நம்ம சூரிய குடும்பத்திற்கு உள்ளேயே.. ஏலியன்கள் இருக்கிறார்களா? பிரபல நாசா ஆய்வாளர் அதிர்ச்சி தகவல்

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: நம்ம சூரிய குடும்பத்திற்கு உள்ளேயே ஏலியன்கள் இருக்க வாய்ப்பு உள்ளதாக பிரபல நாசா ஆய்வாளர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார் .

ஏலியன்கள் பற்றி புகார்கள் வைக்கும் பலர் இதை பற்றியும் புகார் வைப்பது உண்டு. மனித சமூகம் கடந்த சில நூற்றாண்டுகளாகவே வேற்றுகிரக வாசிகள் குறித்த தீவிர ஆராய்ச்சிகளை செய்து வருகிறது. மனிதன் நிலவில் கால் வைத்தது தொடங்கி தற்போது செவ்வாய் கிரக ஆராய்ச்சிகள், ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி வரை அனைத்துமே வேற்றுகிரக வாசிகளை தேடும் மனித ஆராய்ச்சியின் ஒரு அங்கம்தான்.

Huge chance for Alien life in the clouds of Venus: NASA scientist speculates

பரந்து விரிந்த விண்வெளியில் எங்காவது ஒரு மூலையில் ஒரு சின்ன உயிரினம் இருந்துவிடாதா என்று உலகின் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் எல்லோரும் தொடர் ஆய்வுகளை செய்து வந்தும் இதுவரை அவர்களால் எந்த ஒரு ஏலியனையும் அதிகாரப்பூர்வமாக கண்டுபிடிக்க முடியவில்லை.

ஏலியன்கள் என்று வந்துவிட்டாலே உடனே பறக்கும் தட்டும் குறித்தும் மக்கள் பேசுவார்கள். உலகம் முழுக்க யுஎப்ஓ எனப்படும் அடையாளம் தெரியாத பறக்கும் தட்டுகள், பறக்கும் சாதனங்கள் குறித்து மக்கள் பலர் புகார் வைப்பது உண்டு. வித்தியாசமான பறக்கும் தட்டுக்களை பார்த்ததாக மக்கள் பலர் புகார் வைப்பது உண்டு.

இந்த நிலையில்தான் நம்ம சூரிய குடும்பத்திற்கு உள்ளேயே ஏலியன்கள் இருக்க வாய்ப்பு உள்ளதாக பிரபல நாசா ஆய்வாளர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார் . புகழ்பெற்ற நாசா விஞ்ஞானி டாக்டர். மிஷேல் தாலர், நமது சூரிய குடும்பத்தில் வேற்றுகிரகவாசிகளின் இருப்பிற்கு சாத்தியமான அறிகுறிகள் இருப்பதாக ஒரு கோட்பாட்டை முன்வைத்துள்ளார்.

சூரிய குடும்பத்தில் இரண்டாவது கிரகமாக இருக்கும் வெள்ளி கிரகத்தை வைத்து அவர் இந்த கருத்துக்களை தெரிவித்துள்ளார். வெள்ளி கிரகத்தின் அமில மேகங்கள் மற்றும் அதன் எரியும் வெப்பநிலை காரணமாக அதில் உயிரினங்கள் வாசிக்க முடியாத சூழல் உள்ளதாக கருதப்படுகிறது. இதன் காரணமாக வீனஸ் ஏலியன்கள் பற்றிய ஆய்வில் முதல் தேர்வில் எப்போதும் இல்லை.

ஆனால் இங்கே டாக்டர். தாலரின் வழக்கத்திற்கு மாறாக வேறு ஒரு வாதத்தை வைக்கிறார். வெள்ளி கிரகத்தின் வளிமண்டல அறிகுறிகளை அவர் குறிப்பிட்டு உள்ளார். இந்த வளிமண்டலத்தில் காணப்படும் சில விஷயங்கள் வெள்ளி கிரகத்தில் உயிரினங்கள் இருப்பதற்கான அறிகுறியாக தனக்கு தெரிவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த கிரகத்தின் வளிமண்டலத்தில் கார்பன் டை ஆக்சைட் அதிகம் உள்ளது. சில வகை பாக்டீரியா இருந்தால் மட்டுமே இந்த அளவிற்கு கார்பன் டை ஆக்சைட் இருக்க முடியும். இதனால் வெள்ளி கிரகத்தின் மேகங்களில் இந்த பாக்டீரியா உயிரினங்கள் இருக்கலாம் என்று அவர் கூறி உள்ளார். அங்கே மனிதர்கள் இருக்க வாய்ப்பு இல்லை. ஆனால் வேற்று கிரக உயிரினங்கள் பாக்டீரியா வடிவில் இருக்க வாய்ப்பு உள்ளது. அங்கே உள்ள மேகங்கள் உயிரினங்கள் இருப்பதற்கான தனிமங்கள், கனிமங்கள், வாயுக்களை கொண்டுள்ளன என்று அவர் கூறியுள்ளார்.

Huge chance for Alien life in the clouds of Venus: NASA scientist speculates

பாஸ்பரஸ்: வெள்ளி கிரகத்தின் மேகங்களில் பாஸ்பைன் வாயு இருப்பதை விஞ்ஞானிகள் 2020 இல் கண்டறிந்தனர். அந்த கண்டுபிடிப்பு வீனஸில் உயிர் இருப்பதைப் பற்றிய விவாதத்தை ஏற்படுத்தியது. இரண்டாம் கட்ட ஆய்வில் மீண்டும் பாஸ்பைன் கண்டுபிடிக்கப்படாத நிலையில் மீண்டும் நடத்தப்பட்ட தீவிர ஆராய்ச்சியில் பாஸ்பைன் அங்கே இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இதனால் வெள்ளி கிரகத்தின் மேகங்களில் ஏலியன்கள்.. அதாவது வேற்று கிரக உயிரினங்கள் இருக்குமோ என்ற கேள்வி எழுந்துள்ளது. பாஸ்பைன் என்பது பூமியின் உயிரியல் செயல்பாடுகளுடன் தொடர்புடைய ஒரு மூலக்கூறு. இதனால் இந்த கேள்வி மிக தீவிரம் ஆகி உள்ளது.

இதனால் வெள்ளி கிரகம் வாழ தகுதி கொண்டதாக இருக்குமோ என்ற கேள்வி எழுந்துள்ளது. பூமியில் மட்டும் அதிகமாக காணப்படும் ஒரு பொருள்.. பூமிக்கு வெளியே கண்டறியப்பட்டுள்ளது விஞ்ஞானிகள் இடையே வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+