கருப்பு ஜன்னல்.. குட்டி விமானம்! சீக்ரெட்டாக உக்ரைன் பறந்த பிடன்! ரஷ்யா கண்ணில் மண்ணை தூவியது எப்படி
உக்ரைன் அகதிகள் இருக்கும் சாலைகள் வழியாக இவர்கள் சாதாரண மக்கள் போல பயணம் மேற்கொண்டு உள்ளனர்.
நியூயார்க்: அமெரிக்க அதிபர் பிடன் நேற்று திடீரென உக்ரைன் சென்றது உலக அரசியலில் பெருமளவில் கவனம் பெற்றுள்ளது. இந்த பயணத்தை பிடன் மிகவும் சீக்ரெட்டாக திட்டமிட்டதாக வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நேற்று அமெரிக்க அதிபர் பிடன் உக்ரைன் தலைநகரம் கீவிற்கு திடீரென பயணம் மேற்கொண்டார். அங்கு உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி உடன் பிடன் நீண்ட நேரம் ஆலோசனை மேற்கொண்டார்.
ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர் குறித்து இவர்கள் நீண்ட நேரம் பேசி இருக்கின்றனர். போரின் தற்போதைய நிலை, ரஷ்யாவை சர்வதேச அளவில் ஒதுக்குவது, ரஷ்யாவிற்கு அழுத்தம் கொடுப்பது தொடர்பாக பல்வேறு விஷயங்களை ஆலோசனை செய்துள்ளனர்.

ஆலோசனை
கடந்த வருடம் மார்ச் மாதத்தில் உக்ரைன் - ரஷ்யா இடையிலான போர் தொடங்கியது. நேட்டோ படையில் உக்ரைன் இணைவதை தடுக்கும் வகையிலும், உக்ரைனில் அமெரிக்க ராணுவ தளவாடங்கள் அமைக்கப்படுவதை எதிர்க்கும் வகையிலும் ரஷ்யா திடீரென உக்ரைன் மீது போர் தொடுத்தது. முதல் 3 மாதங்கள் தீவிரமாக நடந்த போர் தற்போது விட்டு விட்டு நடத்தப்பட்டு வருகிறது. இரண்டு நாடுகளுமே போரில் பெரிய அளவில் முன்னேற்றம் அடையவில்லை. ரஷ்யா பெரிதாக உக்ரைன் நாட்டு நகரங்கள் எதையும் கைப்பற்றவில்லை. அப்படியே ரஷ்யா கைப்பற்றிய நகரங்களையும் கடந்த 2 மாதங்களில் பெரிய அளவில் இழந்துவிட்டது. இந்த போர் ஆப்கான் தாலிபான் போர் போல ஒரு முடிவில்லா போராக மாறிவிட்டது.

உக்ரைன்
இந்த போரில் உக்ரைனுக்கு ஆயுத உதவிகளை அமெரிக்கா செய்து வருகிறது. போரில் நேரடியாக பங்கு கொள்ள முடியாது என்பதால் ஆயுதங்களை மட்டும் வழங்கி போர் புரிந்து வருகிறது. இந்த நிலையில் அமெரிக்க அதிபர் பிடன் நேற்று திடீரென உக்ரைன் சென்றார். அவர் இப்படி திடீரென உக்ரைன் பயணம் மேற்கொண்டது, உலக அரசியலில் பெருமளவில் கவனம் பெற்றுள்ளது. இந்த பயணத்தை பிடன் மிகவும் சீக்ரெட்டாக திட்டமிட்டதாக வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அமெரிக்க நேரடிப்படி அதிகாலை 4 மணிக்கு ஞாயிற்றுக்கிழமை அதிபர் பிடன் ஏர் போர்ஸ் 757 விமானத்தில் ஏறி இருக்கிறார். இந்த விமானம் சி 32 என்றும் அழைக்கப்படும்.

சிறிய விமானம்
அமெரிக்க அதிபர்கள் எப்போதும் வெளிநாட்டு பயணத்தில் பயன்படுத்தும் விமானங்களை விட இது கொஞ்சம் சிறிய விமானம். அதோடு விமானத்தின் அனைத்து ஜன்னல்களும் இறுக்கமாக மூடப்பட்டு கருப்பாக காட்சி அளித்தது. உலக நாடுகள் எதற்கும் தெரியாமல் . உக்ரைன் அதிபரை தவிர யாருக்கும் தகவல் தெரிவிக்காமல் பிடன் பறந்துள்ளார். இதனால் ரஷ்யாவிற்கு பிடன் செல்வது பற்றிய சின்ன க்ளூ கூட கிடைக்கவில்லை. பிடனுடன் சிறிய ஆர்மி டீம், ஒரு மெடிக்கல் டீம், 2 செய்தியாளர்கள், 2 ஆலோசகர்கள் மட்டும் சென்றுள்ளனர். இந்த இரண்டு செய்தியாளர்களும் ரகசிய காப்பு ஒப்பந்தத்திலும் கையெழுத்து போட்டனர். பிடனுக்கு எதுவும் ஆகும் பட்சத்தில் அதை செய்தியாக, நம்பகத்தன்மையுடன் வெளியிட இந்த ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.

என்ன ரூட்
இவர்கள் அமெரிக்காவின் வாஷிங்க்டன் ராணுவ தளத்தில் இருந்து ஜெர்மனி வழியாக சென்றுள்ளனர். ஜெர்மனியில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தில் எரிபொருள் நிரப்பி உள்ளனர். உள்ளே இருந்து வெளியே யாரும் அந்த நேரத்தில் செல்லவில்லை. அதன்பின் போலந்து சென்றுள்ளனர். அங்கே இருந்து பின்னர் இவர்கள் உக்ரைனுக்கு ரயிலில் பயணம் மேற்கொண்டு உள்ளனர். இதற்காக அந்த விமான நிலையத்தில் இருந்து எஸ்யுவி கார்களில் இவர்களில் பயணம் மேற்கொண்டு உள்ளனர். சைரன் இல்லாமல், அமைதியாக காரில் சென்று ரயில் நிலையத்தை அடைந்து உள்ளனர். போலந்தில் உள்ள ரயில் நிலையம் ஒன்றில் இருந்து ரயிலில் உக்ரைன் பார்டர் சென்று அங்கிருந்து பின்னர் மீண்டும் காரில் சென்றுள்ளனர்.

உக்ரைன்
உக்ரைன் அகதிகள் இருக்கும் சாலைகள் வழியாக இவர்கள் சாதாரண மக்கள் போல பயணம் மேற்கொண்டு உள்ளனர். ஆனால் மக்களோடு மக்களாக அமெரிக்காவின் பாதுகாப்பு படை வீரர்களும் மப்டியில் இருந்துள்ளனர். இந்த கார் பயணம் வழியாக அவர்கள் உக்ரைன் தலைநகரை அடைந்து உள்ளார். 10 மணி நேரம் ரயில் பயணத்தை பிடன் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. இரவில் ரயில் ஏறியவர்கள் திங்கள் கிழமை அதிகாலைதான் உக்ரைன் வந்தனர். அதன்பின் போர் பாதிக்கப்பட்ட பகுதி வழியாக காரில் சென்று கீவ் பகுதியை அடைந்தனர். இதன்பின்பே 9 மணி அளவில் பிடன் அதிபர் செலன்ஸ்கியை சந்தித்தார்.












Click it and Unblock the Notifications