Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

யார் சாமி இவன்! அச்சு அசலாக அர்னால்டு, டாம் க்ரூஸை போல முகத்தை மாற்றும் நபர்.. வாவ் வீடியோ

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: ஹாலிவுட்டில் பிரபல நகைச்சுவை நடிகரான பில் ஹேடர் என்பவர் ஒரு சில நொடிகளிலேயே தனது முகத்தை அச்சு அசலாக பிரபல நடிகர்களை போல மாற்றி மிரட்டி வருகிறார்.

அர்னால்டு ஸ்வாசினேக்கர், டாம் க்ரூஸ் போன்ற நடிகர்களின் முகங்களை அப்படியே நம் கண் முன் கொண்டு வந்து அனைவரையும் வியப்பிலும், மிரட்சியிலும் ஆழ்த்தி விடுகிறார்.

முதலில் பில் ஹேடரின் இந்த செயல்களை 'கிராஃபிக்ஸ்' என்றே பலரும் நினைத்தனர். ஆனால் பல மேடைகளிலேயே தோன்றி மக்களின் கண் முன்பே தனது இந்த திறமையை நிரூபித்து காட்டியுள்ளார் பில் ஹேடர்.

'சூப்பர் பவர்'மனிதர்கள்

'சூப்பர் பவர்'மனிதர்கள்

பொதுவாக, மனிதர்களையே இரண்டு வகைகளாக பிரித்துக் கொள்ளலாம். ஒன்று சாதாரணமானவர்கள். இன்னொரு ரகம் அசாதாரண திறமைகளை கொண்டவர்கள். அசாதாரண திறமைகள் என்றால் 'சூப்பர் பவர்' என வைத்துக் கொள்ளலாம். மனிதர்களின் என்ன 'சூப்பர் பவர்' என கேட்கிறீர்களா? ஆம்., சூப்பர் பவர் கொண்ட மனிதர்களும் நம்மிடையே வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றனர். உதாரணமாக மின்சாரத்தை தொடும் மனிதர், எந்த மனிதனாலும் அசைக்க கூட முடியாத பல மடங்கு எடைகளை தூக்கும் இளைஞர், சுவரில் வெறும் கைகளை கொண்டே ஏறும் 'ஸ்பைடர் மேன்' மனிதர், எக்ஸ் ரே கண்களை கொண்ட பெண் என இயற்கையாகவே சூப்பர் பவர் கொண்ட மனிதர்கள் இந்த உலகில் வாழ்ந்து வருகிறார்கள். இதுதொடர்பாக ஒரு ஆங்கிலத் தொலைக்காட்சி பல ஆண்டுகளுக்கு முன்பு 'டாக்குமண்ட்ரி' (Documentry) ஒன்றையே ஒளிபரப்பியது.

ஹாலிவுட் நடிகர் பில் ஹேடர்

ஹாலிவுட் நடிகர் பில் ஹேடர்

இவ்வாறு அசாதாரண திறமைகளை கொண்ட நபர்களின் பட்டியலில் இணைந்திருக்கிறார் பில் ஹேடர் என்ற ஹாலிவுட் நகைச்சுவை நடிகர். மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வந்த ஹேடருக்கு நடிப்பு மீது அலாதியான பிரியம் இருந்திருக்கிறது. தனது 5 வயதில் இருந்தே தொலைக்காட்சியில் வரும் கார்ட்டூன் கதாபாத்திரங்கள் மற்றும் நடிகர்களை போல நடிப்பதும், பேசுவதும் பில் ஹார்டரின் பொழுதுபோக்காக இருந்துள்ளது. முதலில் அவரது திறமையை சாதாரணமாக பார்த்த அவரது பெற்றோர், பின்னர் கூர்ந்து கவனிக்க தொடங்கியதும் அசந்துவிட்டனர். ஏனெனில், அந்த கதாபாரத்திரங்கள் செய்வதை போன்றே அச்சு பிசகாமல் செய்திருக்கிறார் பில் ஹேடர்.

நடிப்பில் 'கில்லி'

நடிப்பில் 'கில்லி'

பின்னர் பில் ஹேடர் தனது இந்த திறமையை பள்ளி, கல்லூரிகளில் நடக்கும் கலை நிகழ்ச்சிகளிலும் செய்து காண்பிக்க, அவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உருவாகியது. அப்போதுதான் அவரது நண்பர்கள், "நீ ஏன் ஹாலிவுட்டில் நடிக்கக் கூடாது" எனக் கேட்டுள்ளனர். இதையடுத்து, வெறித்தனமாக ஹாலிவுட் சினிமா வாய்ப்புக்காக முயற்சித்தார் பில் ஹேடர். பல வருட கடின உழைப்புக்கும், கஷ்டங்களுக்கும் பிறகு, அவருக்காக கதவை திறந்தது ஹாலிவுட். இப்போது நகைச்சுவை நடிகராகவும், குணச்சித்திர நடிகராவும் பில் ஹேடர் அசத்தி வருகிறார். எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை கச்சிதமாக செய்து முடிப்பதே பில் ஹேடரின் சிறப்பம்சம்.

 அர்னால்டு, டாம் க்ரூஸ் முகங்கள்

அர்னால்டு, டாம் க்ரூஸ் முகங்கள்

இந்நிலையில், சில வருடங்களுக்கு முன்பு அமெரிக்காவில் ஒரு பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பில் ஹேடர் கலந்துகொண்டார். அப்போது தொகுப்பாளர், நடிப்பை தவிர வேறு என்ன திறமை உங்களுக்கு இருக்கிறது? எனக் கேட்டார். அதற்கு பிபில் ஹேடர், "சில நடிகர்களை போல என்னால் முகத்தை மாற்ற முடியும்" எனக் கூறியிருக்கிறார். இதனைக் கேட்டவர்கள், ஏதோ அவர் மிமிக்ரி செய்வார் அல்லது அவர்களை போல நடித்துக் காட்டுவார் என நினைத்து அசால்ட்டாக இருந்தனர். ஆனால், பில் ஹேடர் அடுத்த சில நிமிடங்களில் செய்த செயல்கள் தொகுப்பாளர், அங்கிருந்த பார்வையாளர்கள், தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களை பயத்தில் கூச்சலிடச் செய்தது. ஏனெனில், பில் ஹேடர் பேசிக்கொண்டிருக்கும் போதே, நடிகர் அர்னால்டு ஸ்வாசினேக்கர் எவ்வாறு பேசுவார் தெரியுமா எனக் கூறிய சில நொடிகளில் அவரது முகம் அர்னால்டு ஸ்வாசினேக்கரை போலவே அச்சு அசலாக மாறியது. அதேபோல, பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸே வந்து உட்கார்ந்ததை போல பில் ஹேடர் தனது முகத்தை மாற்றினார். இதேபோல, பல நடிகர்களின் முகத்தை அப்படியே கொண்டு வந்தார் பில் ஹேடர்.

கதாபாத்திரத்தை உள்வாங்குவதே விஷயம்

கதாபாத்திரத்தை உள்வாங்குவதே விஷயம்

இதுகுறித்து அவரிடம் கேட்ட போது, "சிறந்த நடிகனாக வர வேண்டும் என்பதுதான் எனது சிறு வயது ஆசை. இதற்காக பல கதாபாத்திரங்களை காப்பி செய்து அதை வீட்டில் செய்து பார்ப்பேன். பின்னர் நடிகனாக மாறியதும், எனக்கு சொல்லப்படும் கதாபாத்திரங்களை உள்வாங்கிக் கொண்டு 'ஹோம் ஒர்க்' செய்வேன். அப்படி ஒரு முறை, அர்னால்டு ஸ்வாசினேக்கரை ஒரு திரைப்படத்தில் வருவதை போல கண்ணாடியை பார்த்து பேசினேன். எனக்கே எனது கண்களை நம்ப முடியவில்லை. உண்மையிலேயே அர்னால்டு போலவே எனது முகம் மாறியது. இதேபோல பல நடிகர்களை காப்பி செய்த போது அவர்களின் முகம் எனக்கு வந்தது. இதுகுறித்து மருத்துவரிடம் கேட்ட போது அவர்களே முதலில் பயந்துவிட்டனர். நடித்து நடித்து, எனது முகத் தசைகள் மிகவும் நெகிழ்வுத்தன்மையாக மாறிவிட்டதாகவும், கதாபாத்திரத்தை உள்வாங்க பழகிவிட்டதால் யார் முகம் வேண்டுமோ அந்த முகம் எனக்கு வந்துவிடுவதாகவும் மருத்துவர்கள் கூறினர்" என பில் ஹேடர் கூறினார். பார்க்க நமக்கே கொஞ்சம் பயமாகதான் இருக்கிறது..!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+