"அமானுஷ்யம்".. அப்படியே மனிதத் தோலில் செய்யப்பட்ட.. அலறவிடும் ஆடைகள்.. பிச்சு எடுக்கும் "சேல்ஸ்"
Fleshcrafters என்ற நிறுவனம் ஒருவித ஜாக்கெட்டுகளை (jackets) விற்பனை செய்து வருகிறது.
நியூயார்க்: அமானுஷ்ய விரும்பிகளா நீங்கள்? அப்படியென்றால், உங்களை ஈர்க்கும் வகையிலான செய்தி ஒன்றுதான் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஸ்கின் கலர் டைப் டிரெஸ்களை பார்த்திருப்போம். அதாவது, அந்த டிரெஸ்களை பார்ப்பதற்கு நமது உடல் தோலின் நிறத்தை ஒத்திருக்கும். இதை அணிந்தவர்களை சட்டென பார்க்கும் போது அவர்கள் உடை அணியாததை போன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்தும்.
ஆனால், மனிதத் தோல் போல அல்ல.. அப்படியே மனிதத் தோலில் செய்யப்பட்ட ஜாக்கெட்டுகள்தான் அடித்து பிடித்து விற்பனையாகி வருகிறது.

அமானுஷ்ய விரும்பிகள்..
மனிதர்களில் பல வகை உண்டு. அதற்கேற்ப அவர்களின் குணாதிசயங்களும் அமைந்திருக்கும். உதாரணமாக, பலர் அவசகுணமான வார்த்தைகளையோ, செயல்களையோ முற்றிலும் வெறுப்பவர்களாக இருப்பார்கள். ஆனால், சிலரோ அவற்றை மிகவும் விரும்புவோராக இருப்பார்கள். இதுபோன்ற நபர்களைதான் 'நெகட்டிவ் மைண்ட்செட்' நபர்கள் என அழைக்கப்படுகிறார்கள். இதுபோன்ற நபர்கள் அமானுஷ்ய விரும்பிகளாகவும் இருப்பார்கள்.

சுடுகாடு ஓட்டல்
உதாரணமாக, ஒருசிலர் மனதில் பயம் இருந்தாலும் கொடூரமாக ரத்தம் தெறிக்கும் சீரியல் கில்லர் திரைப்படங்களை பார்ப்பார்கள், ஒரு உயிர் துன்புறுத்தப்படும் வீடியோக்களை பார்த்து ரசிப்பார்கள். இதுபோன்ற மனிதர்களை ஈர்ப்பதற்காகவே சில பொருட்களும், இடங்களும் இருக்கின்றன. உண்மையான சுடுகாட்டின் மீதே அமைக்கப்பட்டிருக்கும் ஓட்டல், பிணவறை போல வடிவமைக்கப்படிருக்கும் ரெஸ்டாரண்ட் உள்ளிட்டவை இதில் அடங்கும்.

மனிதத் தோல் ஜாக்கெட்
அதுபோன்ற ஒரு அமானுஷ்ய விஷயம்தான் தற்போது டிரெண்டாகி வருகிறது. Fleshcrafters என்ற நிறுவனம் ஒருவித ஜாக்கெட்டுகளை (jackets) விற்பனை செய்து வருகிறது. அந்த ஜாக்கெட்டுகளுக்கு 'மனிதத் தோல் ஜாக்கெட்' (Human Flesh Jackets) என அந்நிறுவனம் பெயரிட்டுள்ளது. அப்படியே மனிதத் தோலில் அந்த ஜாக்கெட்டுகள் செய்யப்பட்டிருப்பதை போல அந்த ஜாக்கெட்டுகள் இருக்கின்றன. அதை தொட்டு பார்த்தாலும், முகர்ந்து பார்த்தாலும் மனித தோலை போன்றே இருக்கின்றன.

விறுவிறு விற்பனை
இதனால் இந்த ஜாக்கெட்டுகள் அதிரிபுதிரியாக விற்பனையாகி வருகின்றன. ஆனால், இது மனித தோலால் செய்யப்பட்டவை அல்ல என அந்த நிறுவனம் அடித்து சொல்கிறது. எனினும், எவற்றால் செய்யப்படுகிறது என்றும் அந்நிறுவனம் கூற மறுக்கிறது. இந்த ஜாக்கெட்டை அணிந்தால் எந்த உடையும் அணியாததை போல உணர்வதாக இதை உடுத்தியவர்கள் கூறுகிறார்கள். மனித உறுப்புகள், முகம் போன்ற டாட்டூகளும் இந்த ஜாக்கெட்டுகளில் திகிலூட்டும் வகையில் அச்சிடப்பட்டிருக்கின்றன. ஆன்லைனிலும் இந்த ஜாக்கெட்டுகளை ஆர்டர் செய்து கொள்ளலாமாம்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications