீசல்' நிறுவனம்தான் இந்த பேஷன் ஷோவை ஏற்பாடு செய்திருக்கிறது பாதுகாப்பான செக்ஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த பேஷன் ஷோ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக நிறுவனம் கூறியுள்ளது.

மிலன் பேஷன் ஷோ
இந்நிறுவனத்தின் சார்ப்பில் விரைவில் கருத்தடை 'கேப்சூல்' ஒன்று ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கிறது. இது டியூரெக்ஸ் ஆணுறையுடன் சேர்த்து வழங்கப்படும். இந்நிலையில் இது தொடர்பான விளம்பரத்திற்காகவும் இவ்வாறு பேஷன் ஷோ ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இந்த யோசனையை டீசல் நிறுவனத்தை சேர்ந்த Krzysztof J Lukasik முன்வைத்திருந்தார். இது குறித்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறுகையில், "நாங்கள் டீசல் நிறுவனத்தின் சார்பில் கருத்தடை சாதனங்களை அறிமுகப்படுத்த இருக்கிறோம். பாதுகாப்பாக இருங்கள், முக்கியமாக மகிழ்ச்சியாக இருங்கள்" என்று கூறியுள்ளனர்.

பாதுகாப்பான செக்ஸ்
வரும் ஏப்ரல் மாதத்தில் டீல் திட்டமிட்டவாறு தனது கேப்சூலை அறிமுகப்படுத்துகிறது. முதற்கட்டமாக 3 ஆணுறை பேக்களை விநியோகிக்கிறது. பாலியல் தேர்வு மீது உள்ள ஜனநாயகத்தை பிரிதிநிதிதுவப்படும் நோக்கில் இவ்வாறு பேஷன் ஷோக்கள் நடத்தப்படுவதாகவும் டீசல் கூறியுள்ளது. இத்தாலியை சேர்ந்த டீசல் நிறுவனம் டெனிம், யூட்டிலிட்டி, பாப் போன்ற துணை பிராண்டுகளை வைத்திருக்கிறது.

இதர நிறுவனங்கள்
மட்டுமல்லாது கைவினைப்பொருட்களையும் விற்பனை செய்து வருகிறது. உலகம் முழுவதும் டீசல் பிராண்டுக்கு என பிரத்யேகமான ரசிகர் பட்டாலம் இருக்கிறது. எனவே தற்போது அறிமுகப்படுத்த உள்ள கருத்தடை சாதனங்களும் பேமஸாகும் என்று டீசல் நம்பிக்கை தெரிவித்திருக்கிறது. வழக்கமாக பேஷன் ஷோக்கள் மிகவும் பிரமாண்டமான ஏற்பாடுகளுடன் இருக்கும். ஆனால், தற்போது நடந்த இந்த பேஷன் ஷோக்களுக்கு என 2 லட்சம் ஆணுறை பெட்டிகளும், சில ஃபோக்கஸ் லைட்டுகள் மட்டுமே தேவையாக இருந்துள்ளன.

வித்தியாசமான ஷோ
ஷோவில் பங்கேற்றவர்கள் வித்தியாசமான உடைகளில் வலம் வந்தனர். இந்த முயற்சி பேஷன் ஷோ உலகில் புதிய திருப்பமாக பார்க்கப்படுகிறது. இனி வரும் காலங்களிலும் இதேபோன்று விழிப்புணர்வு பேஷன் ஷோக்கள் நடத்தப்படலாம். இந்த ஷோ பிப்ரவரி 21 முதல் 27ம் தேதி வரை நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications