விண்வெளியில் மனிதர்களை துரத்தும் 'கொரில்லா..' விண்கலத்தில் அட்டகாசம்.. நாசா வெளியிட்ட வீடியோ
சர்வதேச விண்வெளி மையத்தில் கொரில்லா குரங்கு அட்டகாசம் செய்யும் வீடியோ வைரலாகியுள்ளது.
நியூயார்க்: சர்வதேச விண்வெளி மையத்தில் கொரில்லா குரங்கு அட்டகாசம் செய்யும் வீடியோவை நாசா வெளியிட்டுள்ளது.
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமாக நாசா விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. நாசா சார்பில் விண்வெளியில் தங்கி ஆராய்ச்சி மேற்கொண்டு வரும் விண்வெளி வீரர்கள் அவ்வப்போது ஆச்சரியமூட்டும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம்.
அந்த வகையில் நாசாவின் சார்பில் சர்வதேச விண்வெளி மையத்தில் பணியாற்றி வரும் விண்வெளி வீரர் ஸ்காட் கெல்லி, புத்தாண்டையொட்டி தனது சமூகவலைதளப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கொரில்லா குரங்கு ஒன்று விண்வெளி வீரர் ஒருவரை துரத்துகிறது.

விண்கலத்தில் கொரில்லா
விண்கலத்தினுள் ஏதோ ஒரு பார்சலை ஆய்வு செய்து கொண்டிருக்கிறார். அதில் இருந்து திடீரென கொரில்லா குரங்கு ஒன்று வெளி வந்து அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. அந்த கொரில்லா குரங்கு விண்வெளி வீரர் ஒருவரை முன்னும் பின்னுமாக துரத்துகிறது.

கொரில்லாவின் அட்டகாசம்
இந்த வீடியோவை பகிர்ந்த ஸ்காட் கெல்லி தனது சகோதரரும் முன்னாள் விண்வெளி வீரருமான மார்க் கெல்லி விண்வெளிக்கு சென்ற போது கொரில்லா குரங்கு ஒன்றை கடத்தி வந்துவிட்டதாக காமெடியாக குறிப்பிட்டுள்ளார். அது தான் தற்போது விண்கலத்தில் அட்டகாசம் செய்து கொண்டிருக்கிறது என அவர் தெரிவித்துள்ளார்.

உண்மை என்ன?
உண்மையில் ஸ்காட் கெல்லி தான் கொரில்லா போல் உடையணிந்து விண்கலத்தில் அட்டகாசம் செய்து கொண்டிருக்கிறார். புத்தாண்டை வரவேற்க பூமியில் இருந்து கொரில்லா உடையை விண்வெளிக்கு வரவழைத்துள்ளார் ஸ்காட் என பிரபல ஆங்கில பத்திரிகையில் தகவல் வெளியாகியுள்ளது.
Astronaut Mark Kelly once smuggled a full gorilla suit on board the International Space Station.
— Rex Chapman🏇🏼 (@RexChapman) December 30, 2020
He didn't tell anyone about it.
One day — without anyone knowing — he put it on...pic.twitter.com/NdnncK0I4U
நெட்டிசன்கள் அதிர்ச்சி
ஸ்காட் வெளியிட்ட இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் விண்வெளியில் கொரில்லா குரங்கா என அதிர்ச்சியில் வாயடைத்து போய்விட்டனர். அந்த அளவுக்கு மிகவும் தத்ரூபமாக செய்திருக்கிறார் ஸ்காட். கிராவிடி படத்தில் வருவது போன்று இருக்கிறதே என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications