மனிதர்களே இல்லாமல் தானாக ஹேக் செய்யும் சூப்பர் AI... உலக நாடுகளுக்கு FBI, கூகுள் அதிரடி எச்சரிக்கை!

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: உலகம் முழுவதும் செயற்கை நுண்ணறிவு எனப்படும் AI தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வருகிறது. நமது அன்றாட வேலைகளை எளிதாக்க வந்த இந்த AI தொழில்நுட்பத்தை, இப்போது சைபர் குற்றவாளிகள் தங்களின் மிகப்பெரிய ஆயுதமாக மாற்றத் தொடங்கியுள்ளனர்.

இதுவரை இ-மெயில்களை எழுதவும், சிறிய கோடிங் செய்யவும் மட்டுமே AIஐப் பயன்படுத்தி வந்த மக்கள், இப்போது மனிதர்களின் எந்த உதவியும் இல்லாமல் தானாகவே செயல்பட்டு பெரிய நிறுவனங்களின் கணினிகளை உடைக்கும் ஏஜென்டிக் AI கருவிகளைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். இது குறித்து அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான FBI மற்றும் GTIG எனப்படும் கூகுள் நிறுவனத்தின் நுண்ணறிவு பிரிவு மிக முக்கியமான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளன.

usa new york america

என்ன நடக்கிறது? FBI மற்றும் கூகுள் சொல்வது என்ன?

கடந்த நவம்பர் 13-ம் தேதி FBI அமைப்பு ஒரு அவசர எச்சரிக்கை அறிக்கையை வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து நவம்பர் 16-ம் தேதி கூகுள் நிறுவனமும் தனது AI Threat Tracker ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த இரண்டு அறிக்கைகளிலும் கூறப்பட்டுள்ள பொதுவான விஷயம் இதுதான்.. சைபர் தாக்குதல்களில் AI ஒரு புதிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. இனி மனிதர்கள் இல்லாமலேயே AI தானாகத் தாக்குதல்களை நடத்தும் காலம் தொடங்கிவிட்டது

குறிப்பாக, ARTEX என்ற ஓபன்-சோர்ஸ் AI கருவியை ஹேக்கர்கள் தவறாகப் பயன்படுத்துவதை FBI கண்டுபிடித்துள்ளது. அதேபோல கூகுள் நிறுவனம் exploit_agent, CAIRN, PentAGI போன்ற AI கருவிகள் மூலம் நிஜ உலகில் சைபர் தாக்குதல்கள் நடத்தப்படுவதை முதன்முறையாக ஆதாரத்துடன் கண்டறிந்துள்ளது.

இந்த AI தாக்குதல்கள் எப்படி வேலை செய்கின்றன?

சாதாரணமாக ஒரு ஹேக்கர் ஒரு நிறுவனத்தின் இணையதளத்தையோ அல்லது வங்கி சர்வரையோ ஹேக் செய்ய வேண்டும் என்றால், பல நாட்கள் அல்லது வாரங்கள் உட்கார்ந்து அந்த சிஸ்டத்தில் என்ன ஓட்டை இருக்கிறது என்று தேட வேண்டும். பிறகு அதற்கேற்ற வைரஸ் கோடிங்கை எழுதி உள்ளே நுழைய வேண்டும். ஆனால், இந்தப் புதிய AI கருவிகள் அந்த வேலையை மிக எளிதாக்கிவிட்டன:

சாஃப்ட்வேர் நிறுவனங்கள் தங்கள் சிஸ்டத்தில் உள்ள பாதுகாப்புக் குறைபாடுகளைச் சரிசெய்ய அவ்வப்போது அப்டேட் Patch வெளியிடுவார்கள். இப்படிப்பட்ட நிலையில் இந்த AI கருவிகள், அப்டேட்டுக்கு முந்தைய கோடிங்கையும் பிந்தைய கோடிங்கையும் ஒப்பிட்டுப் பார்த்து.. "ஓஹோ, இந்த இடத்தில்தான் ஓட்டை இருந்திருக்கிறது" என்பதை நொடியில் கண்டுபிடித்துவிடுகின்றன. உடனே, அப்டேட் செய்யாத பழைய சர்வர்களைத் தாக்குவதற்கான வைரஸ் கோடிங்கை அதுவே எழுதித் தாக்குதலைத் தொடங்கிவிடுகிறது.

ஒரு ஹேக்கர் AI-யிடம் "இந்த நிறுவனத்தின் டேட்டாவை எடு" என்று சாதாரண மொழியில் prompt கொடுத்தால் போதும். உள்ளே இருக்கும் பல AI ஏஜென்ட்கள் ஒரே நேரத்தில் செயல்பட்டு, நெட்வொர்க்கிற்குள் நுழைந்து, முழு கட்டுப்பாட்டையும் கைப்பற்ற வெறும் 3 மணி நேரத்திற்கும் குறைவான நேரமே எடுத்துக்கொள்கின்றன.

முன்பெல்லாம் மிகப்பெரிய தொழில்நுட்ப அறிவு கொண்டவர்களால் மட்டுமே நடத்த முடிந்த சிக்கலான சைபர் தாக்குதல்களை, இப்போது அடிப்படை அறிவு இல்லாத சாதாரண குற்றவாளிகள் கூட இந்த AI கருவிகளை வைத்து எளிதாக நடத்த முடிகிறது.

இதுவரை நடந்த முக்கியத் தாக்குதல்கள் என்ன?

இந்த AI கருவிகளைப் பயன்படுத்தி கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் அரசு அலுவலகங்கள், வங்கிகள், எரிசக்தி, தொலைத்தொடர்பு மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

ConnectWise என்ற கிளவுட் பேக்கப் நிறுவனத்தின் மூலம் புகுந்த ஹேக்கர்கள், ARTEX என்ற AI கருவியைப் பயன்படுத்தி சுமார் 2,250-க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் மைக்ரோசாஃப்ட் கணக்குகளுக்குள் நுழைய முயற்சித்துள்ளனர்.

தென் கொரியாவில் உள்ள நிதி நிறுவனங்களை இதே AI கருவி மூலம் தாக்கிய கும்பல், சுமார் 67,000 பேரின் தனிப்பட்ட தகவல்களைத் திருடியுள்ளது.

இது தவிர, 'LLMJacking' என்ற புதிய மோசடியையும் கூகுள் சுட்டிக்காட்டியுள்ளது. அதாவது, பெரிய நிறுவனங்களின் கிளவுட் பாஸ்வேர்டுகளைத் திருடி, அவர்களின் பணத்தில் AI சேவைகளைப் பயன்படுத்துவது. இதனால் பாதிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு ஒரே நாளில் 1 லட்சம் டாலர் முதல் 10 லட்சம் டாலர் வரை (இந்திய மதிப்பில் பல கோடி ரூபாய்) பில் வந்து அதிர்ச்சியளித்துள்ளது.

சமீபத்திய ஹேக்கிற்கும் இதற்கும் தொடர்பு உள்ளதா?

கடந்த சில நாட்களாக மைக்ரோசாஃப்ட், ஆப்பிள் சில வங்கி சேவைகள் மற்றும் அமெரிக்க விமானப் போக்குவரத்துத் துறை ஆகியவற்றின் இணைய சேவைகளில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு முடங்கின. இதற்கு இந்த AI சைபர் தாக்குதல்கள்தான் காரணம் என்று சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவின. ஆனால், "அந்தத் தொழில்நுட்பக் கோளாறுகளுக்கும் இந்த AI சைபர் தாக்குதல்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை" என்று FBI மற்றும் சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர். அவை வழக்கமான சர்வர் பராமரிப்பு மற்றும் அப்டேட் சிக்கல்களால் ஏற்பட்டவை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+