இஸ்ரோவின் டெக்னிக்.. முதல் தனியார் நிறுவனம்.. விண்ணுக்கு மனிதர்களை அனுப்பும் எலோனின் ஸ்பேஸ் எக்ஸ்!
நியூயார்க்: அமெரிக்காவின் மண்ணில் இருந்து நாசாவிற்காக முதல் முதலாக விண்ணிற்கு மனிதர்களை அனுப்பும் நிறுவனம் என்ற சிறப்பை பெற்றுள்ளது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம்.
Recommended Video
நாசாவை சேர்ந்த இரண்டு விண்வெளி வீரர்கள் இன்று சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பப்பட உள்ளனர். ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மூலம் இவர்கள் விண்ணுக்கு செல்கிறார்கள்.அமெரிக்காவில் புளோரிடாவில் இருக்கும் Kennedy Space Center's Complex 39A இருந்து இந்த ராக்கெட் ஏவப்பட்ட உள்ளது.
நாசாவை சேர்ந்த பாப் பென்கன் மற்றும் டக் ஹர்லி ஆகிய வீரர்கள் இதில் செல்ல இருக்கிறார்கள். ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஃபல்கான் ராக்கெட் மூலம் விண்ணில் இவர்கள் விண்ணுக்கு செல்கிறார்கள்.

முதல் நிறுவனம்
விண்வெளிக்கு அமெரிக்காவில் இருந்து முதல் முதலாக மனிதர்களை அனுப்பும் தனியார் நிறுவனம் என்ற பெயரை பெற்றுள்ளது. இதற்கு முன்பே சர்வதேச விண்வெளி மையத்திற்கு ஏற்கனவே ராக்கெட்டுகளை, பொருட்களை அனுப்பி உள்ளது. ஆனால் இப்போதுதான் மனிதர்களை ஸ்பேஸ் எக்ஸ் அனுப்ப உள்ளது. இதன் மூலம் அதன் நிறுவனர் எலோன் மஸ்க் புதிய உயரத்தை எட்டி இருக்கிறார்.

புது உயரம்
கடைசியாக அமெரிக்கா ஜூலை 8, 2011ல் நாசா மனிதர்களை தங்கள் மண்ணில் இருந்து விண்ணுக்கு அனுப்பியது. அதன்பின் இப்போதுதான் அமெரிக்க மண்ணில் இருந்து மனிதர்களை விண்ணுக்கு அனுப்புகிறது. 2011க்கு பின் ரஷ்யாவின் சோயஸ் விண்கலம் மூலம் மட்டுமே அமெரிக்கர்களை விண்ணுக்கு அனுப்பி வந்தது அமெரிக்கா. இப்போது ஸ்பேஸ் எக்ஸ் மூலம் அமெரிக்கர்கள் விண்ணுக்கு செல்கிறார்கள்.

என்ன ராக்கட்
இந்த சாதனை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஃபல்கான் ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படும். இதில் இருக்கும் முதல் ஸ்டேஜ் ராக்கெட் 2.5 நிமிடம் விண்ணில் பறக்கும். இது ராக்கெட்டை விண்ணுக்கு கொண்டு செல்லும். அதன்பின் அந்த பகுதி தனியே கழன்று கீழே பாதுகாப்பாக எஞ்ஜின் உதவியுடன் தரையிறங்கும். அடுத்த ஸ்டேஜ் 2 மொத்தம் 6 நிமிடம் பறக்கும். இது ராக்கெட்டை வட்டப்பாதையில் நிறுத்திவிட்டு கழன்று விடும்.

வேறு எப்படி
அதன்பின்தான் இதில் இருக்கும் க்ரூ டிராகன் (Crew Dragon) ஸ்பேஸ் ஸ்டேசனை நோக்கி செல்லும். இதில்தான் இரண்டு நாசா வீரர்களும் இருப்பார்கள். இந்த க்ரூ டிராகன் (Crew Dragon) கழன்று கொண்ட பின் லேசாக மிதக்கும். இது மொத்தம் 19 மணி நேரம் பூமியை சுற்றும். பூமியை சுற்றிக்கொண்டு இருக்கும் போதே கொஞ்சம் கொஞ்சமாக எஞ்சின் இயக்கப்பட்ட அதன் உயரம் அதிகரிக்கப்படும்.

வேகம் அதிகரிக்கும்
இப்படி கொஞ்சம் கொஞ்சமாக உயரம் அதிகரிக்கப்பட்டு, அதன்பின் ஸ்பேஸ் ஸ்டேஷன் அருகே க்ரூ டிராகன் (Crew Dragon) செல்லும். இப்படியே சென்று நாளை இரவு 8.30 மணிக்கு இந்திய நேரப்படி க்ரூ டிராகன் (Crew Dragon) ஸ்பேஸ் ஸ்டேஷன் உடன் இணையும். க்ரூ டிராகன் (Crew Dragon) னை இப்படி ஸ்பேஸ் ஸ்டேஷன் உடன் இணைக்க இஸ்ரோவின் டெக்னிக்கை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் பயன்படுத்தி உள்ளது. இஸ்ரோ பயன்படுத்திய விதியை ஸ்பேஸ் எக்ஸ் பயன்படுத்தி உள்ளது .

இஸ்ரோ விதி
இஸ்ரோ மூலம் சந்திரயான் 2 நிலவை நோக்கி செலுத்தப்பட்ட போதும் இதேபோல் சந்திரயான் 2 முதலில் க்ரூ டிராகன் போலவே பூமியை எதிர் கடிகார திசையில் சுற்றி வந்தது. நீள்வட்ட பாதையில் சந்திரயான் 2 சுற்றுவதன் மூலம் அதன் வேகம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்தது. இதனால் நீள்வட்ட பாதையில் சுற்றி சுற்றி பூமியைவிட்டு கொஞ்சம் கொஞ்சமாக சந்திரயான் 2 நகர்ந்து சென்றது.

செம விதிமுறை
கொஞ்சம் கொஞ்சமாக சந்திரயான் 2ன் உயரம் அதிகரிக்கப்பட்டது. அதன்பின் குறிப்பிட்ட உயரம் சென்ற பின், சந்திரயான் 2ல் இருக்கும் எஞ்சின் இயக்கப்பட்டு, அது நிலவை நோக்கி இயக்கப்பட்டது. அதேபோல் தற்போது க்ரூ டிராகன் (Crew Dragon) பூமியை 19 மண் நேரம் சுற்றி வந்து, அதன்பின் ஸ்பேஸ் ஸ்டேஷன் நோக்கி செல்லும். இது இஸ்ரோவின் டெக்னிக் ஆகும். க்ரூ டிராகன் நேரடியாக ஸ்பேஸ் ஸ்டேசன் செல்லாது என்பது குறிப்பிடத்தக்கது.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications