2012 படத்தில் வந்தது போல.. ஒரே நேரத்தில் "பிளாஷ்" வெள்ளம், காட்டுத்தீ.. அமெரிக்காவை உலுக்கிய காலநிலை
நியூயார்க்: அமெரிக்காவில் ஒரு பக்கம் நியூயார்க், நியூ ஜெர்சியில் கடும் வெள்ளம், மழை ஏற்பட்டுள்ளது. இன்னொரு பக்கம் கலிபோர்னியாவில் கடுமையான காட்டுத்தீ ஏற்பட்டு பல்வேறு பகுதிகளில் வேகமாக பரவி வருகிறது. ஒரே நேரத்தில் இங்கே காட்டுத்தீயும்.. இன்னொரு பக்கம் வெள்ளமும் ஏற்பட்டு இருப்பது அமெரிக்காவை உலுக்கி உள்ளது.
உலகம் முழுக்க காலநிலை மாற்றம் வேகமாக ஏற்பட்டு வருகிறது. நினைத்ததை விட இதன் பாதிப்புகள் அதிகமாகிக்கொண்டே செல்கிறது. காலநிலை மாற்றம் காரணமாக இனி எல்லா வருடமும் இயற்கை பேரிடர்கள் ஏற்படும். இனி வாழ்க்கையே இயற்கை பேரிடர்களுக்கு இடையில்தான் இருக்க போகிறது என்று ஐநாவின் ஐபிசிசி அறிக்கை எச்சரிக்கை விடுத்து இருந்தது.
இனி உலகின் வெப்பநிலை வேகமாக உயரும், எதிர்பாராத மழை, வெள்ளம் ஏற்படும், பனிப்பாறை உருகும், கடல் நீர் மட்டம் அதிகரிக்கும், காட்டுத்தீ ஏற்படும்.. மனித வாழ்க்கை இனி முன்பு போல இருக்காது என்று ஐபிசிசி எச்சரிக்கை விடுத்து இருந்தது. தற்போது ஐபிசிசி அறிக்கையில் கூறப்பட்டது போலவே அமெரிக்காவில் மிகப்பெரிய இயற்கை பேரிடர்கள் அடுத்தடுத்து ஏற்பட்டுள்ளது.
|
என்ன நடந்தது
அமெரிக்காவில் வடகிழக்கு பகுதிகளில் மழை, வெள்ளம், புயல் தாக்கி உள்ளது. அங்கு இடா புயல் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தாக்கியது. இந்த புயல் கடந்து சென்ற இடம் எல்லாம் மிகப்பெரிய சேதங்களை ஏற்படுத்தி உள்ளது. முக்கியமாக நியூயார்க், நியூ ஜெர்சி மாகாணங்களில் மிகப்பெரிய அளவில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. flash flood எனப்படும் திடீர் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. மொத்தமாக ஒரு சில நிமிடங்களில் பல செ.மீ மழை பெய்து, திடீரென ஏற்பட்டும் வெள்ளம் பிளாஷ் ஃபிளட் என்று அழைக்கப்படும்.
|
நியூயார்க்
நியூயார்க், நியூஜெர்சி மாகாணங்களில் பல்வேறு பகுதிகள் இந்த கடும் வெள்ளம் காரணமாக மூழ்கி உள்ளது. முக்கியமாக தாழ்வான பகுதிகள் எல்லாம் கடுமையான நீரில் மூழ்கி உள்ளது. மெட்ரோ ஸ்டேஷன்கள் எல்லாம் நியூயார்க்கில் மூழ்கிவிட்டது, பல்வேறு பார்க்கிங்குகள் நீரில் மிதக்கின்றன. காரில் இருந்த பலர் வெள்ளத்தில் சிக்கி பலியாகி உள்ளனர். நியூயார்க், நியூஜெர்சியில் மட்டும் தாழ்வான பகுதிகளில் வசித்த 44 பேர் இந்த வெள்ளத்தில் பலியாகி உள்ளனர். இரண்டு மாகாணங்களிலும் தற்போது வெள்ளம் காரணமாக அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
|
அவசர நிலை
அங்கு பல இடங்களில் ஒரே மணி நேரத்தில் 90 மிமீ வரை மழை பெய்து உள்ளது. ஒரு பக்கம் வெள்ளம் மட்டுமின்றி சிறிய சிறிய புயல்களும் அங்கு ஏற்பட்டுள்ளது. இடா புயல் சென்றபின் அதை தொடர்ந்து சிறிய சிறிய சூறாவளிகள் அங்கு தாக்கியதில் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 30 ஆயிரம் வீடுகள் சேதம் அடைந்துள்ளது. 25 வீடுகளில் இருந்தவர்கள் வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வசித்த 10 ஆயிரம் பேர் வரை பல்வேறு இடங்களில் முகாம்களில் தங்கி உள்ளனர்.
|
எங்கு
அதோடு இந்த இடா புயல் லூசியானா நோக்கி சென்று தென் மாகாணங்களை தாக்கி உள்ளனர். லூசியானா, மிஸிசிப்பி, அலபாமா, புளோரிடா ஆகிய மாகாணங்களில் இந்த புயல் கடுமையான சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக இணையத்தில் வெளியாகி இருக்கும் வீடியோக்கள், புகைப்படங்கள் எல்லாம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்கா போன்ற வளர்ந்த நாட்டில் நியூயார்க், நியூஜெர்சி போன்ற மாகாணங்களை கூட ஒரு புயல் முடக்கி போட்டு இருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
|
கலிபோர்னியா
இது போக இன்னொரு பக்கம் கலிபோர்னியா மாகாணத்தில் மிகப்பெரிய அளவில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. கலிபோர்னியா எப்போதும் காட்டுத்தீ காரணமாக அதிகமாக பாதிக்கப்படும் அமெரிக்க மாகாணம் ஆகும். அதிலும் கடந்த 5 வருடமாக கலிபோர்னியாவில் பல மோசமான காட்டுத்தீ தாக்குதல்கள் வருடா வருடம் ஏற்பட்டு வருகிறது. காலநிலை மாற்றம் காரணமாக ஒரு காட்டுத்தீக்கும் இன்னொரு காட்டுத்தீக்கும் இடையிலான இடைவெளி வேகமாக அதிகரித்து வருகிறது.
|
காட்டுத்தீ
கலிபோர்னியாவில் இருக்கும் லேக் டாஹோ, நெவேடா அருகில் இருக்கும் பகுதிகள் இந்த காட்டுத்தீ காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 22 ஆயிரம் பேர் இந்த காட்டுத்தீ காரணமாக வீடுகளை காலி செய்துள்ளனர். மொத்தம் 48 கிலோ மீட்டர் வேகத்தில் இந்த காட்டுத்தீ கலிபோர்னியாவில் பல்வேறு நகரங்களை கபளீகரம் செய்து வருகிறது. ஏற்கனவே அங்கு ஏற்பட்ட பல்வேறு காட்டுத்தீகளால் கலிபோர்னியாவின் காட்டுப்பகுதி அளவு குறைந்து வெப்பநிலை உயர்ந்தது.

மேலும்
தற்போது மேலும் இந்த காட்டுத்தீ காரணமாக பல்லாயிரம் ஏக்கர் நிலம் அங்கு அழியும் நிலை ஏற்பட்டு இருக்கிறது. அதோடு காட்டுத்தீ காரணமாக அங்கு வெப்ப காற்றும், புழுதி காற்றும் மோசமாக வீசி வருகிறது. இதனால் அங்கு இருக்கும் காற்று சுவாசிக்க முடியாத அளவிற்கு மோசமான நிலையை எட்டி உள்ளது. ஒரே நேரத்தில் அமெரிக்காவில் வெவ்வேறு பகுதிகளில் ஏற்பட்டு இருக்கும் இந்த இயற்கை பேரிடர்கள் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

2012
2012 ஹாலிவுட் படத்தில் காலநிலை மாற்றம் மற்றும் வெப்பநிலை காரணமாக ஒரு பக்கம் புயல் வெள்ளம் ஏற்படும். இன்னொரு பக்கம் பெரிய அளவில் எரிமலை வெடிப்பு, காட்டுத்தீ ஏற்படும். இதுபோன்ற பாதிப்புகளின் தொடக்க நிலையில் தற்போது நாம் இருக்கிறோம் என்பதை இந்த இரண்டு இயற்கை பேரிடர்கள் உணர்த்தி உள்ளது. சீனாவில் கடந்த மாதம் வந்த வெள்ளமும் தற்போது அமெரிக்காவில் ஏற்பட்டு இருக்கும் பேரிடர்களும் மனிதகுலத்திற்கு இயற்கை மூலம் விடுக்கப்பட்ட எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications