அமெரிக்காவிற்கு சிறப்பான செக் வைக்கும் இந்தியா.. டிராகனோடு கைகோர்த்த மோடி.. டிரம்ப் சிக்க போகிறார்
நியூயார்க்: இந்தியா-சீனா உறவு நாளுக்கு நாள் நெருக்கமாகி வருகிறது. இரண்டு நாடுகளும் கசப்புகளை மறந்து இணக்கமாகி வருகிறது. இதன் ஒரு கட்டமாக சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி, பிரதமர் நரேந்திர மோடியை நேற்று சந்தித்துப் பேசினார்.
தியான்ஜினில் நடைபெறவுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சி மாநாட்டில் பங்கேற்க சீன அதிபர் ஷி ஜின்பிங்கின் அழைப்பை வாங் யி, மோடியிடம் வழங்கினார். 2020ஆம் ஆண்டு கிழக்கு லடாக்கில் ஏற்பட்ட எல்லை மோதலுக்குப் பிறகு, ராணுவ மற்றும் ராஜதந்திர விவாதங்களை மேம்படுத்துவது குறித்து இந்த சந்திப்பில் முக்கியமாக விவாதிக்கப்பட்டது.

டிரம்ப் இந்தியாவிற்கு எதிராக கடுமையான வரி விதிப்பு
அதோடு டிரம்ப் இந்தியாவிற்கு எதிராக கடுமையான வரி விதிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள நிலையில் இந்தியா - சீனா நெருக்கமாகி உள்ளது. இந்தியப் பொருட்களுக்கான மொத்த வரி 50% ஆக உயரும் என்று டிரம்ப் கூறி உள்ளது. ஆரம்ப வரிகள் ஆகஸ்ட் 27 அன்று அமலுக்கு வந்த நிலையில், கூடுதல் வரி 21 நாட்களுக்குப் பிறகு அமலுக்கு வரும். இது அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்து இந்தியப் பொருட்களுக்கும் பொருந்தும்.
வரி விதிப்பு மட்டுமின்றி, ரஷ்ய ராணுவ உபகரணங்களை இந்தியா வாங்கியதற்கும் டிரம்ப் அபராதம் விதித்தார். இந்தியாவின் ரஷ்ய எண்ணெய் கொள்முதல் அமெரிக்க தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என டிரம்ப் கையெழுத்திட்ட நிர்வாக ஆணை ஆகஸ்ட் 27 முதல் அமலுக்கு வருகிறது. இதற்குள் ஒப்பந்தம் செய்ய 1 வாரம் மட்டுமே அவகாசம் உள்ளது.
இந்தியா சீனா நெருக்கம்
இப்படிப்பட்ட நிலையில்தான் இந்தியா-சீனா உறவு நாளுக்கு நாள் நெருக்கமாகி வருகிறது. இரண்டு நாடுகளும் கசப்புகளை மறந்து இணக்கமாகி வருகிறது. இதன் ஒரு கட்டமாக சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி, பிரதமர் நரேந்திர மோடியை நேற்று சந்தித்துப் பேசினார். உலகளாவிய வர்த்தகத்தில் அமெரிக்க டாலரின் (USD) ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தும் வகையில், BRICS நாடுகளுடனான வர்த்தகத்தை 100% இந்திய ரூபாயில் மேற்கொள்ள இந்தியா ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையை எடுத்துள்ளது. இதற்கு அண்மையில் அதிகாரப்பூர்வ சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டது.
இந்த நடவடிக்கை உலகச் சந்தைகளில் டாலரின் மேலாதிக்கத்தின் வீழ்ச்சியை விரைவுபடுத்தக்கூடும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இந்தியா மீது அமெரிக்கா கோபத்தில் உள்ள நிலையில், அமெரிக்காவிற்கு மேலும் நெருக்கடி கொடுக்கும் விதமாக இந்தியா இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
இனி டாலருக்கு வேலை இல்லை
முன்னதாக, இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வங்கிகளுக்கு ஒரு அறிவுறுத்தலை வெளியிட்டது. இதன் மூலம் வோஸ்ட்ரோ கணக்குகளை திறப்பதற்கு முன்அனுமதி தேவையில்லை என அறிவித்தது. இந்த புதிய கொள்கையின் கீழ், மற்ற நாடுகளின் ஏற்றுமதியாளர்களும் இறக்குமதியாளர்களும் இனிமேல் இந்திய ரூபாயைப் பயன்படுத்தி வர்த்தக செட்டில்மென்டுகளை சிறப்பு வோஸ்ட்ரோ கணக்குகள் மூலம் மேற்கொள்ளலாம்.
எளிமையாகச் சொன்னால், வேறு எந்த நாடாவது இந்தியாவிடமிருந்து பொருட்களை வாங்க விரும்பினால், அவர்கள் தங்கள் நாணயத்தை முதலில் அமெரிக்க டாலராக மாற்ற வேண்டிய அவசியமில்லை. அவர்கள் தங்கள் வோஸ்ட்ரோ கணக்கில் உள்ள இந்திய ரூபாயைப் பயன்படுத்தலாம். இதேபோல, இந்தியாவிலிருந்து பொருட்கள் வாங்கப்படும்போதும் இந்த நடைமுறை பொருந்தும்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications