பார்க்க டிக்-டாக் மாதிரி.. வானத்தில் சர்ரென பறந்த பொருள்.. ஏலியன் யுஎப்ஓதான்.. விசாரணையில் அம்பலம்
நியூயார்க்: ஏலியன்களின் வாகனங்களாக கருதப்படும் யுஎப்ஓக்கள் இருப்பது உண்மை என்று அமெரிக்கா நடத்திய பிரதிநிதிகள் சபை விசாரணையில் வாக்குமூலம் அளிக்கப்பட்டு உள்ளது. இந்த விசாரணையில் 2004ஆம் ஆண்டில் "டிக்-டாக்"(Tic tac) வடிவம் கொண்ட யுஎப்ஓ ஒன்றை கண்டதாக வாக்குமூலம் அளிக்கப்பட்டு உள்ளது.
ஏலியன்களின் வாகனம் என்று அழைக்கப்படும் யுஎப்ஓ வாகனங்கள் குறித்து விசாரணை நடத்த அமெரிக்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபையில் இது தொடர்பாக முதல் கட்ட விசாரணை நடத்தப்பட்டு உள்ளது.

முன்னாள் அமெரிக்க விமானப்படை உளவுத்துறை அதிகாரி ஓய்வு பெற்ற மேஜர் டேவிட் க்ரூஷ் இந்த விசாரணையில் அதிர்ச்சி அளிக்கும் விஷயங்களை குறிப்பிட்டார். அதன்படி 2004ஆம் ஆண்டில் "டிக்-டாக்"(Tic tac) வடிவம் கொண்ட யுஎப்ஓ ஒன்றை கண்டதாக அவர் வாக்குமூலம் கொடுத்துள்ளார். இது மிக மிக வேகமாக பறந்தது.
மனிதர்களை குழப்பும் விதமாக இது பறந்தது. 2017ல் இதன் வீடியோ இணையத்தில் வெளியானது. அதன்பின் அதை ஆய்வு செய்தனர். இந்த "டிக்-டாக்"(Tic tac) வடிவம் கொண்ட யுஎப்ஓ எப்படி பறக்கிறது, அதன் தொழில்நுட்பம் என்ன என்று யாருக்குமே தெரியவில்லை.
அதுவரை மனிதர்களிடம் இருந்த தொழில்நுட்பத்தில், அதன்பின் மனிதர்களிடம் இருக்க போகும் தொழில்நுட்பத்தில் எதிலும் அப்படி ஒரு பறக்கும் பொருளை உருவாக்க முடியாது. அந்த "டிக்-டாக்"(Tic tac) வடிவம் கொண்ட யுஎப்ஓ மிக மிக வித்தியாசமானது. ஆனால் இதை பற்றி மறைத்துவிட்டனர்.
ஷாக் வாக்குமூலம்: இவர்கள் கண்டுபிடித்த யுஎப்ஓக்களில் இருந்து அடிக்கடி உயிரியல் பொருட்களையும் கூட இவர்கள் கைப்பற்றினார்கள். அவை மனித குலத்திற்கு தொடர்புடையவை கிடையாது என்பது எனக்கு உறுதியாக தெரியும் என்று, அவர் கூறி உள்ளார்.
பல இடங்களில் இவர்கள் யுஎப்ஓக்களை தாக்கி அழித்துள்ளனர். அதேபோல் பல முறை ஏற்கனவே மாட்டிய யுஎப்ஓவை பார்த்து ரிவர்ஸ் எஞ்சினியரிங் மூலம் அதை திருப்பி செய்ய முயன்று உள்ளனர். இவை எல்லாம் பூமிக்கு சொந்தமானவை இல்லை. மனித உயிரிகள் மூலம் உருவாக்கப்பட்ட வாகனங்கள் இல்லை.
அமெரிக்காவில் ஏலியன் வாகனங்கள் எனப்படும் யுஎப்ஓக்கள் அரசு வசம் உள்ளது உண்மைதான். பல வாகனங்கள் உள்ளன. சில வாகனங்கள் உடையாமல் நல்ல நிலையில் உள்ளன. இதை அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த விஷயத்தை வெளியே சொல்ல முயன்ற பலர் துன்புறுத்தப்பட்டு உள்ளனர். கொடுமைப்படுத்தப்பட்டு உள்ளனர். மோசமாக நடத்தப்பட்டு உள்ளனர். உலகம் முழுக்க இருக்கும் விமானப்படை, கடற்படை தளங்கள் அருகே இது போல யுஎப்ஓக்கள் காணப்பட்டு உள்ளன. உலகம் முழுக்க இது நடந்துள்ளது. அலாஸ்கா கடல் பகுதியில் குறிப்பிட்ட காலத்திற்கு இது தினசரி செயலாகவே நடந்து உள்ளது. 2 வருடங்களுக்கு இங்கே தினமும் யுஎப்ஓக்கள் பறந்தது. இதை பின்னர் அமெரிக்கா கைப்பற்றியது என்று அவர் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

யுஎப்ஓக்கள்: உலகம் முழுக்க யுஎப்ஓ எனப்படும் அடையாளம் தெரியாத பறக்கும் தட்டுகள், பறக்கும் சாதனங்கள் குறித்து மக்கள் பலர் புகார் வைப்பது உண்டு. வித்தியாசமான பறக்கும் தட்டுக்களை பார்த்ததாக மக்கள் பலர் புகார் வைப்பது உண்டு.நாம் பல ஹாலிவுட் படங்களில் கூட இது போன்ற விமானங்களை பார்த்து இருக்கிறோம். அமெரிக்காவில் இது குறித்து பலர் புகார் வைத்து இருந்தாலும் கூட, கடந்த 2020ம் வருடம் வரை அமெரிக்கா இந்த யுஎப்ஓ குறித்து அதிகாரபூர்வமாக எதையும் ஏற்றுக்கொள்ளவில்லை.
தட்டுகள்: இந்த தட்டுகளை மக்கள் பார்த்ததை மறுத்து வந்த அமெரிக்கா கடந்த 2020ம் வருடம் இப்படி தட்டுகள் பறந்தது உண்மைதான் என்று முதல்முறை ஏற்றுக்கொண்டது. இது தொடர்பாக அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பென்டகன் அதிகாரபூர்வமாக வீடியோ வெளியிட்டு, யுஎஃப்ஓ (பறக்கும் தட்டு) குறித்த வீடியோக்களை பகிர்ந்தது. இந்த வீடியோவில் பறக்கும் தட்டு போன்ற ஒரு சாதனம் கருப்பு நிறத்தில் சென்று கொண்டு இருக்கிறது. முதலில் மிக மெதுவாக செல்லும் இந்த சாதனம் சில நிமிடத்தில் மிக வேகமாக பறந்து மறைந்துள்ளது. யுஎஃப்ஓ எனப்படும் அடையாளப்படுத்த முடியாத பறக்கும் பொருள் இருப்பதை ஒப்புக்கொண்டாலும் கூட இது வேற்றுகிரக வாசிகளுடையது என்று பென்டகன் தெரிவிக்கவில்லை.
-
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications