தீவிரமாக மாறுங்க.. எலான் மஸ்க் மீது பாய்ந்த டிரம்ப்.. அடுத்த 48 மணி நேரம்தான் டைம்.. கடுப்பான மஸ்க்
நியூயார்க்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.. DOGE தலைவர் எலான் மஸ்கை விமர்சனம் செய்துள்ளார். எலான் மஸ்க் வேலை பார்க்கிறார். ஆனால் அவர் இன்னும் தீவிரமாக பணிகளை செய்ய வேண்டும் என்று டிரம்ப் விமர்சனம் வைத்துள்ளார். இதையடுத்து DOGE தலைவர் எலான் மஸ்க்.. நான் இனி என் வேகத்தை அதிகரிப்பேன் என்று உறுதி அளித்துள்ளார்.
இதையடுத்து அந்நாட்டு அரசு ஊழியர்களுக்கு 48 மணி நேரம் கொடுத்துள்ளார் மஸ்க். 48 மணி நேரத்திற்குள் கடந்த வாரத்தில் என்ன மாதிரியான பணிகளை செய்தார்கள் என்று அவர்கள் மெயிலில் அப்டேட் அளிக்க வேண்டும். அப்படி அளிக்காத பட்சத்தில்.. அல்லது அவர்கள் தந்த விளக்கம் ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லாத பட்சத்தில், அவர்கள் மீது ஆக்சன் எடுக்கப்படும். அதாவது அவர்கள் பணியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று மஸ்க் தெரிவித்து உள்ளார்.

மோதல்: அமெரிக்க அதிபர் டிரம்ப் எடுத்த முக்கியமான ஒரு முடிவால் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் கடுப்பாகி உள்ளதாக கூறப்படுகிறது.
எதிர்பார்த்தபடியே.. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.. எலான் மஸ்க்கிற்கு அரசாங்கத் திறன் துறை ("DOGE") தலைவர் பொறுப்பை வழங்கி உள்ளார். இதன் மூலம் அரசில் உள்ள பல நிர்வாகிகளை எலான் மஸ்க் விரைவில் நீக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ட்விட்டர் நிறுவனத்தை மஸ்க் கையில் எடுத்த போது.. அதில் இருந்த பலர் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதேபோல் மஸ்க் அரசு நிர்வாகத்திலும் பலரை நீக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எலான் மஸ்க் இந்த முறை நேரடியாக டிரம்பிற்கு தேர்தலில் ஆதரவு கொடுத்தார். ஒரு காலத்தில் தீவிர ஜனநாயக கட்சி ஆதரவாளராக இருந்தவர் எலான் மஸ்க். கடந்த சில வருடங்களாக அவரின் அரசியல் கொள்கை வலதுசாரியாக மாறிவிட்டது.
முக்கியமாக பல விஷயங்களில் தற்போதைய அதிபர் பிடனுக்கும்.. அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸுக்கும் எதிரான முடிவுகளை எலான் மஸ்க் எடுத்துள்ளார். இவர்களை கடுமையாக எலான் மஸ்க் எதிர்த்து வந்துள்ளார். இந்த முறை டிரம்ப்பை எலான் மஸ்க் ஆதரித்துள்ளார்.
அதோடு தேர்தல் செலவிற்கான நிதி உதவிகளையும் எலான் மஸ்க் கொட்டிக்கொடுத்துள்ளார். இந்த நிலையில்தான் இவருக்கு டிரம்ப் அமைச்சரவை பதவி வழங்கி உள்ளார். ஆட்சியை சிறப்பாக நடத்துவதற்கான புதிய அமைச்சரவை உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த அமைச்சரவைதான் DOGE ஆகும். அதாவது அரசாங்கத் திறன் துறை அல்லது Department of Efficiency ஆகும்.
டிரம்ப் எலான் மஸ்க் மோதல்:
இப்படி நெருக்கமாக இருந்த டிரம்ப் எலான் மஸ்க் இடையே சிறிய கசப்பு ஏற்பட்டு உள்ளது. ஏற்கனவே அமெரிக்க அதிபராக பதவி ஏற்றுள்ள டொனால்ட் டிரம்ப் மீண்டும் கச்சா எண்ணெய் வர்த்தகம், பெட்ரோல், டீசல் வாகன பயன்பாட்டை ஊக்குவிக்க முடிவு செய்துள்ளார்.
உலகம் முழுக்க மக்கள் இடையே இவி கார், பைக் வாங்கும் மோகம் அதிகரித்து வருகிறது. டெஸ்லா இவி கார் விநியோகம் அதிகரித்துள்ள நிலையில் டிரம்ப் வெளியிட்ட இந்த அறிவிப்பு பெரிய அளவில் விவாதங்களை ஏற்படுத்தியது. இது எலான் மஸ்க்கிற்கு கிட்டத்தட்ட எதிரான முடிவாக பார்க்கப்பட்டது.
இப்படிப்பட்ட நிலையில்தான் ஏஐ உலகில் அமெரிக்கா 500 பில்லியன் டாலர் முதலீடு செய்யும் என்று டிரம்ப் நேற்று அறிவித்தார். அதன்படி ஜப்பான் SoftBank மற்றும் ChatGPTஐ உருவாக்கிய OpenAI நிறுவனம் இணைந்து இந்த பணிகளை செய்யும். அமெரிக்காவில் Stargate ஏஐயை உருவாக்க இந்த நிதி பயன்படுத்தப்படும். உலகில் நம்பர் 1 ஏஐ நுட்பமாக இது இருக்கும் என்று டிரம்ப் அறிவித்தார்.
இதைத்தான் எலான் மஸ்க் எதிர்த்து உள்ளார். அந்த அளவிற்கு முதலீடு செய்ய பணம் இல்லை என்று கூறி டிரம்ப் முடிவை நேரடியாக எதிர்த்து உள்ளார். ஆனால் அதன்பின் டிரம்ப் செய்த மற்ற போஸ்டுகளை இவர் பகிர்ந்தது வேறு கதை. எலான் மஸ்க்கின் இந்த செயலை ஓபன் ஏஐ நிறுவனர் சாம் ஆல்ட்மேன் எதிர்த்து உள்ளார். அதன்படி எப்போதும் உங்க கம்பெனி மட்டும் முக்கியமல்ல.. அமெரிக்காவின் நன்மையும் முக்கியம். நீங்கள் பொது பொறுப்பில் உள்ளீர்கள். அதனால் எல்லோரின் நன்மைக்காக யோசியுங்கள் என்று கூறி உள்ளார். ஒருகாலத்தில் ஓபன் ஏஐ உருவாக்க நிதி கொடுத்ததே மஸ்க்தான்.. அதன்பின் அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அதை விட்டு எலான் மஸ்க் வெளியேறினார். இப்போது அதே ஓபன் ஏஐயால் மஸ்க் டிரம்ப்பை சாடும் நிலை ஏற்பட்டு உள்ளது.
-
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
மீண்டும் டிரம்ப் அடித்த பல்டி! "எல்லாம் நல்லா போகுது.. தாக்குதல் கேன்சல்!" உற்று பார்க்கும் ஈரான் -
அந்த 3 கேள்விகள்! பதில் சொல்ல கூட முடியாமல் திணறல்! Starlink சேவையை இந்தியாவில் தொடங்குவதில் சிக்கல் -
பேரழிவு வர போகுது.. ஈரானுக்கு நேரடியாக டிரம்ப் தந்த மரண வார்னிங்.. மீண்டும் வெடிக்கும் போர் -
அமெரிக்காவில் இந்திய தொழிலதிபர் குடியுரிமை பறிப்பு.! டிரம்ப் அரசு அதிரடி நடவடிக்கை.. பரபர பின்னணி -
கடலோர மக்களுக்கு குடிநீர் இல்லை.. ஏரிகளை தகர்த்தது அமெரிக்கா.. ஈரான் பரபரப்பு குற்றச்சாட்டு -
ஹார்முஸ்-இல் சுட்டு வீழ்த்தப்பட்ட ஹெலிகாப்டர்.. டிரம்ப் கோபம்! ஈரான் மீது அமெரிக்கா பதிலடி தாக்குதல் -
"பதிலடி கொடுப்போம்.." நள்ளிரவில் ஈரானுக்கு டிரம்ப் கொடுத்த எச்சரிக்கை.. மீண்டும் வெடிக்க போகுது போர் -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா!












Click it and Unblock the Notifications