நான் மோடியின் ரசிகன்..அவரை ரொம்ப பிடிக்கும்.. மோடியை சந்தித்த பின் எலான் மஸ்க் நெகிழ்ச்சி
நியூயார்க்: நான் மோடியின் ரசிகன் என்றும் அவரை ரொம்ப பிடிக்கும் என்றும் டுவிட்டர் நிறுவன தலைவர் எலான் மஸ்க் கூறியுள்ளார். அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடியை சந்தித்து பேசிய பின்னர் எலான் மஸ்க் இதனை தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி 4 நாள் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு பிரதமர் மோடி அந்நாட்டு அதிபர் ஜோ பைடனை சந்திக்கிறார். இந்த சந்திப்பின் போது வர்த்தகம், பாதுகாப்பு உள்பட பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளது. பின்னர் அமெரிக்க நாடாளுமன்றத்திலும் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.

அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி இன்றைய தினம் ஐநாவில் நடைபெறும் யோகா தின கொண்டாட்டத்தில் பங்கேற்கிறார். முன்னதாக நியூயார்க்கில் உலகின் பெரும் பணக்காரரும் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், டுவிட்டர் நிறுவன தலைவருமான எலான் மஸ்க்கை சந்தித்தார்.
இந்த சந்திப்பு குறித்து பேசியுள்ள எலான் மஸ்க், இந்தியாவின் எதிர்காலம் பற்றி நான் நம்பமுடியாத அளவிற்கு உற்சாகமாக உள்ளேன். பிரதமர் மோடி இந்தியாவில் கணிசமான முதலீடுகளைச் செய்ய எங்களைத் தூண்டுவதால், இந்தியா மீது உண்மையிலேயே மிகுந்த அக்கறை கொண்டுள்ளார். நான் மோடியின் ரசிகன். இது ஒரு அருமையான சந்திப்பு. எனக்கு அவரை மிகவும் பிடிக்கும் என்று உற்சாகமாக கூறியுள்ளார்.

அடுத்த ஆண்டு மீண்டும் இந்தியாவுக்குச் செல்ல நான் திட்டமிட்டுள்ளேன். ஸ்டார்லிங்கை இந்தியாவிற்கும் கொண்டு வர ஆவலுடன் காத்திருக்கிறோம். ஸ்டார்லிங்க் இணையம், தொலைதூர மற்றும் கிராமப்புற பகுதிகளுக்கு நம்பமுடியாத அளவிற்கு உதவியாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன் என்றும் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி












Click it and Unblock the Notifications