நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அமெரிக்க தேர்தலுக்காக சர்கார் ஸ்டைலை பின்தொடர்ந்த சுந்தர் பிச்சை.. என்ன பண்ணிருக்கார் பாருங்க!

அமெரிக்காவில் நடந்த மிட்-டெர்ம் தேர்தலுக்காகாக கூகுள் தனது லோகோவை மாற்றியுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    அமெரிக்க மிட்-டெர்ம் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

    நியூயார்க்: அமெரிக்காவில் நடந்த மிட்-டெர்ம் தேர்தலுக்காக கூகுள் தனது லோகோவை மாற்றியுள்ளது. இதற்கும் சர்கார் படத்திற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.

    அமெரிக்காவில் நேற்று மிட்-டெர்ம் தேர்தல்கள் நடைபெற்றது. இன்றும் பல மாகாணங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது.

    அமெரிக்காவில் அரசியல் மாற்றங்களை தீர்மானிக்கும் முக்கியமான தேர்தலாக இது பார்க்கப்படுகிறது. அமெரிக்காவில் நடக்கும் அதிபர் தேர்தலுக்கு நிகராக இந்த தேர்தல் பார்க்கப்படுகிறது.

    அமெரிக்க அரசியல் கட்சிகளின் சின்னமாக யானை, கழுதை வந்தது எப்படி அமெரிக்க அரசியல் கட்சிகளின் சின்னமாக யானை, கழுதை வந்தது எப்படி

    கூகுள் நீக்கியது

    இந்த தேர்தலில் கூகுள் முக்கிய பங்கு வகித்தது என்று கூட குறிப்பிடலாம். கூகுள் இந்த தேர்தல் தொடங்கும் முன்பே பொய்யான செய்திகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியது. அதேபோல் இந்த தேர்தல் தொடர்பாக இணையத்தில் உலவிய பொய்யான எல்லா செய்திகளையும் கூகுள் எளிதாக நீக்கியது.

    என்ன செய்தது

    இந்த நிலையில்தான் கூகுள் தனது லோகோவை நேற்று அதிரடியாக மாற்றியது. மொத்தமாக கூகுள் என்பதை மாற்றிவிட்டு, கோ வோட் (போய் ஓட்டு போடுங்க) என்று கூறியது. கூகுள் வெளியிட்ட டூடுல் மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது.

    என்ன வசதி

    இதில் உள்ள லோகோவை கிளிக் செய்தால், அது அமெரிக்க வாக்காளர்களை வேறு ஒரு பக்கத்திற்கு அழைத்து செல்லும். அங்கு நமது முகவரியை பதிவிட்டால் நாம் எங்கு ஓட்டு போட வேண்டும் என்று நமக்கு ஆலோசனை வழங்கும். அதேபோல் பல மொழிகளில் எப்படி வாக்களிக்க வேண்டும் என்று ஆலோசனையும் வழங்கி உள்ளது.

     என்ன தொடர்பு

    என்ன தொடர்பு

    இந்த நிலையில் இந்த லோகோவிற்கும் சர்கார் படத்திற்கும் ஒரு தொடர்பு உள்ளது என்பதுதான் குறிப்பிடத்தக்கது. சர்கார் படத்தில் விஜயின் பெயர் சுந்தர் ராமசாமி, பெரிய கார்ப்ரேட் முதலையான அவர் மக்களை போய் ஓட்டு போட சொல்வார். அதேபோல் கூகுளின் சுந்தர் பிச்சை ( சுந்தர் - சுந்தர் அடடே!) மக்களை சென்று வாக்களிக்கும்படி கோரிக்கை வைத்துள்ளார்.

    English summary
    Google made a Go Vote logo for US Mid Term Elections.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X