இதை எதிர்பார்க்கல.. டிரம்பின் மாஜி மருமகளை காதலிக்கும் பிரபலம்.. யாருனு பாருங்க!

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்-ன் முன்னாள் மருமகளான வனேசா டிரம்ப் பிரபல கோல்ப் ஜாம்பவானான டைகர் வுட்ஸ் உடன் காதலில் உறவில் இருப்பது உறுதியாகியுள்ளது. இதுதொடர்பாக டைகர் வுட்ஸ் தனது சோசியல் மீடியா பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு காதலை உறுதிபடுத்தி இருக்கிறார்.

சர்வதேச அளவில் கோல்ப் விளையாட்டில் ஆதிக்கம் செலுத்திய வீரர்களில் முக்கியமானவர் அமெரிக்காவைச் சேர்ந்த டைகர் வுட்ஸ். கோல்ப் விளையாட்டின் மேஜர் சாம்பியன்ஷிப் தொடர்களை 15 முறை டைகர் வுட்ஸ் கைப்பற்றி இருக்கிறார். அதேபோல் 2010 வரை கோல்ஃப் விளையாட்டின் உச்சத்தில் இருந்தவர் டைகர் வுட்ஸ். அதேபோல் உலகிலேயே அதிக ஊதியம் பெறும் வீரராகவும் திகழ்ந்து வந்தார்.

Donald Trump New York Vanessa Trump Tiger woods

டைகர் வுட்ஸ் சர்ச்சை

ஆனால் டைகர் வுட்ஸ்-க்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்த செய்தி வெளியான பின், அவரின் வாழ்க்கை மொத்தமாக மாறியது. கோல்ஃப் விளையாட்டிலும் அவரின் கவனம் சிதறியது. சுமார் 120க்கும் அதிகமான பெண்களுடன் டைகர் வுட்ஸ் உறவு வைத்ததாக செய்திகள் வெளியாகியது. இதனால் டைகர் வுட்ஸ் திருமண வாழ்க்கையும் முடிவுக்கு வந்தது.

காதலை உறுதி செய்த டைகர் வுட்ஸ்

2010ஆம் ஆண்டு டைகர் வுட்ஸ் மற்றும் எலின் நோர்டெக்ரென் தம்பதி பிரிந்தது. இதன்பின் டைகர் வுட்ஸ் தரப்பில் 2 குழந்தைகள் பராமரிப்புக்காக மட்டும் சுமார் 100 மில்லயன் டாலர்கள் அளிக்கப்பட்டது. இந்திய மதிப்பில் அப்போது சுமார் 600 கோடிக்கும் அதிகமாக கணக்கிடப்பட்டது. இதன்பின் டைகர் வுட்ஸ் தற்போது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் முன்னாள் மருமகளான வனேசாவுடன் உறவில் இருப்பது உறுதியாகியுள்ளது.

சோசியல் மீடியா பதிவு

இதுதொடர்பாக டைகர் வுட்ஸ் தனது சோசியல் மீடியா பக்கத்தில், காதல் காற்றிலேயே உள்ளது. என் அருகில் நீ இருக்கும் போது வாழ்க்கை சிறப்பாக உள்ளது. இந்த நேரத்தில் எங்களின் தனியுரிமைக்கு மதிப்பளிக்க கேட்டுக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார். அந்த பதிவுடன் வனேசா டிரம்ப் உடன் இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இது சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது.

சந்தித்தது எப்படி?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மூத்த மகனான டொனால்ட் டிரம்ப் ஜூனியர் - வனேசா இருவருக்கும் 2005ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 5 குழந்தைகள் பிறந்த நிலையில், 2018ஆம் ஆண்டு திருமண உறவில் இருந்து பிரிவதாக அறிவித்தனர். இவரின் குழந்தைகள் மற்றும் டைகர் வுட்ஸ் குழந்தைகள் ஒரே பள்ளியில் படித்து வருகின்றனர்.

யார் இந்த வனேசா டிரம்ப்

இதன்மூலம் நட்பாகி பின்னர் காதலாக மாறி இருக்கிறது. வனேசா டிரம்ப் 1990களில் டைட்டானிக் நாயகனான லியனர்டோ டிக்காப்ரியோ மற்றும் சவுதி இளவரசர் காலித் பின் பந்தர் பின் சுல்தான் அல் சாவுத் ஆகியோரை டேட்டிங் செய்ததாக கூறப்படுகிறது. தற்போது மீண்டும் டைகர் வுட்ஸ் உடன் வனேசா காதல் உறவில் இணைந்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+