ஒரே ஒரு நாய் குட்டி போட்டோதான்.. எலான் மஸ்க் ட்வீட்டால் குலுங்கிய க்ரிப்டோகரன்சி மார்க்கெட்- எப்படி?
நியூயார்க்: ஒரே ஒரு நாய் குட்டி புகைப்படத்தை ட்வீட் செய்து க்ரிப்டோகரன்சி மார்க்கெட்டில் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறார் எலான் மஸ்க்.
உலகிலேயே மிகப்பெரிய பணக்காரர் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதை எல்லாம் செய்து கொண்டு இருக்கிறார் எலான் மஸ்க். ஒரு பக்கம் நாசாவுக்கே உதவி செய்வது, செவ்வாய் கிரகத்திற்கு தனது சொந்த டெஸ்லா காரை அனுப்புவது, செவ்வாயில் குடியேற திட்டங்களை வகுப்பது, விண்வெளிக்கு மனிதர்களை சுற்றுலா கொண்டு செல்ல ராக்கெட்டுகளை உருவாக்குவது என்று எலான் மஸ்க் மிகவும் பிசியாக இருக்கிறார்.
என்னதான் தலைவர் பிஸியாக இருந்தாலும்.. வெள்ளிக்கிழமை ராத்திரியானா போதும் சின்னத்தம்பி பாட ஆரம்பிச்சிருவான் என்பது போல அவ்வப்போது எதையாவது ட்வீட்டரில் போட்டு அதை சர்ச்சையாக்குவதை வழக்கமாக வைத்து இருக்கிறார். வாய்க்கு வந்ததை போட்டுவிட்டு டெஸ்லா நிறுவனத்திற்கு பல மில்லியன் டாலர் இழப்புகளையும் கூட எலான் ஏற்படுத்தி இருக்கிறார். எலான் நினைத்தால் ஒரே நாளில் மார்க்கெட்டை உச்சத்திற்கு கொண்டு செல்ல முடியும், அடித்து வீழ்த்தவும் முடியும்.

கிரிப்டோகரன்சி
எப்போதும் புதுமைகளை விரும்பும் எலானுக்கு க்ரிப்டோகரன்சி என்றால் ஏகப்பட்ட விருப்பம். உலக அளவில் க்ரிப்டோகரன்சி புதிய உயரம் தொட, உலகம் முழுக்க க்ரிப்டோகரன்சி பிரபலம் ஆக எலான் முக்கிய காரணமாக இருந்து வருகிறார். க்ரிப்டோகரன்சி குறித்து தெரியாதவர்கள் அதை பற்றி சாதாரணமாக நினைக்க வேண்டும். க்ரிப்டோகரன்சிகளில் நிறைய கரன்சி வகைகள் உள்ளன. இந்த கரன்சிகள் பிளாக்செயின் என்ற பாதுகாப்பான தொழில்நுட்பம் மூலம் இயங்குகிறது. இணையத்தில் க்ரிப்டோகரன்சிகளுக்காக இருக்கும் லெட்ஜர் என்று இதை கூறலாம். எந்த வங்கியின் கட்டுப்பாட்டிலும் இல்லாத தனி தனி கரன்சிகள் ஆகும் இது. பல பெயர்களில் ஆன்லைனில் க்ரிப்டோகரன்சிகள் உள்ளன. இதில் பல நம்பகமான அதிக மதிப்பு கொண்ட தொடர்ந்து விலை அதிகரிக்கும் கரன்சிகளும் இருக்கின்றன.

பிட்காயின்
பிட்காயின் போன்ற க்ரிப்டோகரன்சி 2009ல் இருந்தே புழக்கத்தில் உள்ளது. பிட்காயின் மதிப்பு இப்போது மாபெரும் உச்சத்தில் உள்ளது. இப்போது ஒரு பிட்காயின் மதிப்பு 35 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக உள்ளது. ஆனால் இது இணைய மதிப்புதான். நிஜ உலகில் க்ரிப்டோகரன்சி மதிப்புகள் வெகுவாக மாறுவதும் குறிப்பிடத்தக்கது. உலகம் முழுக்க பல க்ரிப்டோகரன்சிகள் தோன்றி வருகின்றன. மீம் உலகில் டிரெண்டிங்கில் இருக்கும் டாஜ் (doge) என்று மீம் நாய்க்குட்டியை அடிப்படையாக வைத்தும் கூட க்ரிப்டோகரன்சி உள்ளது. ஷீபா இனு என்ற இந்த நாய்க்குட்டியை வைத்து நிறைய க்ரிப்டோகரன்சிகள் உள்ளன.

க்ரிப்டோகரன்சி டாஜ்
2013ல் பில்லிமார்கஸ், ஜேக்சன் பால்மர் என்பவர்கள் டாஜ் (doge) வகை க்ரிப்டோகரன்சிகளை வெளியிட்டனர். இதில் அந்த பிரபல மீம் நாயின் புகைப்படம் இருந்தது. அதன்பின் இதை வைத்து நிறைய க்ரிப்டோகரன்சிகள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. தொடக்கத்தில் இந்த டாஜ் க்ரிப்டோகரன்சிகளை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் எலான் மஸ்க்தான் இந்த டாஜ் காயின்களை உலகம் முழுக்க வைரலாக்கியது. இதை பற்றி அவர் செய்த ட்வீட் காரணமாக உலகம் முழுக்க இதன் மதிப்பு உயர தொடங்கியது.

மதிப்பு உயர்வு
இந்த நிலையில்தான் தற்போது மீண்டும் க்ரிப்டோகரன்சி உலகை எலான் மஸ்க் உலுக்கி இருக்கிறார். காரணம் எலான் புதிதாக ஒரு நாய் குட்டி வாங்கி இருக்கிறார். அவ்வளவுதான். இது ஷிபா ப்லோக்கி வகை நாய் ஆகும். எல்லாம் ஒரே டாஜ் போன்ற தோற்றம் அளிக்கும் நாய் ஆகும். இந்த புகைப்படத்தை அவர் ட்வீட் செய்தார். இந்த ட்வீட் செய்து சில நிமிடங்களில் இந்த நாயின் பெயர் மற்றும் அதன் வகைகளின் பெயரில் இருக்கும் க்ரிப்டோகரன்சிகளின் மதிப்புகள் பிச்சுக்கொண்டு விண்ணை தொட்டுள்ளது.

விண்ணை தொட்டது
ஷீபா ப்லோக்கி என்ற கிரிப்டோகரன்சி மதிப்பு மட்டும் 958.09 சதவிகிதம் உயர்ந்துள்ளது. ப்லோக்கி இனு என்ற க்ரிப்டோகரன்சியின் மதிப்பு 59.08 சதவிகிதம் உயர்ந்துள்ளது. ப்லோக்கி ஷிபா என்ற க்ரிப்டோகரன்சியின் மதிப்பு 23.46 சதவிகிதம் உயர்ந்துள்ளது. ஒரே ஒரு நாயின் புகைப்படத்தை போட்டு இந்த கரன்சிகளின் மதிப்பை புதிய உயரத்திற்கு கொண்டு சென்று இருக்கிறார் எலான் மஸ்க். இந்த டாஜ் வகை க்ரிப்டோகரன்சிகள் டாலரை விட குறைவான மதிப்பு கொண்டு இருந்தாலும் பொதுவாக இதன் மதிப்பு இவ்வளவு அதிகமாக உயர்ந்து இருப்பது இதுவே முதல்முறை. ஒரே ஒரு நாய் குட்டியின் புகைப்படம் மூலம் எலான் இதன் மார்க்கெட் மதிப்பையே புரட்டிப்போட்டு விட்டார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications