ஏழை தொழிலாளர்களுக்கு உதவ இந்தியாவுக்கு ரூ.5 கோடி அளித்த கூகுள் சிஇஒ சுந்தர் பிச்சை
நியூயார்க்: கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை இந்தியாவுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.5 கோடி அளித்துள்ளார்.
உலகம் முழுவதும் 206க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் தன்னாட்சி பிரதேசங்களில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதுவரை உலகில் 1,897,306 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 117,726 பேர் உயிரிழந்துள்ளனர். 438,212 பேர் சிகிச்சை பலன் பெற்று குணமடைந்துள்ளனர். உலகிலேயே மிக அதிகபட்சமாக அமெரிக்காவில் 573,816 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 22,948 பேர் இதுவரை உயிரிழந்துள்ளார்கள்.

இந்தியாவை பொறுத்தவரை 9,635 கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 331 பேர் உயிரிழந்துள்ளனர். 1,096 பேர் குணமடைந்துள்ளனர். ஆனால் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளைப் போல் பொருளாதார ரீதியாக இந்தியா பலமான நாடு இல்லை என்கிற நிலையில், கொரோனாவை தடுக்க ஊரடங்கு உத்தரவும் அமுல்படுத்தப்பட்டுள்ளதால் இங்கு பாதிப்பை தடுத்து இயல்பு நிலைக்கு திரும்ப கூடுதல் நிதி தேவைப்படுகிறது.
இதன் காரணமாக த்திய, மாநில அரசுகள் பொது நிவாரணம் வழங்குமாறு அனைவருக்கும் கோரிக்கை வைத்துள்ளன.. அதையேற்று பல்வேறு நிறுவனங்களும், தொழிலதிபர்களும், பிரபலங்களும் நிவாரண நிதி வழங்கி வருகிறார்கள். அந்த வகையில் கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை ரூ.5 கோடியை இந்தியாவுக்கு கொரோனா நிவாரண நிதியாக அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது-
GIVE INDIA என்கிற தன்னார்வ அமைப்பு நன்கொடையாளர்களுக்கும் உதவி தேவைப்படும் மக்களுக்கும் இடையே ஒரு பாலமாக செயல்பட்டு உதவிதொகையை பெற்று அளித்து வருகிறது. அந்த நிறுவனத்திற்கு தான் கூகுள் சிஇஒ சுந்தர் பிச்சை ரூ.5 கோடி நிதி அளித்துள்ளாராம். இது தொடர்பாக டுவிட்டரில் நன்றி தெரிவிதுள்ள GIVE INDIA , தினசரி கூலித் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு கொரோனா ஊரடங்கு நேரத்தில் தேவையான பண உதவி வழங்க இந்த நிதி பயன்படுத்தப்படும் என கூறியுள்ளது.
இதனிடையே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்புடைய நபர்களைக் கண்டறிய ப்ளூடூத் உதவியுடன் இயங்கும் புதிய செயலி ஒன்றை வடிவமைத்து வருவதாகவும் தனது ட்விட்டர் பக்கத்தில் சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.
முன்னதாக, இந்திய மதிப்பில் 6107 கோடி ரூபாயை கூகுள் நிறுவனம் உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு நிவாரணத் தொகையாக வழங்கியுள்ளது.












Click it and Unblock the Notifications