ட்ரம்புக்கு வந்த அடுத்த டென்ஷன்.. அதிகாரப்பூர்வ வெப்சைட்டும் முடக்கம்.. ஹேக்கர்கள் கைவரிசை..!
டொனால்ட் டிரம்ப் வலைதளத்தை ஹேக் செய்துவிட்டனர்
நியூயார்க்: துருக்கி நாட்டை சேர்ந்த ஹேக்கர்கள், முன்னாள் அதிபர் டிரம்ப்பின் அதிகாரப்பூர்வ வலைதளத்தை ஹேக் செய்துவிட்டனர்..!
சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இயங்கி வருபவர் டொனால்ட் டிரம்ப்.. பெரும்பாலான தன்னுடைய அரசியலை, இந்த சோஷியல் மீடியாவில் நடத்துவார்.
சர்ச்சையான கருத்துக்களையும் அடிக்கடி பதிவிடுவார்.. இதனால் பெரும் குழப்பங்கள் அமெரிக்க அரசியல் கட்சிகளிடையே கடந்த காலங்களில் தொடர்ந்து நடந்து வந்துள்ளது.. இதற்காகவே பலமுறை இவரது ட்விட்டர் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளது.

சோஷியல் மீடியா
இந்நிலையில், டிரம்ப் வலைதளம் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. தன்னுடைய வலைதளத்தை டிரம்ப் இயக்க முற்பட்டுள்ளார், அப்போதுதான், துருக்கியை சேர்ந்த ரூட்அயில்டிஸ் குழு உருவாக்கிய வெப்சைட் ஓபன் ஆகியதாம்.. அந்த வெப்சைட்டில், "அல்லாவை மறந்தவர்களை போல இருக்காதீங்க, கூட்டணியே அவர்களை மறக்க செய்திருக்கிறது... இங்கு அவர்கள் உண்மையில் தடம் மாறி சென்றனர்" என்ற வாசகம் இடம்பெற்றுள்ளதாம்..

ஹேக்கர்கள்
இந்த வாசகம் துருக்கி மொழியிலும் எழுதப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமல்ல, ஹேக்கர்களின் இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் பக்கங்களுக்கான இணைய முகவரியும் அந்த வெப்சைட்டில் இடம்பெற்றிருந்தது.. இதுதான் டிரம்புக்கு அடுத்த டென்ஷனை கிளப்பிவிட்டுள்ளது. சமீப காலமாகவே உலக தலைவர்களை குறி வைத்து சைபர் தாக்குதல்களை ரூட்அயில்டிஸ் குழு நடத்தி வருகிறது.. ஏற்கனவே பலமுறை அமெரிக்க அரசியல் தலைவர்களின் வெப்சைட்டுகள் இப்படித்தான் இதேபோன்று ஹேக் செய்யப்பட்டு இயல்பு நிலைமைக்கு திரும்பி உள்ளன.

முடக்கம்
அந்த வகையில், ஹேக் செய்யப்பட்ட டிரம்ப் வெப்சைட்டானது, இப்போது மீண்டும் சீராக இயங்குகிறதாம். donaldjtrump.com என்ற பெயரில் உள்ள டிரம்பின் வெப்சைட்டில், கடந்த தேர்தலின்போதுகூட இப்படி ஒரு சம்பவம் நடந்தது.. இந்த வெப்சைட்டில் தினமும் தன்னுடைய பிரச்சாரத்தை செய்து கொண்டிருந்தார் டிரம்ப்.. அதுமட்டுமல்ல, கொரோனா உச்சத்தில் இருந்த சமயம், ஏகப்பட்ட சர்ச்சை கருத்துக்களையும் டிரம்ப் தெரிவித்து வந்தார்.. "ஏன் இன்னும் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்காம இருக்கீங்க? என்று உலக விஞ்ஞானிகளை கேள்வி எழுப்பியிருந்தார்..
Recommended Video

பரபரப்பு
மலேரியாவுக்கு பயன்படுத்தும் மாத்திரையை கொரோனாவுக்கும் பயன்படுத்தலாம் என்றும் அடுத்த குண்டு போட்டார்.. அப்படிப்பட்ட சூழலில்தான் திடீரென ஒருநாள் டிரம்ப் வெப்சைட் ஹேக் செய்யப்பட்டது.. "தினமும் ஏராளமான பொய் செய்திகள் பரப்பப்பட்டு உலகம் முழுக்க வியாபித்து விட்டது" என்றும் அதில் பதிவாகி இருந்தது.. ஆனால், மீண்டும் வெப்சைட் இயல்பு நிலைக்கு வந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
-
யுரேனியத்தை ஒப்படைத்தால் கூட.. ஈரான் தப்பிக்காது! டிரம்ப் கொடுத்த பகிரங்க வார்னிங்! -
நள்ளிரவில் பாய்ந்த அமெரிக்க ஏவுகணைகள்... அதிகாலையில் திருப்பி அடித்த ஈரான்! மீண்டும் வெடிக்கும் போர் -
ஈரான் பந்தர் அப்பாஸில் அமெரிக்க தாக்குதல்.. வேலையை காட்டிய டிரம்ப்.. அப்போ அமைதி எல்லாம் கனவுதான் -
அமெரிக்க பொருளாதாரம் அபாயத்தில் உள்ளதா? ஜகா வாங்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்.. வெளியானது முக்கிய அறிகுறி! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்!












Click it and Unblock the Notifications