ஜம்மு காஷ்மீர் பிரச்சனை.. போர் மூண்டால்.. ஐநா சபையில் இந்தியாவை கடுமையாக எச்சரித்த இம்ரான்கான்
Recommended Video
நியூயார்க்: காஷ்மீரில் மனித தன்மையற்ற வகையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்தியாவுடன் போர் மூண்டால் விளைவுகள் பயங்கரமாக இருக்கும் என்றும் ஐநா சபையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஆவேசமாக பேசி இருக்கிறார்.
நியூயார்க்கில் ஐ.நா. பொதுச் சபை பொதுக்கூட்டம் வெள்ளிக்கிழமை இரவு (இந்திய நேரப்படி) நடந்தது. இதில் உலக நாட்டு தலைவர்கள் மத்தியில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஆவேசமாக பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், உலகில் செப்டம்பர் 2001க்கு முன்பு பெரும்பான்மையான தற்கொலைத் தாக்குதல்களை இந்துக்களாக இருந்த விடுதலை புலிகளால் நடத்தப்பட்டது. அப்போது இந்து மதத்தை யாரும் குறை கூறவில்லை. அது மிகவும் சரியானது. இலங்கையில் நம்பிக்கை இழந்த மக்கள் செய்த விஷயங்களுக்காக இந்து மதத்தை எப்படி தொடர்புபடுத்த முடியும்? எனவே தீவிரவாதத்திற்கு மதம் கிடையாது. மேற்கு உலகம் இஸ்லாம் குறித்து தவறான புரிதலை கொண்டுள்ளது. இஸ்லாமிய தீவிரவாதம் என்று வெறுப்பு உருவாக்கப்படுகிறது என்றார்.

இந்தியா மீறிவிட்டது
தொடர்ந்து ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக இம்ரான் கான் ஆவேசத்துடன் பேசினார். அப்போது அவர் கூறுகையில். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததன் மூலம், இந்திய அரசு தனது அரசமைப்புச் சட்டத்தை மீறி உள்ளது.அத்துடன் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் மற்றும் சிம்லா ஒப்பந்தம் ஆகியவற்றையும் மீறி இருக்கிறது.. இதற்கு உலக நாடுகள் என்ன செய்யப் போகின்றன?

தலைவர்களை விடுவியுங்கள்
விலங்குகளைப் போல் தடுப்புக் காவலில் 80லட்சம் மக்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்கள். ஜம்மு-காஷ்மீரில் மனிதத்தன்மையற்ற வகையில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும். அரசியல் காரணங்களுக்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ள தலைவா்களையும் இந்தியா விடுவிக்க வேண்டும். காஷ்மீா் மக்களுக்கு சுயநிர்ணய உரிமையை சா்வதேச சமுதாயம் அளிக்க வேண்டும்.

பாகிஸ்தானை தாக்கிய இந்தியா
ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவில் தாக்குதல் நடந்த போது உடனடியாக பாகிஸ்தான் தான் காரணம் என் இந்தியா புகார் கூறியது. அதற்கான ஆதாரத்தை தாருங்கள் என கேட்டபோது, ஆதாரத்தை அளிக்காமல் அதற்கு பதில், பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தியது இந்தியா.

எங்களை குற்றம்சாட்டும்
ஜம்மு-காஷ்மீரில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை இந்தியா தளா்த்தினால் அங்கு நிலைமை மோசமாகும். அப்போதும், பாகிஸ்தான் தான் காரணம் என இந்தியா எங்கள் மீது குற்றம்சாட்டும்.

விளைவு மோசமாக இருக்கும்
இந்தியாவும், பாகிஸ்தானும் அணுசக்தி நாடுகள். பாகிஸ்தானுக்கும், அதைவிட பன் மடங்கு பெரிதாக உள்ள இந்தியாவுக்கும் இடையே போர் மூண்டால் என்ன நடக்கும்? விளைவுகள் பயங்கர மோசமாக இருக்கும். இதை மிரட்டலாக நான் கூறவில்லை, முன்னெச்சரிக்கை இங்கு தெரிவிக்கிறேன்.

அழித்துவிட்டேன்
நான் பாகிஸ்தானில் பிரதமராக வந்த பின்னர் தீவிரவாத முகாம்களை அழிச்சுட்டேன். இதை ஐ.நா. சபை அதிகாரிகள் நேரில் வந்து தராளமாக ஆய்வு செய்யலாம். ஆனாலும் பாகிஸ்தானில் தீவிரவாத குழுக்கள் இயங்கி வருவதாக இந்தியா புகார் சொல்லிக்கொண்டே தான் இருக்கிறது" இவ்வாறு இம்ரான் கூறினார்.
-
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
மக்களே கவலை வேண்டாம்.. கேஸ் சிலிண்டர் சப்ளை சீராகிவிட்டதாம்.. அடித்து சொல்லும் மத்திய அரசு -
பெங்களூரில் ஒரு ரகசிய உலகம்.. இருட்டில் மின்னிய தகாத உறவுகள்! 40 லட்சம் பேராயும் போட்டுடைத்த க்ளீடன் -
இஸ்ரேலால் இந்திய அடுப்புகளுக்கு ஆப்பு? கேஸ் சிலிண்டர் விலை உயர்வு வெறும் டிரைலர் தானா? என்னாகும்? -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை -
வளைகுடா போர்.. விளக்கமளித்த ஜெய்சங்கர்! விவாதம் நடத்தக்கோரி எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டம் -
படிச்சு படிச்சு சொன்னோமே சண்டை வேணாம்னு! இப்போ பொணத்தைக் கூட எரிக்க முடியல! இப்படி ஒரு சிக்கலா? -
ஐடி வேலை போனால் என்ன.. அமெரிக்காவிலேயே டீக்கடையை போட்ட இந்திய ஐஐடி பட்டதாரி! -
மொத்த இந்தியாவும் முடங்கப்போகுது.. தீவிரமாகும் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. மோடியை சந்தித்த பூரி - ஜெய்சங்கர் -
ரூ 30,00,00,00,00,000 கோடி பஸ்பம்.. கதறும் இந்திய முதலீட்டாளர்கள்.. ஒவ்வொரு நாளும் மரண அடி -
ஒரே நாளில் ரூ.17 லட்சம் உயர்ந்த பரிசு தொகை! இந்திய டீமுக்கு ஜாக்பாட்! எல்லாத்துக்கும் காரணம் டிரம்ப்












Click it and Unblock the Notifications