யார்ன்னு பார்த்தீங்களா.. அதுபாட்டுக்கு போகுது.. பின்னால ஏறி "மரஉச்சியில்" சிக்கிய "இஸ்ஸி" ஒரே அலறல்
மரஉச்சியில் நாய்க்குட்டி சிக்கிக் கொண்டுவிட்டதால் தீயணைப்பு துறையினர் மீட்டனர்
நியூயார்க்: ஒரு போட்டோ இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.. அதை பார்ப்பவர்கள் அனைவரும் திரண்டு வந்து, அந்த கமெண்ட்களை பதிவிட்டு கொண்டிருக்கிறார்கள்.
அமெரிக்காவின் இடாஹோ மாகாணத்தில் கால்டுவெல் என்ற பகுதி உள்ளது.. இங்கு வசித்து வருபவர் கிரிஸ்டாயான டேனேர்.
இவர் ஒரு நாயை செல்லமாக வளர்த்து வந்தார்.. இந்த நாய்க்கு இஸ்ஸி என்று பெயர்.. இந்த நாய்குட்டி வீட்டில் அனைவருக்கும் ஓவர் செல்லமாம்.

அணில்குட்டி
ஒருஇடத்தில் கொஞ்ச நேரம்கூட சும்மா இருக்காதாம்.. இவர்கள் வசிக்கும் வீட்டுக்கு பக்கத்தில் தினமும் ஒரு அணில் குட்டி வந்துபோகுமாம்.. அந்த அணில் குட்டி எப்போது வந்தாலும், கொஞ்ச நேரம் அங்கேயே விளையாடி கொண்டிருக்குமாம்.. தினமும் அணில்குட்டியின் சேட்டை அதிகமாகி கொண்டே இருக்கவும், இஸ்ஸிக்கு பொறாமை வந்துவிட்டது. சம்பவத்தன்று அப்படித்தான் வழக்கம்போல் அணில்குட்டி வந்திருக்கிறது.. அதை பார்த்ததுமே, இஸ்ஸி பாய்ந்து பிடிக்க முயன்றது..

அணில்குட்டி
ஆனால், அணில்குட்டியோ, நாய்க்குட்டியை ஏமாற்றிவிட்டு எகிறியது.. பின்னாடியே நாய் துரத்தி கொண்டு வரவும், அணில்குட்டி அங்கிருந்த மரத்தில் ஏறி கொண்டது.. இதை பார்த்து அதிர்ந்த இஸ்ஸி, என்ன செய்வதென்றே விழித்தது.. பிறகு தட்டுத்தடுமாறி அந்த மரத்தில் ஏற ஆரம்பித்தது.. அணில்குட்டியோ, மரத்தின் உச்சிக்குபோய் உட்கார்ந்து கொண்டது. பின்னாடியே விரட்டி சென்ற இஸ்ஸி, திடீரென திரும்பி பார்த்தால் உயரமான மரத்தில் ஏறிவிட்டிருந்தது..

மரஉச்சி
இப்போது அதற்கு கீழே இறங்க தெரியவில்லை.. கூடவே பயமும் வந்துவிட்டது.. மரத்தில் கிளையில், நடுநடுங்கி உட்கார்ந்து கொண்டு, ஓனருக்கு குரல் கொடுத்தது.. ஆனால், ஓனருக்கோ, இஸ்ஸி கோபமாக கூப்பிடுகிறதா? விளையாடுகிறதா? என்று தெரியாமல் குழம்பி போயுள்ளார்.. தொடர்ந்து இஸ்ஸி குரல் கொடுக்கவும்தான், என்ன ஆச்சோ என்று பதறி கொண்டு ஓடிவந்தார்.. பிறகுதான் மரத்தின் உச்சியில் உட்கார்ந்திருப்பதை பார்த்தார்.. அவ்வளவு உயரத்தில் ஏற முடியாமல், ஓனரும் விழித்தார்..

ராட்சச ஏணி
அவருக்கும் மரம் ஏற தெரியவில்லை.. அவ்வளவு உயரத்தில் ஏறி செல்லவும் ஏணியும் இல்லை.. அதற்கு பிறகு, தீயணைப்பு துறையினருக்கு போனை போட்டு விஷயத்தை சொல்லவும், அவர்கள் விரைந்து வந்தார்கள்... ராட்ச ஏணியின் உதவியுடன் ஏறி, இஸ்ஸி மீட்டனர். சும்மா இருக்காமல் அணிலை விரட்ட சென்று, மரஉச்சியில் சிக்கி கொண்ட இஸ்ஸியின் போட்டோதான் இப்போது இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.!!
-
அமெரிக்காவின் 'ஹார்முஸ்' முற்றுகையில் இங்கிலாந்து பங்கேற்காது.. ட்ரம்ப்புக்கு 'நோ' சொன்ன பிரிட்டன் -
கண்கள் சிவந்த டிரம்ப்.. திடீரென சீனா பக்கம் திரும்பி நேரடி வார்னிங்.. உற்று பார்க்கும் உலக நாடுகள் -
இஸ்லாமாபாத்தில் இனிப்பு பேச்சு.. ஹார்முஸ் ஜலசந்தியில் சத்தமே இல்லாமல் சம்பவம்.. ட்ரம்ப் அதிரடி -
அடங்க மறுக்கும் ஈரான்.. விடாமல் விரட்டும் ட்ரம்ப்.. ஹார்முஸ் ஜலசந்தியில் மீண்டும் வெடிக்கும் போர்? -
முக்கிய கட்டத்தை எட்டிய பேச்சுவார்த்தை.. பாகிஸ்தானிலிருந்து வந்த குட் நியூஸ்! இந்தியாவுக்கு நிம்மதி! -
ஹார்முஸ் நீரிணை.. கட்டுப்பாட்டை கையில் எடுக்கும் US! டிரம்ப் போட்ட உத்தரவால் இந்தியாவுக்கு சிக்கல் -
மூடு மாறிய டிரம்ப்! 'ரீசெட்' பண்ணிடுவோம் பாத்துக்கோங்க.. ஈரான் விஷயத்தில் வாயை விட்டுட்டாரே! -
திடீரென அமெரிக்க துணை அதிபர் விமானத்தை சூழ்ந்த போர் விமானங்கள்.. பாகிஸ்தான் வான் எல்லையில் பரபரப்பு! -
உலகமே தேடும் பாகிஸ்தானின் செரீனா ஹோட்டல்.. ஈரான் அமெரிக்கா பேச்சுவார்த்தைக்கு தேர்வானது எப்படி? -
குட்டையை குழப்பும் இஸ்ரேல்.. பேச்சுவார்த்தையில் தொடர் இழுபறி! நெதன்யாகு லேசுபட்ட ஆள் கிடையாது! -
கண்ணிவெடிகள் நிறைந்த ஹார்முஸ்.. திடீரென இறங்கிய அமெரிக்க போர்க்கப்பல்கள்.. ஈரானுக்கு திடீர் பதற்றம் -
1.4 கோடி வரை சம்பளம்.. வீடியோ கேம் விளையாட தெரிந்தால்.. அமெரிக்காவில் லட்டு மாதிரி வேலை












Click it and Unblock the Notifications