மனிதன் காணாத பிரபஞ்ச புகைப்படம்.. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி போட்டோ வெளியீடு!
நியூயார்க்: உலகம் முழுக்க பலரால் எதிர்பார்க்கப்பட்ட ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி எடுத்த முதல் புகைப்படம் இன்று வெளியிடப்பட்டது. பல லட்சம் விண்மீன் மண்டலம், நட்சத்திரங்கள், கிரகங்களை படம் பிடித்து ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி அனுப்பி உள்ளது
Recommended Video
மனித குல வரலாற்றில் எப்போதும் தொலைநோக்கிகளுக்கு முக்கியமான இடம் உண்டு. இப்போது என்று இல்லை.. ஆதிகாலம் முதலே மனிதன் பல விதமான தொலைநோக்கிகளை கொண்டு உலகை ஆராய்ந்து வந்து இருக்கிறான்.
மனிதன் விண்வெளி மீது கொண்ட ஈர்ப்பில் சிறிய அளவில் இருந்து தொலைநோக்கி உருவாக்கி படிப்படியாக வளர்ந்து தற்போது உலகம் முழுக்க பல நாடுகளில் ராட்சஸ தொலைநோக்கிகள் இருக்கின்றன. அதில் நாசா அனுப்பிய விண்வெளி தொலைநோக்கியான Hubble தொலைநோக்கிக்கு மிக முக்கிய இடம் இருந்தது.

தொலைநோக்கி
1990இல் அனுப்பப்பட்ட இந்த தொலைநோக்கி விண்ணில் மிதக்கும் உலகின் பெரிய தொலைநோக்கியாக இருந்தது. ஆனால் பல ஆண்டுகள் ஆனதாலும், இதன் பல்வேறு பாகங்கள் செயல் இழக்க தொடங்கியதால், ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி உருவாக்கப்பட்டது. நாசா மற்றும் ஐரோப்பா விண்வெளி ஆராய்ச்சி மையம் மற்றும் கனடா ஆராய்ச்சி மையம் இணைந்து இந்த The James Webb Space Telescope (JWST) ஐ உருவாக்கி உள்ளது. Ariane flight VA256 ராக்கெட் மூலம் கடந்த வருடம் டிசம்பர் மாதம் விண்ணில் இந்த தொலைநோக்கி நிலை நிறுத்தப்பட்டது.

ஜேம்ஸ் வெப்
பல மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கும் நட்சத்திரம், கிரகங்கள், அண்டங்களை இது ஆராய முடியும். உலகம் தோன்றியது எப்படி என்று இதன் மூலம் கண்டுபிடிக்க முடியும். எப்படி என்கிறீர்களா?உலகம் தோன்றிய தொடக்க காலத்தில் பல மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் இருந்த நட்சத்திரங்கள், கிரகங்களிடம் இருந்து வெளியான ஒளிகள் இப்போதும் பல மில்லியன் ஒளி ஆண்டுகளை கடந்து பயணித்துக் கொண்டுதான் இருக்கும். இவற்றைதான் படம் பிடித்து ஜேம்ஸ் வெப் அனுப்ப முடியும். அகச்சிவப்பு கதிர்கள் மூலம் இயங்க கூடியது.

ஒளி ஆண்டுகள்
உலகின் தொடக்க காலத்தில் இருந்த பல கேலக்ஸிகளை கண்டுபிடிக்கவும் இது உதவும். அகச்சிவப்பு கதிர்கள் என்பதால் இதன் இமேஜ் துல்லியமாக இருக்கும். இந்த நிலையில்தான் உலகம் முழுக்க பலரால் எதிர்பார்க்கப்பட்ட ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி எடுத்த முதல் புகைப்படம் இன்று வெளியிடப்பட்டது. பல லட்சம் விண்மீன் மண்டலம், நட்சத்திரங்கள், கிரகங்களை படம் பிடித்து ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி அனுப்பி உள்ளது

பிடன் வெளியீடு
அமெரிக்க அதிபர் பிடன் மூலம் இந்த புகைப்படம் வெளியிடப்பட்டது. இதுவரை வெளியிடப்பட்ட பிரபஞ்சத்தின் புகைப்படங்களிலேயே மிகவும் ஆழமான, ஷார்ப்பான புகைப்படம் இதுதான் என்று நாசா தெரிவித்துள்ளது. SMACS 0723 என்ற பிரபஞ்ச தொகுப்பை இந்த தொலைநோக்கி படம் பிடித்து அனுப்பி உள்ளது. பல சிறிய சிறிய பிரபஞ்சங்கள், நட்சத்திர தொகுப்புகள் இந்த புகைப்படத்திற்குள் அடங்கி உள்ளன. கையில் ஒரு பிடி மண்ணை வைத்து அதை வானத்தை நோக்கி காட்டினால் எப்படி இருக்கும்?

எப்படி இருக்கும்?
கையில் எவ்வளவு மண் துகள்கள் இருக்கும். அதேபோல்தான் இந்த புகைப்படம் மிக குறுகிய தூரத்தில் இருக்கும் பல லட்சம் பிரபஞ்ச கூட்டங்களை படம் பிடித்து அனுப்பி உள்ளது என்று நாசா தெரிவித்துள்ளது. பிரபஞ்சம் உருவானதன் தொடக்க கால புகைப்படமாக இது கருதப்படுகிறது. அகச்சிவப்பு கதிர்களின் உதவியுடன் இந்த புகைப்படத்தை ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி எடுத்துள்ளது.

எவ்வளவு பழையது
அதாவது 13 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் இருந்த நட்சத்திர தொகுப்பின் புகைப்படம் ஆகும் இது. கிட்டத்தட்ட இந்த பிரபஞ்சத்தின் தொடக்க காலங்களில் இருந்த நட்சத்திர தொகுப்பின் புகைப்படம் ஆகும் இது. 13 பில்லியன் ஆண்டுகள் பயணம் செய்து வந்த ஒளியை இந்த தொலைநோக்கி படம் பிடித்து அனுப்பி இருக்கிறது. இதற்கு முன் இவ்வளவு பழைய பிரபஞ்ச புகைப்படம் வெளியானதே இல்லை! உலகிலேயே அதிக சக்தி கொண்டது ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி. பூமியில் இருந்து அதிகபட்சம் 1,500,000 km தூரத்தில் இது நிலைநிறுத்தப்பட்டுள்ளது. பூமியில் இருந்து இது இருக்கும் குறைந்தபட்ச தொலைவே 374,000 km தூரம் ஆகும்.

எப்படி இருக்கிறது?
இந்த புகைப்படத்தில் ஆங்காங்கே மின்னும் நட்சத்திரங்களும், சிறிய பிரபஞ்சங்களும், கிரகங்களும், நட்சத்திர தொகுப்புகளும் சிவப்பு, வெள்ளை, நீளம் என்று பல்வேறு நிறங்களில் காணப்படுகிறது. 6 மாதங்களுக்கு முன் எடுக்கப்பட்ட புகைப்படத்தை நாசா பல்வேறு ஆராய்ச்சிகள், பில்டர்களுக்கு பின் தற்போது வெளியிட்டுள்ளது. வரும் நாட்களில் Carina Nebula, WASP-96b, the Southern Ring Nebula, Stephan's Quintet மற்றும் SMACS 0723 ஆகிய பிரபஞ்சங்கள் மற்றும் நட்சத்திர தொகுப்புகளின் புகைப்படங்களை ஜேம்ஸ் வெப் வெளியிடும்.

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி தோற்றம்
ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி மிக மிக பெரியது ஆகும். 20.197 மீட்டர் நீளம். 14.162 மீட்டர் அகலம் கொண்டது. (66.26 ft × 46.46 ft). இதில் ஒரு பக்கம் தங்க முலாம் பூசிய சோலார் பேனல்கள் சூரிய ஒளி எதிர்ப்பு பில்டர்களும் இருக்கும். இது 270 டிகிரி வெப்பநிலையை தாங்கும். இதன் மறுபக்கம் சூரியனுக்கு எதிர்ப்பக்கம் என்பதால் மைனஸ் 270 டிகிரி குளிர் வெப்பநிலையை தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் எடை 6,500 kg. ஐந்து வருடத்தில் முடிக்கலாம் என்று திட்டமிட்டு கடந்த 20 வருடமாக பணிகளை மேற்கொண்டு இந்த தொலைநோக்கியை உருவாக்கி உள்ளனர். கடந்த 3 வருடமாக பல காரணங்களால் இதன் லான்ச் தள்ளிப்போனது. 1996இல் ஆரம்பிக்கப்பட்ட திட்டம் இப்போதுதான் ஒருவழியாக முடிவிற்கு வந்துள்ளது. 500 மில்லியன் பட்ஜெட்டை தாண்டி இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது!
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications