புடினுக்கு போனை போட்ட மோடி.. ஸ்டன் ஆகி நிற்கும் டிரம்ப்.. இந்தியா எடுத்த மேஜர் முடிவு.. போச்சு?
நியூயார்க்: பிரதமர் நரேந்திர மோடி ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் நேற்று தொலைபேசியில் உரையாடினார். இரவோடு இரவாக இந்த உரையாடலின் போது, தனது 73வது பிறந்தநாளைக் கொண்டாடும் புடினுக்கு மோடி வாழ்த்து தெரிவித்தார். இரண்டு நாட்டு உறவு தொடர்ந்து நெருக்கமாக நீடிக்கும் என்று அவர் உறுதி அளித்தார்.
இரு தலைவர்களும் இருதரப்பு உறவுகளின் முன்னேற்றத்தை ஆய்வு செய்தனர். இந்தியா-ரஷ்யா இடையேயான வர்த்தகத்தை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்று இருவரும் குரல் கொடுத்தனர். 23வது இந்தியா-ரஷ்யா வருடாந்திர உச்சிமாநாட்டிற்காக ரஷ்ய அதிபரை இந்தியாவுக்கு வரவேற்பதை ஆவலுடன் எதிர்பார்த்திருப்பதாகவும் மோடி புடினிடம் தெரிவித்தார். இதையடுத்து டிசம்பர் 5-ஆம் தேதி அன்று மோடியுடன் வருடாந்திர உச்சிமாநாட்டு பேச்சுவார்த்தை நடத்த ரஷ்ய அதிபர் இந்தியாவுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்னொரு பக்கம் ரஷ்யாவுடனான எரிசக்தி உறவுகளைத் துண்டிக்க உலக நாடுகளை அமெரிக்கா வலியுறுத்தி வரும் நிலையில், இந்தியா தொடர்ந்து ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
அதாவது ரஷ்யாவிடம் இருந்து தொடர்ந்து எண்ணெய் வாங்குவோம், அமெரிக்காவின் அழுத்தத்திற்கு பணிய மாட்டோம் என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. மக்களுக்கு மலிவான எரிசக்தியை உறுதி செய்வதே இந்தியாவின் முதன்மையான நோக்கம் என்று டெல்லி அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.
இந்தியா ரஷ்யா உறவு நெருக்கம்
உலகளவில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வரும் இச்சூழலில், ரஷ்ய எண்ணெய் சலுகை விலையில் கிடைக்கிறது. தனது கச்சா எண்ணெய் தேவையில் 80% மேல் இறக்குமதி செய்யும் ஒரு நாட்டிற்கு, இந்த சலுகை விலைகள் பணவீக்கத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கவும், பொருளாதாரத்தைப் பாதுகாக்கவும் உதவுகின்றன.
உக்ரைனில் நடந்து வரும் போர் மற்றும் மாஸ்கோ மீதான தடைகளைக் காரணம் காட்டி, ரஷ்ய எண்ணெய் மீதான சார்புநிலையைக் குறைத்துக் கொள்ளுமாறு அமெரிக்கா இந்தியாவை மீண்டும் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. ஆனால், ரஷ்யாவுடனான இந்தியாவின் உறவு அரசியல் சார்ந்ததல்ல என்றும், அது தேசிய நலன்களையும் எரிசக்தி பாதுகாப்பையும் அடிப்படையாகக் கொண்டது என்றும் இந்தியா நிலைநிறுத்தியுள்ளது.
இந்தியா அமெரிக்கா மோதல் உச்சம் அடைகிறது
ஆகஸ்ட் 27 முதல் இந்தியா மீது டிரம்ப் 25% பரஸ்பர வரிகளையும், ரஷ்ய எண்ணெய் கொள்முதல் செய்ததற்காக இந்தியா மீது கூடுதலாக 25% வரிகளையும் விதித்துள்ளார். இதனால் இந்தியா மீதான மொத்த வரிகள் 50% ஆக உயர்ந்துள்ளது. டிரம்ப் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50% கூடுதல் வரி விதிக்கும் நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டார். இந்த உத்தரவில், ரஷ்ய எண்ணெயை இந்தியா நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இறக்குமதி செய்வது அமெரிக்காவிற்கு அசாதாரணமான மற்றும் மோசமான அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. தேசிய பாதுகாப்பு, வெளியுறவுக் கொள்கை கவலைகள் மற்றும் பிற வர்த்தக சட்டங்களை மேற்கோள் காட்டி அவர் இந்தியாவிற்கு எதிராக அபராதம் விதித்தார்.
அமெரிக்கா இந்தியா மீது விதித்துள்ள 50% இறக்குமதி வரிகளுக்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சீன மக்கள் ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிரான போரின் வெற்றி மற்றும் உலக பாசிச எதிர்ப்பு போரின் 80வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் கருத்தரங்கில் பேசிய ஸு, "அமெரிக்கா நீண்ட காலமாக சுதந்திர வர்த்தகத்தால் பயனடைந்துள்ளது. ஆனால் இப்போது அது அதிக விலைகளைக் கோருவதற்கு வரிகளை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்துகிறது. இந்தியாவின் மீது 50% வரி விதிப்பது நியாயமற்றது, மோசமானது, அதை சீனா உறுதியாக எதிர்க்கிறது," என்று குறிப்பிட்டார்.
இந்தியா ரஷ்யா எண்ணெய் மோதலுக்கு காரணம்
ஐரோப்பா தொடர்ந்து ரஷ்ய எரிவாயுவை இறக்குமதி செய்து வருவதால், இந்தியா தனது சொந்த எரிசக்தி தேவைகளை பூர்த்தி செய்வதற்காக தனியாகப் பிரித்துப் பார்க்கப்படக்கூடாது என்று வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் முன்னதாக கூறி இருந்தார். இப்போது ஐரோப்பா ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை தற்காலிகமாக நிறுத்தி உள்ளது. ஆனால் இதற்காக இந்தியா எண்ணெய் வாங்குவதை தடுக்க கூடாது என்று கூறி உள்ளது. கொள்முதலை எளிதாக்க, இந்திய சுத்திகரிப்பு ஆலைகள் அமெரிக்க டாலர் அல்லாத கட்டண முறைகளை பின்பற்றுகின்றன.
இந்தியா ரஷ்யா நெருக்கம்
இந்தியாவிற்கு நெருக்கடி கொடுக்கும் அதே அமெரிக்கா ரஷ்யாவிடம் யுரேனியம் வாங்குகிறது. அதை மட்டும் நிறுத்தவில்லை. அதை அவர்கள் முதலில் நிறுத்தட்டும். நாங்கள் நிறுத்துகிறோம் என்று இந்தியா நினைக்கிறதாம். இந்தியாவின் இந்த நிலைப்பாடு உலக அரசியலில் அதன் தனிப்பட்ட வலிமையை, பவரை எடுத்துக்காட்டுகிறது என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். மேற்கு நாடுகளுடனும் ரஷ்யாவுடனும் உறவுகளைச் சமநிலைப்படுத்துவதன் மூலம், இந்தியா தனது சொந்த முன்னுரிமைகளில் கவனம் செலுத்தும் ஒரு சுதந்திரமான சக்தியாகத் தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறது.
தற்போதைக்கு, ரஷ்ய எண்ணெய் இந்திய சுத்திகரிப்பு ஆலைகளுக்கு தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. இது எரிபொருள் விலைகளை நிலைப்படுத்த உதவுகிறது. அமெரிக்காவின் ராஜதந்திர அழுத்தங்கள் இருந்தபோதிலும், எரிசக்தி பாதுகாப்பிற்கே முன்னுரிமை என்ற இந்தியாவின் நிலைப்பாடு தெளிவாகவே உள்ளது.
-
"₹370 பிரியாணி வாங்கி கொடுத்தால் உடலுறவு?" பெரிதாக வெடிக்கும் சர்ச்சை.. களத்தில் இறங்கிய போலீஸ் -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
நடுக்கடலில் தத்தளித்த இந்தியர்கள்.. அடுத்த நொடி அமெரிக்க செய்த காரியம்.. மீண்டும் மீண்டுமா.! -
இந்தியரின் நிறுவனத்தை பறிக்கும் பிரான்ஸ்? நிறைவேறிய சட்ட மசோதா.. அதிர்ச்சி -
டென்ஷனான இந்தியா.. அமெரிக்க தூதரக பொறுப்பாளரை நேரில் அழைத்து சம்மன்.. பரபரப்பு சம்பவத்தின் பின்னணி -
ஈரான் - அமெரிக்கா போர் முடிவுக்கு வருகிறது? 24 மணி நேரத்தில்.. பாகிஸ்தான் பிரதமர் முக்கிய அறிவிப்பு -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
சீனா, பாகிஸ்தானுக்கு ஷாக் கொடுத்த இந்தியா! 2 நாட்களில்.. 3 ஏவுகணை சோதனைகள்! DRDO அசத்தல்! -
இந்தியக் கப்பல்கள் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்.. டிரம்பின் பகீர் குற்றச்சாட்டும், பின்னணியும்! -
இந்திய மாலுமிகள் மீது அட்டாக்! அமெரிக்க வெளியுறவு செயலாளரை கூப்பிட்டு கண்டனம் தெரிவித்த மத்திய அரசு! -
அதானி நிறுவனத்தின் அசுர வளர்ச்சி! சோலார் பேனல் உற்பத்தியில்.. புதிய உச்சம்! -
மீண்டும் டிரம்ப் அடித்த பல்டி! "எல்லாம் நல்லா போகுது.. தாக்குதல் கேன்சல்!" உற்று பார்க்கும் ஈரான்












Click it and Unblock the Notifications