டிரம்ப் கூட்டத்திற்கு அருகிலேயே.. கண்டெய்னர் மீது ஏறி சுட்ட நபர்! இவர்தான் அந்த ஷூட்டர்! ஷாக் வீடியோ
நியூயார்க்: அமெரிக்க அதிபர் டிரம்ப்பை துப்பாக்கியால் சுட்ட நபர் கொலை செய்யப்பட்டு உள்ளார். அவருக்கு அருகிலேயே இருந்த இன்னொரு நபரும் கொலை செய்யப்பட்டு உள்ளார்.
அதிபர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் சீக்ரெட் சர்வீஸ் வீரர்கள் மூலம் இவர்கள் சுடப்பட்டு உள்ளனர். துப்பாக்கி சூடு சத்தம் கேட்டதும் ஸ்னைப்பர்கள் உடனே அந்த திசைக்கு திரும்பி பதில் தாக்குதல் நடத்தி அந்த ஷூட்டரை கொன்று உள்ளனர்.

இரண்டு ஸ்னைப்பர்கள் அடுத்தடுத்து சுட்டதில் டிரம்ப்பை துப்பாக்கியால் சுட்ட நபர் கொலை செய்யப்பட்டு உள்ளார். அவருக்கு அருகிலேயே இருந்த இன்னொரு நபரும் கொலை செய்யப்பட்டு உள்ளார்.
அங்கே இருந்த சிலர் கொடுத்த பேட்டிகளில், டிரம்ப் பிரச்சாரத்திற்காக பென்சில்வேனியாவில் நடத்தப்பட்ட கூட்டத்திற்கு பாதுகாப்பு ஏரியா ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அந்த ஏரியாவிற்கு வெளியே 50 மீ கூட தூரம் இல்லை.. அங்கே ஒரு கண்டெயினர் மீது அந்த ஷூட்டர் இருந்துள்ளார்.
இது பாதுகாப்பான செக்யூரிட்டி ஏரியாவிற்கு வெளியே என்பதால் அங்கே சோதனை செய்யப்படவில்லை. ஸ்னைப்பர்களும் அவரை பார்க்கவில்லை. அவர் கண்டெயினர் மீது ஏறி டிரம்ப்பை சுட்டு உள்ளார். இந்த சத்தம் கேட்டதும்.. அதிபர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் சீக்ரெட் சர்வீஸ் வீரர்கள் மூலம் அந்த ஷூட்டர் சுடப்பட்டு உள்ளார். துப்பாக்கி சூடு சத்தம் கேட்டதும் ஸ்னைப்பர்கள் உடனே அந்த திசைக்கு திரும்பி பதில் தாக்குதல் நடத்தி அந்த ஷூட்டரை கொன்று உள்ளனர்.
துப்பாக்கி சூடு: அமெரிக்க அதிபர் வேட்பாளர் டிரம்ப் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவரின் வலது காதில் ரத்த காயம் ஏற்பட்டு உள்ளது.
Shooter down. pic.twitter.com/6ap71STZyr
— Adrian Dittmann (@AdrianDittmann) July 13, 2024
டிரம்ப் காயமடைந்த நிலையில் சந்தேகத்திற்குரிய 2 பேர் பாதுகாப்பு வீரர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டு உள்ளனர். பென்சில்வேனியாவில் டிரம்ப் பிரச்சாரம் செய்யும் போது இந்த சம்பவம் நடந்து உள்ளது. அவர் பிடன் குறித்து பேசிக்கொண்டு இருக்கும் போது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.
டிரம்ப்பை சுட்டதாக நம்பப்படும் 2 நபர்கள் சீக்ரெட் சர்வீஸ் வீரர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டு உள்ளனர். துப்பாக்கி சூட்டிற்கு பின் டிரம்ப் மக்களிடம் கைகளை உயர்த்தி காட்டினார். அவரின் காதுகளில் ரத்த காயம் ஏற்பட்டு இருந்தது.
BREAKING: Video of Secret Service sniper taking out gunman pic.twitter.com/mzoUzdNKJk
— The Spectator Index (@spectatorindex) July 14, 2024
அந்த ரத்த காயத்தோடு டிரம்ப் மக்கள் முன்னிலையில் ஜே போடுவது போல துணிச்சலாக சவால் விடுவது போல கைகளை உயர்த்தி காட்டியது கவனம் பெற்றது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள டிரம்ப் முழு உடல் நலத்துடன் உள்ளார்.
சிறிய ரக துப்பாக்கி ஒன்றின் மூலம் இந்த துப்பாக்கி சூடு சம்பவம் நடத்தப்பட்டு உள்ளது. டிரம்ப் காதுகளில் மட்டும் ரத்த காயம் ஏற்பட்டு உள்ளது. மற்றபடி அவருக்கு வேறு பாதிப்புகள் இல்லை.
டிரம்ப் முன்னிலை: ஏற்கனவே அதிபர் தேர்தலில் டிரம்ப் முன்னிலையில் உள்ளார். இந்த துப்பாக்கி சூடு அவருக்கான ஆதரவை அதிகரிக்கலாம். அதிபர் தேர்தலில் விவாதங்கள், மக்கள் கருத்து கணிப்புகள் எல்லாம் நடக்கும். அமெரிக்க அதிபர் தேர்தலின் ஒரு கட்டமாக அதிபர் பிடன், முன்னாள் அதிபர் ட்ரம்ப் இடையே சமீபத்தில் விவாதம் நடந்து டிரம்ப் அதில் வென்றது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications