ம்ஹூம்.. மார்க் பொறுப்பில் இருக்கும்வரை ஃபேஸ்புக் மாற போவதில்லை.. பிரான்சஸ் மீண்டும் அதிரடி
பேஸ்புக் பெயர் மாற்றம் குறித்து பிரான்சஸ் கருத்து தெரிவித்துள்ளார்
நியூயார்க்: பிரான்சஸ் மறுபடியும் அதிரடியை கிளப்பி உள்ளார்.. இந்த பேஸ்புக் நிறுவனத்தை விட்டு மார்க் சக்கர்பர்க் விலகாதவரை, அதன் செயல்பாடுகளும் என்னைக்குமே மாற போவதில்லை என்று பிரான்சஸ் ஹாகன் தெரிவித்துள்ளார்.
ஃபேஸ்புக்கின் தரத்தை மேம்படுத்தும் பொருட்டு, இந்நிறுவனத்தின் பெயரை மாற்ற திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி வந்த நிலையில், திடீரென ஒரு அறிவிப்பு 2 நாளைக்கு முன்பு வெளியானது.
ஃபேஸ்புக் பெயர் மாற்றம் செய்யப்படுவதாக கூறி, தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் அது தொடர்பாக செய்திக்குறிப்பு ஒன்றையும் வெளியிட்டிருந்தார். அதற்கான காரணத்தையும் தெரிவித்திருந்தார்.

பெயர் மாற்றம்
அதில் "சமூக வலைதளங்களில் முன்னணி நிறுவனமாக விளங்கும் பேஸ்புக்கின் பெயர் "மெட்டா" என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது... உலகம் முழுவதும் நிலவி வரும் சமூக பிரச்னைகளுடன் போராடி கற்றுக் கொண்டதை அடிப்படையாக கொண்டு, இப்போது புதிய அத்தியாயத்தை உருவாக்கி வருகிறோம்... அதே சமயம், தங்களுடைய மேலான சேவையும், வாடிக்கையாளர் மீதான அக்கறையும் மாறவில்லை..

அப்ளிகேஷன்கள்
அப்ளிகேஷன்கள் மற்றும் அதன் பிராண்டுகள் அப்படியே இருக்கும். அதில் எந்தவித மாற்றமும் இல்லை.. இந்த நொடி முதல் மெட்டாவெர்ஸ் தான் எங்களின் முதல் இலக்கு, தவிர பேஸ்புக் அல்ல.. அடுத்த 10 ஆண்டுகளில் பல கோடி பயனாளர்கள் இருப்பார்கள்" என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில்தான் பிரான்சஸ் தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார்.

மோசடிகள்
ஃபேஸ்புக் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்தான் பிரான்சஸ்.. பேஸ்புக் நிறுவனம் எப்படி செயல்படுகிறது என்றும், அதில் நடக்கும் மோசடிகள், ஃபேஸ்புக் பயன்படுத்துவோரின் தகவல்களை யாருக்கு ஷேர் செய்கிறார்கள் என்பது குறித்து பல விஷயங்களை புட்டு புட்டு வைப்பவர் பிரான்சஸ். 4 நாளைக்கு முன்புகூட, பேஸ்புக் லாபத்தை மட்டுமே கணக்கில் கொண்டு இயங்குவதாகவும், வருமானத்திற்காக பயனர்களின் பாதுகாப்பை சமரசம் செய்ததாகவும் பிரான்சிஸ் பகீர் தகவலை வெளியிட்டிருந்தார்..

மெட்டா
ஃபேஸ்புக்கின் சில ரகசிய ஆவணங்களை வெளியிட்டவரும் இவர்தான். இப்போது மெட்டா என்ற பெயர் மாற்றம் குறித்து பிரான்சஸ் சொல்லும்போது, "இந்த ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு மார்க் தலைமை பொறுப்பில் இருக்கும்வரை, பேஸ்புக் நிறுவனமும் மாற வாய்ப்பில்லை.. பெயரை மாற்றிவிட்டால் மட்டும்போதுமா? பிரச்சனைகள் எல்லாம் தீர்ந்துவிடுமா? ஆக்டிங் பொறுப்பில் இருந்து முதலில் மார்க் வெளியேறணும்.. வேற யாராவது புது பொறுப்புக்கு வர வேண்டும்.. அப்போதுதான் பேஸ்புக்கின் செயல்பாடுகளிலும் மாற்றம் வரும்" என்றார்.












Click it and Unblock the Notifications