கன் மாதிரி.. ஸ்டெடியாக நிற்கும் தங்கம்! அடுத்த மாதம் காத்திருக்கும் ட்விஸ்ட்! நிபுணர்கள் சொல்வதென்ன?
நியூயார்க்: அமெரிக்க பெடரல் வங்கி அடுத்த மாதம் வட்டியை குறைக்கலாம் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் சூழலில் டாலர் மதிப்பு வலுவாக இருந்தாலும் தங்கத்தின் விலை பெரிய அளவில் சரியாமல் ஓரளவு நிலையான விகிதத்தில் இருக்கிறது. பெரும் அளவுக்கு சரியும் என எதிர்பார்த்த நிலையில் தற்போது ஏறக்குறைய 4069 அமெரிக்க டாலர் என்ற நிலையிலேயே தங்கத்தின் விலை தொடர்வது குறிப்பிடத்தக்கது.
திங்கட்கிழமை காலை வர்த்தகத்தில் ஸ்பாட் கோல்ட் விலை சுமார் 0.1% உயர்ந்து ஒரு அவுன்ஸ் 4,069.10 அமெரிக்க டாலராக இருந்தது. ஆனால், டிசம்பர் மாதத்துக்கான அமெரிக்க தங்க வர்த்தகம் 0.3% சரிந்து 4,065.40 டாலராக இருந்தது.
டாலர் குறியீடு ஆறு மாதங்களுக்குப் பிறகு மிக உயர்ந்த நிலையைத் தொட்ட நிலையில் இருப்பதால், பிற நாணய நாடுகளுக்கு தங்கம் வாங்குவதை அதிகரித்து வருவதால் சற்று விலையேற்றம் அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தங்கம் விலை
இதுபற்றி சாக்ஸோ வங்கியின் கமாடிட்டி தலைமை நிபுணர் ஒலே ஹான்சன் கூறும் போது,"அமெரிக்க நியூயோர்க் ஃபெட் தலைவர் ஜான் வில்லியம்ஸ் மீண்டும் வட்டி குறைப்பு வாய்ப்பு இருக்கலாம் என சுட்டிக்காட்டியதால், தங்க சந்தை சற்றே உறுதியடைந்துள்ளது. ஆனால் ஃபெட்-இன் பிற அதிகாரிகள் எச்சரிக்கையான நிலைப்பாட்டில் இருப்பது சந்தைக்கு அழுத்தத்தையும் தந்துள்ளது. வில்லியம்ஸ் கடந்த வெள்ளிக்கிழமை பேசும் போது அமெரிக்க வட்டி விகிதம் குறைந்தாலும், பணவீக்க இலக்கை அது அபாயப்படுத்தாது. வேலைவாய்ப்பு சந்தை சற்று பலவீனமடைவதைத் தவிர்க்க இது உதவும்," என கூறினார்.
ஃபெட் வட்டி குறைப்பு
அவரது இந்த கருத்துக்கள் தங்க சந்தையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. இதன் விளைவாக, ஃபெட் அடுத்த மாதம் வட்டி குறைக்கும் வாய்ப்பு முன்பு 40% இருந்தது; வில்லியம்ஸ் பேச்சுக்குப் பிறகு அது 75% ஆக உயர்ந்துள்ளது. இது தங்க சந்தைக்கு பொதுவாக சாதகமாக பார்க்கப்படுகிறது, ஏனெனில் வட்டி வருவாய் அளிக்காத தங்கம் வட்டி குறைப்பு சூழலில் அதிகமாக முதலீடு பெறும். இதற்கிடையில் சந்தைகள் இவ்வாரத்தில் வெளியாகவுள்ள அமெரிக்க retail sales, jobless claims மற்றும் producer price index ஆகிய முக்கிய பொருளாதார தரவுகளையும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றன.
சர்வதேச தங்க தேவை
இவை தங்கத்தின் விலை குறித்த அடுத்த கட்ட நிலையை நிர்ணயிக்கும். மேலும், சர்வதேச அரசியல் சூழலிலும் சில முன்னேற்றங்கள் உள்ளன. ரஷ்யாவுடன் நடக்கும் போருக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அமெரிக்கா - உக்ரைன் இடையிலான பேச்சுவார்த்தைகள் தொடர உள்ளன. இது உலகளாவிய பதற்றத்தை தற்காலிகமாக தணிக்கும் அறிகுறியாக பார்க்கப்படுகிறது.
அமெரிக்க தங்க வர்த்தகம்
சீனாவின் தங்க தேவை குறைவு, வர்த்தகச் சிக்கல்கள் குறைவு மற்றும் Fed வட்டி குறைப்பில் தெளிவின்மை காரணமாக தங்கம் விலை மிகுந்த வேகத்தில் உயர முடியவில்லை. ஆனால் மத்திய வங்கிகள் தொடர்ந்து தங்கம் வாங்கி வருவது, உலக அரசியல் நிச்சயமின்மை போன்றவை தங்க விலைக்கு அடிப்படை ஆதரவாக இருக்கின்றன என ஸ்டாண்டர்ட் சார்ட்டேர்டு வங்கி கூறியுள்ளது. இதனால் தங்கம் விலை பெரிய அதிர்வை ஏற்படுத்தாமல் ஏற்ற இறக்கமாகவே உள்ளது. மேலும், தங்கத்துடன் சேர்த்து பிற மதிப்புள்ள உலோகங்களின் விலையும் சிறிது உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
சிங்கப்பூரில் இந்தியாவை பாராட்டிய அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர்.. வியந்து போய் சொன்ன விஷயம் -
ஆப்பு வச்சுட்டாரே மோடி.. ஒரே ஆர்டரில் ஒட்டுமொத்தமாக சரிந்த தங்க கோட்டை! அலர்ட்டான ரிசர்வ் வங்கி! -
Gold Rate Today: தங்கம் விலை இன்றும் அதிரடியாக உயர்வு.. சென்னையில் சவரன் ரூ.1,17,040க்கு விற்பனை! -
ஹார்முஸ் நீரிணைக்கு சுங்க கட்டணமா? மொத்த அரபு நாடுகளும் க்ளோஸ்.. அமெரிக்கா சீரியஸ் வார்னிங்! -
Gold Rate today: 3 நாட்களாக சரிந்து வந்த தங்கம் விலை இன்று அதிரடி உயர்வு.. சென்னையில் இன்றைய ரேட் என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications