சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்ட டிரம்ப்.. அமெரிக்காவில் யோசித்து பார்க்க முடியாத பிரச்சனை!

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: அமெரிக்காவில் உள்ள கொலம்பிய மக்களை வெளியேற்றுவதில் டிரம்ப் தீவிரம் காட்டி வருகிறார். இது அமெரிக்கர்களுக்கே தற்போது சிக்கலாக மாறி உள்ளது.

அமெரிக்காவில் 4 விதமான மக்கள் அதிக அளவில் அகதிகளாக, ஆவணங்கள் இன்றி குடியேறி உள்ளனர். கொலம்பியா மக்கள், மெக்சிகோ மக்கள், இந்தியர்கள், ஆப்பிரிக்கர்கள் அதிக அளவில் அங்கே ஆவணங்கள் இன்றி குடியேறி உள்ளனர்.

usa donald trump visa

இவர்களை எல்லாம் வெளியேற்றும் பணி தொடங்கி உள்ளது. அமெரிக்காவின் தெற்கு எல்லை பகுதியில் ராணுவம் களமிறக்கப்பட்டு உள்ளது. அங்கே உள்ளே அகதிகளை, அத்துமீறி குடியேறி உள்ளவர்களை வெளியேற்றும் பொருட்டு அங்கே ராணுவம் களமிறக்கப்பட்டு உள்ளது. இதன் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.

டிரம்ப் பதவிக்கு வந்து சில நாட்களில் பெரிய அளவில் அங்கே ராணுவ படைகள் குவிக்கப்பட்டு உள்ளன. தெற்கு அமெரிக்கா எல்லையில் எமர்ஜென்சி தொடங்குவதாக அதிபர் டிரம்ப் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். எல்லா விதமான முறைகேடான எல்லை பகுதிகளும் மூடப்படும், அமெரிக்காவில் அத்துமீறி ஆவணங்கள் இன்றி உள்ளவர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்று டிரம்ப் அறிவித்துள்ளார்.

ஏற்கனேவே அமெரிக்காவில் அத்துமீறி குடியேறிய இந்தியர்கள் பலர் மீண்டும் இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டு உள்ளனர். இந்தியர்களை இந்தியாவை நோக்கி நாடு கடத்த தொடங்கி உள்ளார் அமெரிக்க அதிபர் டிரம்ப். இதற்காக "முதல் பேட்ச்" விமானம் இந்தியாவிற்கு வந்துள்ளது. இதில் குஜராத்திகள் பலர் இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டு உள்ளனர்.

முதல் கட்டமாக நாடு கடத்தப்பட்டவர்களில்,

ஹரியானா - 35
குஜராத் - 33
பஞ்சாப் - 31
உத்தரப்பிரதேசம் - 3
மகாராஷ்டிரா - 2

குஜராத்திகள் பலர் கடந்த சில மாதங்களாக 1 கோடி ரூபாய் எல்லாம் தந்து அமெரிக்காவிற்கு ஆவணங்கள் இன்றி செல்லும் நிலையில்தான் இப்படி நாடு கடத்தப்பட்டு உள்ளனர். இனியும் பல விமானங்கள் இந்தியாவிற்கு இப்படி வரலாம்.

யாரெல்லாம் அனுப்பப்படுகிறார்கள்:

டிரம்ப் நிர்வாகம் ஆவணமற்ற அல்லது சட்டவிரோதமாக குடியேறியவர்களை மட்டுமே குறிவைக்கிறது. முதல் கட்டமாக முந்தைய ஜோ பிடன் நிர்வாகத்தின் கீழ் கைது செய்யப்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டு உள்ளனர். அடுத்தது புதிய கணக்கெடுப்பின் அடிப்படையில் மக்கள் வெளியேற்றப்படுவார்கள். இதற்காக போர் விமானம், பயணிகள் விமானம் இரண்டும் பயன்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

அடுத்த சில நாட்களில் டெக்சாஸின் எல் பாசோ மற்றும் கலிபோர்னியாவின் சான் டியாகோவிலிருந்து 5,000 க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் நாடு கடத்தப்படுவார்கள் என்று பென்டகன் தெரிவித்துள்ளது. இதுவரை, ராணுவ விமானங்கள் மூலம் குவாட்டமாலா, பெரு மற்றும் ஹோண்டுராஸ் ஆகிய நாடுகளுக்கு மக்கள் நாடு கடத்தப்பட்டனர். இப்போது இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டு வருகின்றனர்.

சிக்கல் என்ன:

அங்கே தற்போது வெளிநாட்டினர் நாடு கடத்தப்படுவதால்.. வீட்டு பணிகள், கட்டிட பணிகள், கடுமையான உடல் உழைப்பு தேவைப்படும் பணிகளை செய்ய ஆட்கள் இல்லை.

முக்கியமாக கட்டுமான பணிகளை மேற்கொள்ள ஆட்கள் இல்லாத சூழல் உள்ளது. இதனால் பல இடங்களில் கட்டுமானம் முடங்கி உள்ளது. அங்கே கட்டுமானம் முடங்கியதற்கான வீடியோக்கள் இணையம் முழுக்க வைரலாகி வருகின்றன. பல இடங்களில் கட்டுமான பணிகள் பாதியில் நிற்கும் வீடியோக்கள் இன்ஸ்டாகிராமில் டிரெண்டாகி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+