இதுதான் போர்பன் தெரு.. நியூ ஆர்லியன்ஸில் சாலை எங்கும் உடல்கள்.. அமெரிக்காவை உலுக்கிய காட்சிகள்

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸ் நகரில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது கூட்டத்திற்குள் அதிவேகத்தில் வாகனத்தை ஓட்டி வந்தநபரால் மோசமான உயிர் பலி ஏற்பட்டுள்ளது. சாலை எங்கும் மனித உடல்களும், மக்கள் காயம் அடைந்து சிதறி கிடக்கும் காட்சிகளும் வெளியாகி காண்போரை கலங்க வைத்துள்ளது. புத்தாண்டு நாளில் நடந்த மோசமான சம்பவம் ஒட்டுமொத்த அமெரிக்காவையும் உலுக்கியுள்ளது

அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு கொண்டாட்டம் மிகப்பெரிய அளவில் களைகட்டும். ,இன்று காலை 2025 புத்தாண்டு பிறந்த நிலையில், அமெரிக்காவில் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள மாநிலமான லூசியானாவில் உள்ள நியூ ஆர்லியன்ஸ் நகரிலும் வழக்கம் போல் புத்தாண்டு கொண்டாட்டம் களை கட்டியது. நியூ ஆர்லியன்ஸ் நகரில் உள்ள போர்பன் தெருவில் புத்தாண்டை கொண்டாடுவதற்காக சாலையில் ஏராளமான மக்கள் கூடியிருந்தனர். புததாண்ட்டை உற்சாகமாக கொண்டாடிக் கொண்டிருந்தாரகள்,

usa new year accident

அப்போது திடீரென வேண்டுமென்றே சிறிய டிரக்கை (கார் வடிவில் இருக்கும் சரக்கு வாகனம்) ஒட்டி வந்த டிரைவர், புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது அதிவேகமாக மோதினார். இதனை விபத்து என்று நினைத்த மக்களுக்கு, பின்னர் தான் புரிந்தது பயங்கரவாத தாக்குல் என்று... தடுப்புகளை உடைத்துக் கொண்டு கண் இமைக்கும் நேரத்தில் மக்கள் மீது வாகனம் ஏறி இறங்கியதால் 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர் . இந்த மோசமான பயங்கரவாத சம்பவத்தை நிகழ்த்திய டிரைவரை போலீசார் சுட்டுக்கொன்றனர். இந்நிலையில் போர்பன் தெருவில் சாலை எங்கும் பிணங்களும், காயம் அடைந்தவர்களும் சிதறி கிடக்கும் காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

usa new year accident

அந்த வீடியோவில் போலீஸ் வாகனங்கள், மனித உடல்கள், காயம் அடைந்தவர்கள் அதிகமாக இருப்பது தெரிகிறது. இதனிடையே காயம் அடைந்த அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வாகனத்தை இயக்கி பலரை கொன்ற டிரைவர், வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடையவரா என்று தீவிர விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவத்திற்கு பின்னணியில் உள்ளவர்கள் யார், அதன் பின்னணி என்ன என்பது குறித்து எப்பிஐ அமைப்பு விசாரித்து வருகிறது. இதனை பயங்கரவாத தாக்குதல் என்றும் எப்பிஐ அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+