அமெரிக்காவின் மூக்கை உடைத்த ஹமாஸ்.. ஒரே போடு.. இஸ்ரேலும் ஆடிப்போயிடுச்சு.. வருது உலகப் போர் 3?

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: பாலஸ்தீனத்தில் விடுதலைக்காக போராடி வரும் ஹமாஸ் குழு அமெரிக்காவிற்கு எதிராக அதிர்ச்சி முடிவை எடுத்துள்ளது. அதன்படி அமெரிக்காவின் மேற்பார்வையில் இஸ்ரேல் உடன் நடந்த பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட முடிவுகளை ஏற்க முடியாது என்று ஹமாஸ் அறிவித்து உள்ளது.

அதாவது போர் நிறுத்த ஒப்பந்தங்களை ஏற்றுக்கொள்ள மாட்டோம். பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கோரிக்கையின் பெயரில் எடுக்கப்பட்ட முடிவுகளை ஏற்றுக்கொள்ள மாட்டோம். போர் நிறுத்தும் வாய்ப்பே இல்லை. ஹமாஸ் சிறைபிடித்து உள்ள இஸ்ரேல் படைகளை விடுதலை செய்தால்.. போர் நிறுத்தம் செய்வோம் என அமெரிக்காவின் வாக்குறுதி அடிப்படையில் இஸ்ரேல் பேச்சுவார்த்தை செய்தது.

israel palestine israel palestine war international

ஆனால் இந்த பேச்சுவார்த்தை முடிவுகளை ஏற்றுக்கொள்ள முடியாது. இஸ்ரேல் மீது கண்டிப்பாக போர் தொடுப்போம் என்று ஹமாஸ் தெரிவித்து உள்ளது.

உலகப்போர் வாய்ப்பு: இப்படிப்பட்ட நிலையில்தான் உலகப்போருக்கான வாய்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.. போர் தொடங்குவதற்கான சதவிகிதம் புதிய உச்சத்தை தொட்டுள்ளதாக பிரபல கோடீஸ்வர ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனிய போராளிக் குழுக்களுக்கும் இடையே நடக்கும் போர், உக்ரைன் ரஷ்யா போர், தென் கொரியா வடகொரியா போர் காரணமாக உலகப் போர் மூளும் அபாயங்கள் ஏற்பட்டு உள்ளன.. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 35 சதவீதமாக இருந்த ஒரு முழு உலகப் போருக்கான வாய்ப்புகளை 50 சதவீதமாக அதிகரித்துள்ளது என்று அமெரிக்க பில்லியனர் மற்றும் ஹெட்ஜ் நிதி வழிகாட்டியான ரே டாலியோ தெரிவித்துள்ளார்.

இந்தப் போர் பல நாடுகளில் பல்வேறு வகையான மோதல்களுக்கு வழிவகுக்கும் அதிக ஆபத்து உள்ளது, மேலும் இது இஸ்ரேல் மற்றும் காசாவில் உள்ளவர்களுக்கும் அப்பால் போரை உருவாக்கும் வாய்ப்புகள் உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.. இதில் போருக்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. முக்கியமாக சிறிய உலகபோராக இல்லாமல் இது பெரிய உலகபோராக் மாறலாம். பல வல்லரசு நாடுகள் கூட இதில் கலந்து கொள்ளும் அபாயம் உள்ளது.

கொரியா போர்: வட கொரியாவில் இருந்து தென்கொரியாவிற்கு சொந்தமான தீவில் திடீரென பீரங்கி தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. 200 க்கும் மேற்பட்ட பீரங்கி குண்டுகளை வீசி வடகொரியா தாக்குதல் நடத்தி உள்ளது என்று சியோலின் பாதுகாப்பு அமைச்சகம் கூறி உள்ளது. இந்த நடவடிக்கைகள் அமைதிக்கு அச்சுறுத்தல் விளைவிப்பதாக இருப்பதாகவும் அதற்கு பதிலடி கொடுக்கப்படும் என்றும் தென்கொரியா கூறி உள்ளது. .

தென் கொரியாவிற்கு சொந்தமான Baengnyeong தீவின் வடக்கு பகுதிகள் மற்றும் Yeonpyeong தீவு ஆகிய இரண்டு தீவுகளில் இந்த தாக்குதல் வடகொரியா மூலம் நடத்தப்பட்டு உள்ளது.

2010 ஆம் ஆண்டில் இருந்தே இந்த தீவுகளில் பதற்றம் நிலவி வருகிறது. 2010ல் இந்த தீவுகளின் மீது வடகொரியா சரமாரியாக குண்டுகள் வீசியதில் இருந்து இரு கொரியாக்களுக்கும் இடையே அங்கே பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இதை சுற்றி உள்ள கடல் பகுதிகளில் மிகத் தீவிரமான இராணுவ பாதுகாப்பு போடப்பட்டு கடந்த 13 ஆண்டுகளாக போர் எதுவும் நடக்காமல் பதற்றமான சூழ்நிலை நிலவி வந்தது.

இந்த நிலையில்தான் அங்கே திடீரென வடகொரியா பீரங்கி தாக்குதல் நடத்தி உள்ளது. தென் கொரியா மற்றும் அதன் அமெரிக்க நட்பு நாடுகளுக்கு எதிரான போருக்கு தயாராக இருப்பதாக வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் கடந்த சனிக்கிழமை எச்சரிக்கை விடுத்து இருந்தார். இந்த எச்சரிக்கையை தொடர்ந்தே தற்போது இந்த தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.

தென்கொரியாவிற்கும் வடகொரியாவிற்கும் இடையிலான பிரச்சனை தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. கடந்த சில வருடம் முன்புதான் இரண்டு நாட்டு அதிபர்கள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள், இரண்டு நாட்டு அதிபர்களும் ஒன்றாக எல்லைகளை கடந்து நட்பை வெளிப்படுத்தினார்கள்.

ஆனால் தற்போது கடந்த ஒரு மாதமாக வடகொரியா மற்றும் தென்கொரியா இடையே மிக தீவிரமாக சண்டை நடந்து வருகிறது. இப்போது இந்த பிரச்சனை போராக மாற வாய்ப்புள்ளது என்றும் கூறுகிறார்கள்.

உக்ரைன் - ரஷ்யா, இஸ்ரேல் - பாலஸ்தீன போர்; போர் எல்லை மீறி சென்று கொண்டு இருக்கிறது. முழுமுதற் போராக மாறும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. ஒரு முழுமையான உலகப் போரின் முதன்மையான ஆபத்து பற்றி கேட்டால் அமெரிக்காவும் சீனாவும் நேரடி மோதலில் ஈடுபடுவதற்கான சாத்தியக்கூறு என்றுதான் சொல்வேன். இந்த இரண்டு இரண்டு நாடுகள் நேரடியாக போரில் ஈடுபட்டால் கண்டிப்பாக இது உலகப்போராக மாறும். ஆனால் இப்போதைக்கு சீனா இதில் நேரடியாக மூக்கை நுழைக்கவில்லை.

ஆனால் அது நடக்கும் பட்சத்தில் கண்டிப்பாக போர் கையை மீறி போகும் வாய்ப்புகள் உள்ளன. இந்த இரண்டு போர்களும் (இஸ்ரேல்-ஹமாஸ் போர் மற்றும் ரஷ்யா-உக்ரைன் போர்) நேரடியாக ஈடுபட்டுள்ள நாடுகளுக்கு இடையே மட்டும் இல்லை என்பதை நாம் உணர வேண்டும் - இந்தப் போர்கள் புதிய உலக ஆர்டரை உருவாக்கும் போராக மாற போகிறது. அவை பெரிய விளைவுகளை ஏற்படுத்தும். இந்த இரண்டு போர்களும் போரில் ஈடுபட்டு உள்ள நாடுகளின் நட்பு நாடுகளுக்கும் நிறைய பாதிப்பை ஏற்படுத்தும், என்று எச்சரித்து உள்ளார்.

இஸ்ரேல் - பாலஸ்தீனம் போரில் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு உலக நாடுகளை உள்ளே கொண்டு வர இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தீவிரமாக முயன்று வருவதாக உலக அரசியல் வல்லுனர்கள் விமர்சனம் வைத்துள்ளனர்.

இஸ்ரேலியப் படைகள் கடந்த வாரம் சிரியா தலைநகர் டமாஸ்கஸ் மற்றும் சிரியா வடக்கு நகரமான அலெப்போவில் உள்ள விமான நிலையங்கள் மீது நேரத்தில் ஏவுகணைத் தாக்குதல்களை இஸ்ரேல் நடத்தியது. அங்கு உள்ள ஓடுபாதைகளை சேதப்படுத்தியதாகவும், இரண்டு குடியிருப்புகள் அருகே ராக்கெட் தாக்குதல் நடத்தியதாகவும் கூறியது.

சிரியா தாக்குதல்: சிரியாவின் இந்த குற்றச்சாட்டை இஸ்ரேல் மறுக்கவில்லை. ஏற்கவும் இல்லை. ஏகப்பட்ட ராக்கெட்டுகளை இஸ்ரேல் மாறி மாறி சிரியா மீது ஏவியதாக கூறப்படுகிறது. சிரியாவில் ஹெஸ்புல்லா படையினர் உள்ளனர். ஈரான் ஆதரவு போராளிகள் உள்ளனர். இவர்கள்தான் பாலஸ்தீனத்தில் ஹமாஸ் படைக்கு உதவி செய்வதாக கூறப்பட்டது. இவர்களின் ஆதரவின் பெயரிலேயே ஹமாஸ் படைகள் இயங்கி வருகிறது. இந்த நிலையில்தான் சிரியா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி உள்ளது.

இது போக தெற்கு லெபனான் மீது ஏற்கனவே இஸ்ரேல் தாக்குதல் நடத்தி உள்ளது. இதனால் போர் தற்போது மத்திய கிழக்கு நாடுகளின் போராக மாறுமோ என்ற கேள்வி எழுந்துள்ளது. இப்படி சிரியா, லெபனான் மீது தாக்குதல் நடத்துவதன் மூலம் இஸ்ரேல் - பாலஸ்தீனம் போரில் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு உலக நாடுகளை உள்ளே கொண்டு வர இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தீவிரமாக முயன்று வருவதாக உலக அரசியல் வல்லுனர்கள் விமர்சனம் வைத்துள்ளனர்.

என்ன பிளான்?: ஏற்கனவே சிரியா போரில் ஈரானுக்கு எதிராக அமெரிக்கா போரிட்டு வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் சிரியா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால்.. ஈரான் போருக்கு உள்ளே வரும். வேறு வழியின்றி கட்டாயத்தின் பெயரில் அமெரிக்காவும் போருக்குள் வரும். இப்படி அமெரிக்காவை போருக்குள் கொண்டு வருவதற்கு திட்டமிட்டே இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு இப்படி செய்கிறாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+