Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆதி இதுதான்? 13 பில்லியன் ஆண்டுகள் பயணித்த ஒளி.. பிரபஞ்ச புகைப்படத்தை ஜேம்ஸ் வெப் எடுத்தது எப்படி?

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: கண்ணுக்கே தெரியாத அணுவை பிளந்து ஆயுதம் உருவாக்கியது தொடங்கிய கடவுள் துகளை வைத்து ஹிக்சும் - போஸும் ஆட்டம் போட்டது வரை மனித குலம் ஏகப்பட்ட கண்டுபிடிப்புகளை, சாதனைகளை நிகழ்த்தி இருக்கிறது. ஆனாலும் ஒவ்வொரு முறையும் நிகழ்த்தப்படும் புதிய கண்டுபிடிப்புகள்.. நாம் இதுவரை கண்டுபிடித்தது எல்லாம் ஒன்றுமே இல்லை என்று முகத்தில் அறைந்தார் போல சொல்லிவிடுகின்றன.. அப்படி இப்போது மனிதர்களை வியப்பிற்கு ஆழ்த்தி இருக்கும் அந்த கண்டுபிடிப்புதான்.. ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி எடுத்திருக்கும் பிரபஞ்ச கூட்டத்தின் புகைப்படம்! உலக விண்வெளி ஆராய்ச்சியாளர்களை, ஆர்வலர்களை இந்த படம் மெய்சிலிர்க்க வைத்துள்ளது.. அது ஏன்? வாருங்கள் பார்க்கலாம்!

Recommended Video

    James Webb Telescope எடுத்த முதல் புகைப்படங்களை வெளியிட்ட NASA | Science

    இந்த புகைப்படம் பற்றி தெரிந்து கொள்ளும் பின்வரும் அறிவியல் தகவலை கொஞ்சம் படித்துவிடுங்கள்.. இந்த கட்டுரை புரிய இன்னும் எளிதாக இருக்கும்.. ஒளி பொதுவாக ஒரு வருடத்தில் கடக்கும் தொலைவை ஒளி வருடம் என்று அழைப்பார்கள். அதாவது இன்று இரவு (பகலாக இருந்தாலும் ஓகே) நீங்கள் உங்கள் வீட்டு மொட்டை மாடியில் சென்று ஒரு டார்ச் லைட்டை வானத்தை நோக்கி அடிக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்.

    அது வானத்தில் பறந்து சென்று.. ஒரு வருடம் கழித்து எவ்வளவு தூரம் செல்கிறதோ அதுதான் ஒளி ஆண்டு. ஒரு ஒளி ஒரு ஆண்டில் மொத்தம் 9.461e+12 (10 பவர் 12) கிலோ மீட்டர் தூரம் செல்லும். நீங்கள் டார்ச்சை அணைத்துவிட்டாலும் நீங்கள் உருவாக்கிய அந்த ஒளி "போட்டான்கள்" வானத்தில் சென்று கொண்டேதான் இருக்கும்! இதுதான் சிம்பிள் லாஜிக்.

    சூரியன் ஒளி

    சூரியன் ஒளி

    இதை இன்னும் எளிமையாக இரண்டு எடுத்துக்காட்டு மூலம் சொல்ல முடியும். சூரியனை எடுத்துக்கொள்ளுங்கள். சூரியன் சுள்ளென்று 12 மணிக்கு சுட்டெரிக்கிறது. ஆனால் இந்த சூரிய ஒளி நம்மை வந்தடைய 8 நிமிடங்கள் ஆகும். ஒளி நொடிக்கு 186,000 மைல்கல் தூரம் செல்லும். அப்படி என்றால் 150 மில்லியன் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சூரியன் வெளியிடும் ஒளி நம்முடைய உச்சந்தலையை வந்தடைய 8 நிமிடங்கள் ஆகும். அதாவது 8 நிமிடத்திற்கு முன் சூரியன் வெளியிட்ட ஒளிதான் உங்கள் தலையில் அடிக்கிறது.

    நட்சத்திரம்

    நட்சத்திரம்

    இன்னொரு எடுத்துக்காட்டு சொல்ல வேண்டும் என்றால் நமது சூரிய குடும்பத்திற்கு வெளியே.. நமக்கு மிக அருகில் இருக்கும் நட்சத்திரம் என்றால் அது ப்ராக்சிமா செஞ்சுரி என்ற நட்சத்திரம். இது 4 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. அதாவது அந்த நட்சத்திரம் ஒளியை அனுப்பிய பின் அது நம்மை வந்தடைய 4 ஆண்டுகள் ஆகும். இதில் ஒரு சுவாரசிய செய்தியும் உள்ளது. அந்த நட்சத்திரத்தின் ஒளியை நீங்கள் பார்க்கும் போது அந்த நட்சத்திரம் அங்கே இருக்க வேண்டிய அவசியமே இல்லை. ஏனென்றால் 4 வருடம் கடந்துவிட்டதால் அது வேறு இடத்திற்கு நகரத்து, பல வட்டங்களை அடித்து இருக்கும். அதாவது நீங்கள் பார்ப்பது எல்லாம் வெறும் ஒளி.. நட்சத்திரத்தை அல்ல! பாரதி சொன்னது போல எல்லாம் தோற்ற மயக்கங்கள்தான்!

    தொடர்பு என்ன?

    தொடர்பு என்ன?

    சரி இந்த கதை எல்லாம் ஏன்? ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி பற்றி சொல்லுங்கள் என்று கேட்கிறீர்களா.. மேலே நீங்கள் படித்த அறிவியல் தகவலுக்கும் இந்த ஜேம்ஸ் வெப் புகைப்படத்திற்கு நெருங்கிய தொடர்பு இருக்கிறது. இந்த ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி அமெரிக்காவின் நாசா, ஐரோப்பாவின் ஈசா, கனடா விண்வெளி ஆராய்ச்சி மையங்கள் இணைத்து அனுப்பிய தொலைநோக்கி ஆகும். ஏற்கனவே விண்ணில் இருக்கும் hubble தொலைநோக்கியின் அப்டேட்டட் அண்ணன்தான் இந்த ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி.

    ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி

    ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி

    கடந்த டிசம்பரில் அனுப்பப்பட்ட இந்த ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி "பான் இந்தியா" படம் போல மிகவும் காஸ்ட்லியான பட்ஜெட் படம் ஆகும். 500 மில்லியன் பட்ஜெட்டை தாண்டி இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது! ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி மிக மிக பெரியது. 20.197 மீட்டர் நீளம். 14.162 மீட்டர் அகலம் கொண்டது. (66.26 ft × 46.46 ft). இதில் ஒரு பக்கம் தங்க முலாம் பூசிய சோலார் பேனல்கள் சூரிய ஒளி எதிர்ப்பு பில்டர்களும் இருக்கும். இதில் அகச்சிவப்பு கதிர்களை உமிழும் தகடுகள் இருக்கும். இதுதான் கிரகங்கள், நட்சத்திரங்களில் இருந்து ஒளி போட்டான்களை பிடித்து படங்களை எடுக்கும்.

     படம் எடுக்கும்

    படம் எடுக்கும்

    இது 270 டிகிரி வெப்பநிலையை தாங்கும் திறன் கொண்டது. இதன் மறுபக்கம் சூரியனுக்கு எதிர்ப்பக்கம் என்பதால் மைனஸ் 270 டிகிரி குளிர் வெப்பநிலையை தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் எடை 6,500 kg. ஐந்து வருடத்தில் முடிக்கலாம் என்று திட்டமிட்டு கடைசியில் கடந்த 20 வருடமாக பணிகளை மேற்கொண்டு இந்த தொலைநோக்கியை உருவாக்கி உள்ளனர்.. 1996இல் ஆரம்பிக்கப்பட்ட திட்டம் கடந்த டிசம்பரில் ஒருவழியாக முடிவிற்கு வந்து விண்ணுக்கு அனுப்பப்பட்டது.

    எங்கே இருக்கிறது?

    எங்கே இருக்கிறது?


    பூமியில் இருந்து அதிகபட்சம் 1,500,000 km தூரத்தில் இது நிலைநிறுத்தப்பட்டுள்ளது. பூமியில் இருந்து இது இருக்கும் குறைந்தபட்ச தொலைவே 374,000 km தூரம் ஆகும். சரி இந்த ஜேம்ஸ் வெப் எடுத்த புகைப்படத்தை பற்றி பார்க்கலாம்.

    ஜேம்ஸ் வெப் எடுத்த புகைப்படத்தை இன்றுதான் நாசா வெளியிட்டது. 5 மாதம் முன் புகைப்படம் வந்துவிட்டாலும்.. 5 நிமிடத்தில் இன்ஸ்டாவில் எடிட்டிங் செய்வது போல இதை செய்துவிட முடியாது. கலரிங். கிரெடிங் என்று பல வேலைகள் முடித்து இப்போதுதான் படம் வெளியாகிறது.. அந்த படம் தற்போது சோஷியல் மீடியாக்கள் அனைத்தையும் சின்னாபின்னமாக்கி டிரெண்டிங்கில் டாப்பில் இடம் பிடித்துள்ளது.

    படம்

    படம்

    குட்டி குட்டி நட்சத்திரங்கள், மினிமைஸ் செய்யப்பட்ட பிரபஞ்ச கூட்டங்கள், நட்சத்திர கூட்டங்கள் என்று எல்லாம் அடங்கிய புகைப்படம்தான் அது. ஒரு பிடி மண்ணை கையில் வைத்து உங்கள் தோள் பட்டையில் கேமரா வைத்து கையில் உள்ள மண்ணை போட்டோ எடுத்தால் எப்படி இருக்கும். அப்படித்தான் விண்வெளியில் ஒரு பிடி மண் அளவிற்கு உள்ள குறிப்பிட்ட பகுதியை மட்டும் படம் பிடித்து ஜேம்ஸ் வெப் அனுப்பி உள்ளதாக நாசா வர்ணித்து உள்ளது.

    பிரபஞ்ச கூட்டம்

    பிரபஞ்ச கூட்டம்

    இதுவரை எடுக்கப்பட்டதிலேயே பிரபஞ்ச கூட்ட படங்களில் இதுதான் மிக மிக தெளிவான படம் ஆகும். அமெரிக்க அதிபர் பிடன்தான் படத்தை வெளியிட்டார். இந்த படத்தில் இருப்பது ஒரு பிரபஞ்ச கூட்டம். விண்வெளியில், நட்சத்திரங்கள், கிரகங்கள், விண்கற்கள் எல்லாம் அடங்கியது பிரபஞ்சம். இப்படி பல பிரபஞ்சங்கள் அடங்கிய கூட்டம்தான் நீங்கள் படத்தில் பார்க்கும் பிரபஞ்ச கூட்டம். SMACS 0723 என்ற பிரபஞ்ச கூட்டம். வானத்தில் தெற்கு அரைக்கோளத்தில் இது இருக்கிறது.

    13 பில்லியன் ஒளி ஆண்டுகளுக்கு இந்த பிரபஞ்ச கூட்டத்தில் இருந்து வெளியான ஒளியைத்தான் இந்த ஜேம்ஸ் வெப் படம் பிடித்துள்ளது. அதாவது 13 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் இந்த பிரபஞ்ச கூட்டத்தில் இருந்து வந்த போட்டான் துகள்கள் இவ்வளவு காலம் பயணித்து இப்போது ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் அகச்சிவப்பு கதிர்களில் படிந்து படமாகி.. அதை நீங்கள் ஒன்இந்தியா தளத்தில் படித்துக்கொண்டு இருக்கிறீர்கள்!

    SMACS 0723

    SMACS 0723

    இப்போது புரிகிறதா ஒளி ஆண்டு குறித்து மேலே சொன்ன விளக்கம் ஏன் என்று.. ஆம் 13 பில்லியன் ஆண்டுகள் இந்த ஒளி பயணித்து உள்ளது. ஆகவே நாம் பார்க்கும் அந்த புகைப்படம் 13 பில்லியன் ஆண்டு பழமையானது. இதில் என்ன பெரிதாக இருக்கிறது என்று கேட்டால்.. பிக்பேங்.. அதாவது இந்த மொத்த உலகம் உருவானதாக கருதப்படும் பிக்பேக் (பெருவெடிப்பு) நிகழ்வு நடந்தது தோராயமாக 13.8 பில்லியன் ஆண்டுகளுக்கு முன். அதன்பின் 13.7 ஆண்டுங்களுக்கு முன் வரை உலகம் இருளாக இருந்தது.

    தோராயமாக 13.6-13.5 பில்லியன் ஆண்டுகள் வரை பல்வேறு பிரபஞ்சங்கள் தோன்றின. இப்போது ஜேம்ஸ் வெப் எடுத்துள்ள புகைப்படம் 13 பில்லியன் ஆண்டுக்கு முந்தயது. அதாவது பிரபஞ்சங்கள் தோன்றிய தொடக்க காலத்தில் அது எப்படி இருந்தது என்பதை ஜேம்ஸ் வெப் புகைப்படம் பிடித்துள்ளது. இப்போது புரிகிறதா அந்த புகைப்படம் ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது என்று. மீண்டும் ஒருமுறை படத்தை பாருங்கள் மெய் சிலிர்க்கும்.

     ஏன் முக்கியம்

    ஏன் முக்கியம்

    இந்த ஜேம்ஸ் வெப் இரண்டு விஷயங்களுக்காக விண்ணுக்கு அனுப்பப்பட்டது. ஒன்று வேற்று கிரகங்களில் இருக்கும் உயிர்களை கண்டுபிடிப்பது. இன்னொன்று 13.5 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த பிரபஞ்ச கூட்டங்களின் படத்தை எடுப்பது. இப்போது 13 பில்லியன் ஆண்டுகள் வரையிலான படத்தை ஜேம்ஸ் வெப். எடுத்துவிட்டது மேலும் 0.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய புகைப்படங்களும் (13.5 பில்லியன் ஆண்டுகள்) விரைவில் வெளியாகும்.

     தெளிவான புகைப்படம்

    தெளிவான புகைப்படம்

    கிட்டத்தட்ட இந்த பிக்பேக் ஏற்பட்டு வெறும் 700-800 மில்லியன் ஆண்டுக்கு பின் உருவான பிரபஞ்ச கூட்டங்களை நாம் இப்போது பார்த்துவிட்டோம். இதுவரை நாம் பார்த்ததிலேயே மிகவும் தெளிவான பிரபஞ்ச கூட்ட படம் இதுதான். மிக வலிமையான அகச்சிவப்பு லென்ஸ்கள் மூலம் இந்த போட்டோவை.. சிவப்பு கோடுகளாக ஜேம்ஸ் வெப் எடுத்து.. பின்னர் அந்த கோடுகளை நாசா இணைத்து படமாக மாற்றி உள்ளது. அதாவது கேமரா மேன் ஜேம்ஸ் வெப்.. எடிட்டிங் நாசா!

    அதிலும் இந்த படத்தை எடுக்க ஜேம்ஸ் வெப் எடுத்துக்கொண்ட நேரம் வெறும் 12.5 மணி நேரம்தான்! இதில் இன்னும் சில நிறங்களை சேர்த்து நாசா இனி வெளியிடும் என்று கூறி உள்ளது. வரும் நாட்களில் Carina Nebula, WASP-96b, the Southern Ring Nebula, Stephan's Quintet மற்றும் SMACS 0723 ஆகிய பிரபஞ்சங்கள் மற்றும் நட்சத்திர தொகுப்புகளின் புகைப்படங்களை ஜேம்ஸ் வெப் வெளியிடும்...அதன் மூலம் மேலும் பல உண்மைகள் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது! சரி சொல்லுங்கள்.. இவ்வளவு பெரிய பிரபஞ்சத்தில்.. இவ்வளவு பெரிய உலகத்தில்.. நாம் மட்டும்தான் இருப்போமா? ஐ மீன் பூமியில் மட்டும்தான் உயிரினங்கள் இருக்குமா?!

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+