நிக்கோலஸ் மதுரோவை வேவு பார்த்த டீம்.. சிஐஏ ஆபரேஷன்.. வெனிசுலாவை அமெரிக்கா கைப்பற்றியது எப்படி?
நியூயார்க்: அமெரிக்க சிறப்புப் படைகளின் "ஆபரேஷன் அப்சல்யூட் ரிசால்வ்" நடவடிக்கை மூலம் ஜனவரி 3, 2026 அன்று வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா ஃபுளோரஸ் கரகஸில் இருந்து கடத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பான ஏஐ விளக்க காட்சிகள் இங்கே கொடுக்கப்பட்டு உள்ளன.
அவரை கைது செய்வதற்காக பல மாதங்களாகவே அமெரிக்க உளவாளிகள் வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவின் ஒவ்வொரு அசைவையும் கண்காணித்து வந்தனர். 63 வயதான அவரது துாக்கம், உணவு, உடை, செல்லப்பிராணிகள் பற்றிய தகவல்கள் அரசு வட்டாரம் உட்பட ஒரு குழுவால் சேகரிக்கப்பட்டன.
மாதக்கணக்கிலான திட்டமிடல், ஒத்திகைகளுக்குப் பின், 'ஆபரேஷன் அப்சல்யூட் ரிசால்வ்' திட்டம் டிசம்பர் தொடக்கத்தில் இறுதி செய்யப்பட்டது. இதில், அமெரிக்கத் துருப்புக்கள் மதுரோவின் கராகஸ் பாதுகாப்பு இல்லத்தின் மாதிரியை உருவாக்கி, தாக்குதல் நடத்துவதற்காக பயிற்சி செய்தன.
வெனிசுலா மீது தாக்குதல் நடந்தது எப்படி?
பனிப்போருக்குப் பின் லத்தீன் அமெரிக்காவில் இதுவே முதல் பெரிய அமெரிக்க ராணுவ நடவடிக்கை. இதை ரகசியமாக வைத்திருந்தனர். காங்கிரசுக்கும் அறிவிக்காமல், சரியான சூழலுக்காக ராணுவ அதிகாரிகள் காத்திருந்தனர்.

தாக்குதலின் துல்லியத்தை பாதுகாக்க நல்ல வானிலைக்காகக் காத்திருந்தனர். அதிபர் டிரம்ப் நான்கு நாட்களுக்கு முன்பே ஒப்புதல் அளித்த போதிலும், மேகமூட்டம் குறைந்த நாளுக்காக காத்திருந்தனர் என அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர்.
"கிறிஸ்துமஸ், புத்தாண்டு முழுவதும், அமெரிக்க ராணுவ வீரர்கள் சரியான சமிக்ஞைகள் மற்றும் அதிபரின் உத்தரவுக்காகப் பொறுமையாகக் காத்திருந்தனர்," என்று நாட்டின் மிக உயர்ந்த ராணுவ அதிகாரியான ஜெனரல் டேன் கைன் சனிக்கிழமை செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
மிஷன் தொடங்குவதற்கான அதிபரின் உத்தரவு வெள்ளிக்கிழமை இரவு 10:46 EST மணிக்கு (சனிக்கிழமை GMT காலை 3:46) வந்தது. "இதை மூன்று, நான்கு நாட்களுக்கு முன்பே திட்டமிட்டோம், வாய்ப்புக் கிடைத்ததும் செல்லுங்கள் என்றோம்," என டிரம்ப் ஃபாக்ஸ் அண்ட் ப்ரெண்ட்ஸ் நிகழ்ச்சியில் சனிக்கிழமை தெரிவித்தார்.
நீண்ட மிஷன்
விமான, தரை, கடல் வழியிலான 2 மணி 20 நிமிட இந்த மிஷன்.. , உலகை உலுக்கியது. இதன் அளவு, துல்லியம் முன் எப்போதும் இல்லாதது. டிரம்ப் இந்த நடவடிக்கையை வெள்ளை மாளிகை சூழ்நிலை அறையிலிருந்து கண்காணிக்கவில்லை; புளோரிடாவின் மார்-அ-லாகோ கிளப்பில், ஆலோசகர்களுடன் அமர்ந்து சிஐஏ இயக்குனர் ஜான் ராட்க்ளிஃப், வெளியுறவுத்துறை செயலாளர் மார்க்கோ ரூபியோவுடன் அதை நேரலை பார்த்தார்.
'ஆபரேஷன் அப்சல்யூட் ரிசால்வ்' திட்டத்தின் ஒரு பகுதியாக 150-க்கும் மேற்பட்ட குண்டுவீச்சு, போர், உளவு விமானங்கள் இரவு முழுவதும் பயன்படுத்தப்பட்டன என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர். கராகஸில் உள்ளூர் நேரப்படி அதிகாலை 2:00 மணிக்கு (GMT காலை 6:00) தாக்குதல் நடத்தப்பட்டது.
தாக்குதல்கள் நடந்து கொண்டிருந்தபோது, அமெரிக்கப் படைகள் நகரத்திற்குள் நுழைந்தன. அமெரிக்க ராணுவத்தின் மிக உயர்ந்த சிறப்புப் படைப்பிரிவான டெல்டா ஃபோர்ஸ் உறுப்பினர்களும் இதில் அடங்குவர். அவர்கள் கனரக ஆயுதங்களுடன், மதுரோவின் வீட்டின் உலோகக் கதவுகளை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று கைது செய்தனர்.
இந்த ஆபரேஷன் எப்படி நடந்தது? உள்ளே படைகள் எப்படி சென்றது என்பது பற்றிய முழுமையான வீடியோ காட்சிகள் தத்ரூபமாக ஏஐ மூலம் உருவாக்கப்பட்டு இங்கே கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த வீடியோவில் நிகோலஸ் மதுரோ கைது செய்யப்பட்ட முழு நிகழ்வையும் ஏஐ காட்சிகளாக பார்க்கலாம்.
-
நூலிழையில் தப்பிய ஈரான் உச்ச தலைவர்.. அமெரிக்கா - இஸ்ரேல் அட்டாக்கில் எஸ்கேப்பானது எப்படி? திக்திக் -
ஈரானுக்கு அபார சக்தி இருக்கு.. இப்படி பதிலடி கொடுப்பாங்கனு நினைக்கல.. மிரண்டுப்போய் டிரம்ப் சொன்ன வார்த்தை -
ஈரான் பக்கம், ஹார்முஸ் நீரிணையில் சிக்கிய 3,00000 டன் இந்திய எல்பிஜி! பரபரக்கும் மத்திய அரசு -
"இனி அமெரிக்காவுக்கு நேட்டோ தேவையில்லை.." கண்கள் சிவந்த டிரம்ப்.. திடீரென ஆவேசமாக பாய்ந்தார் -
மனசாட்சி இடம் கொடுக்கல.. ஈரான் போரால் டிரம்புக்கு எகிறும் பிரஷர்.. அமெரிக்க டாப் அதிகாரி ரஜினாமா -
உலக போரை இழுத்துவிடும் டிரம்ப்? ஐரோப்பிய நாடுகளுக்கு தந்த வார்னிங்.. 'நேட்டோ' பற்றி சர்ச்சை கருத்து -
கெஞ்சாத குறையாக கேட்ட டிரம்ப்.. மதிக்காத ஐரோப்பிய நாடுகள்.. ஈரான் போரில் தலையிட மறுப்பது ஏன்? -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
சல்லி சல்லியாக நொறுங்கிடுச்சே.. துபாய் அஸ்திவாரமே ஆடுதுங்க.. 'சொர்க்க பூமி' இப்படி ஆகிடுச்சே! -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்?












Click it and Unblock the Notifications