செமிகண்டக்டர் உற்பத்தியில் சீனாவை ஓரம் கட்டும் இந்தியா.. சர்வதேச அளவில் அமெரிக்காவுடன் கைகோர்ப்பு
நியூயார்க்: உலகம் முழுவதும் செமிகண்டக்டருக்கு டிமாண்ட் அதிகரித்து வருகிறது. இப்படி இருக்கையில், செமிகண்டக்டர் உற்பத்தியில் சீனாவை பின்னுக்கு தள்ளும் விதமாக, இந்தியா-அமெரிக்காவுடன் கைகோர்க்கிறது.
ஒரு நாட்டிற்கும் இன்னொரு நாட்டிற்குமான போட்டி என்பது தற்போது டிஜிட்டல் யுகத்தில் நடந்துக்கொண்டிருக்கிறது. பொருளாதாரத்தை வளர்ச்சி பாதையில் தூக்கி நிறுத்த, டிஜிட்டல் துறை பெரும் பங்கு வகிக்கிறது. இன்றும் சிம்பிளாக சொல்வதெனில், டிஜிட்டல் சாதனங்களை பயன்படுத்தாத மனிதர்களே கிடையாது. ஒவ்வொரு நாளும் நாம் பயன்படுத்தும் டிஜிட்டல் பொருட்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருக்கிறது. எனவே இந்த தேவையை நிவர்த்தி செய்ய உற்பத்தி அதிகரிக்கிறது.

இந்த உற்பத்தி, வேலைவாய்ப்புகளையும், மக்களின் வாங்கும் சக்தியையும் அதிகரிக்கிறது. இப்படியாக பொருளாதாரம் உயர்கிறது. ஆக.. மின்னணு தொழில்நுட்ப துறையில் யார் அதிக முதலீடு செய்கிறார்களோ, அவர்களுக்குதான் எதிர்காலம் இருக்கிறது என்கிற சூழல் உருவாகிவிட்டது. குறிப்பாக செமிகண்டக்டர் உற்பத்தியில் உலக நாடுகள் பல ஆர்வம் காட்டி வருகின்றன.
செமிகண்டக்டர்: இது ரொம்ப சின்ன பொருள்தான். ஆனால், அது இல்லாமல் எந்த எலக்ட்ரானிக் பொருட்களுமே கிடையாது. ஸ்மார்ட்போன்கள், மடிக்கணினிகள், டேப்லெட்டுகள், ஸ்மார்ட் வாட்ச்கள் மற்றும் கேமிங் கன்சோல்கள் ஆகியவை செமிகண்டக்டர்களை நம்பிதான் இருக்கின்றன. அதேபோல கம்ப்யூட்டிங் துறையில், மைக்ரோசிப்கள், மெமரி சிப் போன்றவற்றிற்கும் இது அவசியமாகிறது.
இது தவிர, சோலார் பேனல்கள், மருத்துவ சாதனங்கள், ஆட்டோமோட்டிவ், விண்வெளி, LED விளக்குகள், இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் (IoT), 5G தொலைத்தொடர்பு, ஸ்மார்ட் ஹோம் சாதனங்கள், ஃபிட்னஸ் டிராக்கர்கள், தொலைநோக்கிகள் போன்ற அறிவியல் கருவிகள் ஆகியவற்றில் செமிகண்டக்டரின் பயன்பாடுகள் இருக்கிறது.
எந்த நாடுகள் டாப்?: தம்மாத்துண்டு ஆங்கர்தான்.. அவ்வளவு பெரிய கப்பலையே புடிச்சு நிறுத்துது என்கிற ரீதியில், மொத்த உலகத்தையும் செமிகண்டக்டர் ஆட்டிப்படைத்து வருகிறது. இந்த விஷயத்தை முன்னாடியே தெரிந்துக்கொண்ட பல நாடுகள் செமிகண்டக்டர் உற்பத்தியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. தற்போது வரை தைவான் நாடுதான் இந்த உற்பத்தியில் டாப். இது தவிர சாம்சங் நிறுவனத்தை கொண்டிருக்கும் தென்கொரியா, இன்டெல், மைக்ரோன் டெக்னாலஜி போன்றவற்றை கொண்டிருக்கும் அமெரிக்கா அடுத்தடுத்து டாப் பட்டியலில் இருக்கின்றன.
சீனா: ஆனால், என்னதான் இந்த நிறுவனங்கள் எல்லாம் டாப்பாக இருந்தாலும், செமிகண்டக்டரை அதிக அளவில் உற்பத்தி செய்து விநியோகிப்பது சீனாதான். இதற்கு அந்நாட்டின் மக்கள் தொகை எண்ணிக்கையும், தொழில்நுட்ப துறையில் அந்நாடு எட்டியிருக்கும் தன்னிறைவும் முக்கிய காரணமாகும். எனவே, சீனாவுக்கு போட்டியாக யார் வருவார் என்கிற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. இப்படி இருக்கையில்தான் இந்தியா இந்த முறையில் என்ட்ரி கொடுத்திருக்கிறது.
இந்தியா: கடந்த 2022ம் ஆண்டு இந்தியாவுக்கும்-அமெரிக்காவுக்கும் இடையே ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானது. இதில் அதிபர் ஜோபைடன் கையெழுத்திட்டார். அதன்படி, செமிகண்டக்டர் உற்பத்தியில் இந்தியாவுக்கும் உதவுவதாக அமெரிக்கா அறிவித்திருக்கிறது. நேற்று நடந்த நிகழ்ச்சியில், பொருளாதார மற்றும் வணிக விவகாரங்களுக்கான பணியகத்தின் (EB) வர்த்தகக் கொள்கை மற்றும் பேச்சுவார்த்தைகளுக்கான அமெரிக்க துணை வெளியுறவுச் செயலாளர் ஜே. ராபர்ட் கார்வெரிக், இந்தியாவுக்கான ஒத்துழைப்பு குறித்து கையெழுத்திட்டுள்ளார்.
இந்த ஒப்பந்தம் செயல்பாட்டுக்கு வரும் பட்சத்தில், சர்வதேச அளவில் செமிண்டக்டர் உற்பத்தியில் இந்தியா தவிர்க்க முடியாத நாடாக மாறும். இது சீனாவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் என்று சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
-
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications