83 வயதிலும் சாதித்து காட்டிய அமெரிக்க சுயேட்டை வேட்பாளர்! வெர்மான்ட்டை 4வது முறையாக கைப்பற்றி அசத்தல்
நியூயார்க்: அமெரிக்காவில் அதிபர் பதவிக்கான தேர்தல் நேற்று நடந்து முடிந்துள்ள நிலையில், தற்போது முடிவுகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், 83 வயதான பெர்னி சாண்டரஸ், வெர்மான்ட் மாகாணத்தில் தொடர்ந்து 4வது முறையாக சுயேட்சை வேட்பாளராக வெற்றி பெற்று அசத்தியிருக்கிறார்.
அமெரிக்காவில் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. தற்போது அதிபராக இருக்கும் ஜோ பைடனின் பதவி காலம் முடிவடைகிறது. எனவே, நேற்று நாடு முழுவதும் புதிய அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. களத்தில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பும், ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸும் களமிறங்கியிருந்தனர். முன்னதாக ஜோ பைடன் களமிறக்கப்பட்டிருந்தார். ஆனால், அவரது உடல் நலன் காரணமாக கமலா ஹாரிஸ் களமிறக்கப்பட்டிருக்கிறார்.

வேட்பாளர்களின் பலம் என்று பார்த்தால், கமலா ஹாரிஸ் ஜனநாயக கட்சியை சேர்ந்தவர். அமெரிக்காவில் இக்கட்சிக்கு என சிறப்பான வாக்கு வங்கி இருக்கிறது. இங்கு காங்கிரஸ் கட்சியை போல, அமெரிக்காவில் ஜனநாயக கட்சியை மக்கள் பார்க்கிறார்கள். எல்லா நடவடிக்கைகளிலும் நிதானமான யோசனை, அனைத்து தரப்பினரையும் அரவணைத்து செல்லுதல், குறிப்பாக புலம் பெயர் மக்களையும் அமெரிக்க குடிமக்களாக முழுமையாக ஏற்பது என ஜனநாயக கட்சியின் நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. இது கமலாவுக்கு பெரிய அளவுக்கு கை கொடுத்திருக்கிறது. அதேபோல அமெரிக்காவில் உள்ள இந்திய வம்சாவளியினர் இடையே கமலாவுக்கு ஆதரவு அதிகரித்துள்ளது.
மறுபுறம் குடியரசு கட்சி, அமெரிக்கர்களின் நலன்தான் முக்கியம் என்றும், அதற்காக பல அதிரடி நடவடிக்கைகளையும் மேற்கொள்ள தயங்க மாட்டோம் என கூறி வருகிறது. இந்த கட்சியின் கொள்கைகள் பழமைவாதமாக இருந்தாலும், டிரம்ப் ஒரு தடாலடியான நபராக பார்க்கப்படுகிறார். எனவே, குடியரசு கட்சிக்கான வாக்கு வங்கியும் பலமானதாக இருக்கிறது. இப்படி இருக்கையில், இவர்கள் இருவருக்கும் போட்டியை ஏற்படுத்தும் வகையில், வெர்மான்ட் மாகாணத்தில் தொடர்ந்து 4 முறை சுயேட்சை வேட்பாளர் வெற்றி பெற்று வந்திருக்கிறார்.
83 வயதான பெர்னி சாண்டர் என்பவர்தான் இந்த வெற்றிக்கு சொந்தக்காரர். நேற்று நடைபெற்ற தேர்தலில், குடியரசு கட்சியின் ஜொரால்டை தோற்கடித்து இவர் தனது 4வது வெற்றியை பதிவு செய்திருக்கிறார். சுயேட்டை வேட்பாளராக இருந்தாலும் இவர் ஜனநாயக கட்சியின் ஆதரவாளராகவே அறியப்படுகிறார். அனைவருக்கும் குறைந்தபட்ச ஊதியம், மருத்துவ காப்பீடு போன்ற கோரிக்கைகளை வலுவாக எழுப்பி வருகிறார். இதனால் இந்த மாகாணத்தில் அவரை அடித்துக்கொள்ள ஆள் கிடையாது.
கடந்த 1991ல் முதன்முதலில் அமெரிக்க சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட சாண்டர்ஸ், 2007ல் செனட்டிற்குச் சென்றார். 2016 மற்றும் 2020ல் ஜனாதிபதி பதவிக்கு கூட இவர் போட்டியிட்டார் . அமெரிக்காவில் டிரம்ப், கமலாவின் வெற்றி தோல்வி எந்த அளவுக்கு பேசப்படுகிறதோ, அதே அளவுக்கு வெர்மான்ட் மாநிலத்தில் இவரது வெற்றி பரலாக பேசப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications