அமெரிக்கா என்ன விலைனு கேளு! 2075ல் உலகின் 2வது பெரிய பொருளாதார நாடாக மாறும் இந்தியா! அப்போ சீனா?
அமெரிக்கா என்ன விலைனு கேளு! 2075ல் உலகின் 2வது பெரிய பொருளாதார நாடாக மாறும் இந்தியா! அப்போ சீனா?
நியூயார்க்: எதிர்வரும் ஐம்பது ஆண்டுகளில் உலகப் பொருளாதாரத்தின் அதிகார மையம் பெரிய அளவில் மாறப்போகிறது என உலகப் புகழ்பெற்ற முதலீட்டு வங்கி 'கோல்ட்மேன் சாக்ஸ்' தெரிவித்துள்ளது. 2075-ம் ஆண்டுக்குள் இந்தியா, அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளி, சீனாவுக்கு அடுத்ததாக உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக மாறும் என அந்த நிறுவனம் கணித்துள்ளது.
நியூயார்க் தலைமையகமாகக் கொண்டு செயல்படும் 'கோல்ட்மேன் சாக்ஸ்' நிறுவனம், உலக முதலீட்டாளர்களால் மிகுந்த நம்பிக்கையுடன் பார்க்கப்படும் நிதி நிறுவனங்களில் ஒன்று என்பது மிகவும் கவனிக்கத்தக்கது ஆகும்.
நீண்டகால பொருளாதார வளர்ச்சி, முதலீட்டு போக்குகள் மற்றும் உலக நாடுகளின் எதிர்கால நிலை குறித்து அந்த நிறுவனம் வெளியிடும் அறிக்கைகள், சர்வதேச அளவில் முக்கிய ஆதாரமாக கருதப்படுகின்றன. கடந்த 2023ஆம் ஆண்டு இதே போன்ற அறிக்கையை அந்நிறுவனம் வெளியிட்டிருந்தது.

கோல்ட்மேன் சாக்ஸ்
அதன்படி இந்திய பொருளாதாரம் சீராக வளர்ந்து வந்த நிலையில், இரண்டாண்டுகளுக்கு பிறகும் இந்தியா அதே நிலையில் பயணிக்கும் நிலையில், அந்நிறுவனத்தின் அறிக்கை இந்திய பொருளாதாரம் உலக அளவில் இரண்டாம் இடத்தை பெறும் என உறுதியாக சொல்லியுள்ளது. அந்த வகையில், சமீபத்தில் வெளியிடப்பட்ட நீண்டகால பொருளாதார கணிப்பில், 2075-ம் ஆண்டுக்கான உலக பொருளாதார வரிசை விவரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) அடிப்படையில் சீனா சுமார் 57 டிரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடன் உலகின் முதலிடத்தில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
உலக பொருளாதாரம்
இதற்கு அடுத்த இடத்தில் இந்தியா சுமார் 52.5 டிரில்லியன் டாலர் பொருளாதார மதிப்புடன் இரண்டாவது இடத்தைப் பிடிக்கும் என்றும், தற்போது உலகின் முதல் இடத்தில் இருக்கும் அமெரிக்கா 51.5 டிரில்லியன் டாலர் மதிப்புடன் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்படும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. (ஒரு டாலர் = ரூ.90 என்ற கணக்கீட்டின் அடிப்படையில் இந்த மதிப்புகள் குறிப்பிடப்பட்டுள்ளன.)
இந்திய பொருளாதாரம்
இந்த அபார வளர்ச்சிக்கு இந்தியாவின் இளம் மற்றும் வேகமாக வளர்ந்து வரும் மக்கள் தொகை, தொழில்நுட்ப வளர்ச்சி, புதுமை சார்ந்த தொழில்கள், அதிகரிக்கும் முதலீடுகள் மற்றும் உயர்ந்து வரும் தொழிலாளர் உற்பத்தித்திறன் ஆகியவை முக்கிய காரணங்களாக அமையும் என கோல்ட்மேன் சாக்ஸ் கூறுகிறது. குறிப்பாக, மனித வளமே இந்தியாவின் மிகப்பெரிய பலமாக இருக்கும் என்றும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
2075 கணிப்பு
2075-ம் ஆண்டுக்கான உலக பொருளாதார பட்டியலில் இந்தோனேசியா, நைஜீரியா, பாகிஸ்தான், எகிப்து, பிரேசில், ஜெர்மனி, மெக்சிகோ, இங்கிலாந்து, ஜப்பான், ரஷியா, பிலிப்பைன்ஸ், பிரான்ஸ், வங்காளதேசம், எத்தியோப்பியா, சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளும் முக்கிய இடங்களைப் பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியம்
தற்போதைய நிலவரத்தைப் பார்க்கும்போது, உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் (IMF) வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையில், 2024-25ம் ஆண்டில் அமெரிக்கா சுமார் 30.6 டிரில்லியன் டாலர் பொருளாதார மதிப்புடன் உலகின் மிகப்பெரிய பொருளாதாரமாக உள்ளது. அதனைத் தொடர்ந்து சீனா, ஜெர்மனி, ஜப்பான், இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் முன்னணி பொருளாதார நாடுகளாக உள்ளன.
இந்தியா
இந்த சூழலில், வரும் தசாப்தங்களில் இந்தியா அமெரிக்காவை முந்தும் என்ற கோல்ட்மேன் சாக்ஸ் கணிப்பு, இந்தியாவின் வளர்ந்து வரும் பொருளாதார சக்தியை உலக அளவில் மீண்டும் உறுதி செய்வதாக பார்க்கப்படுகிறது.
-
ட்ரம்ப் மூக்கை உடைத்த ஈரான்.. 15 கண்டிஷன்களை தூக்கி எரிந்த அலியாபாடி! வெறி கொண்டு அடிக்கும் இஸ்ரேல்! -
Iran: அமெரிக்காவின் F18 போர் விமானத்தை குருவியை சுடுவது போல சுட்டு வீழ்த்திய ஈரான் ராணுவம்.. வீடியோ! -
அதிகாலையில் வந்த அறிவிப்பு! மோடியே சொன்னாலும்.. குறையாத பெட்ரோல், டீசல் விலை! -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
90% பேருக்கு தெரியாது.. கலர் கலராக இருக்கும் ரயில்கள்.. ஒவ்வொன்றுக்கும் என்ன அர்த்தம் தெரியுமா! -
இனி பெட்ரோல் பங்க், சூப்பர் மார்கெட்களிலும் கூட மது கிடைக்கும்.. புதிய கலால் கொள்கை வெளியீடு -
ஈரானின் உச்ச தலைவராக.. என்னை பொறுப்பேற்க சொன்னார்கள்! நான்தான் வேண்டாம் என சொல்லிட்டேன் - டிரம்ப் -
லாட் டவுன் வந்துருச்சு..கொஞ்சம் கொஞ்சமாய் முடங்கும் உலக நாடுகள்! பெட்ரோல், டீசலால் ஒர்க் ஃப்ரம் ஹோம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
ஈரானுக்கு மேலும் 10 நாட்கள் அவகாசம்.. வழிக்கு வந்த டிரம்ப்! போருக்கு குட்டி பிரேக்! -
போர் ஒருபக்கம் இருக்கட்டும்.. 10 கப்பல்களில் எண்ணெய் பரிசாக கொடுத்த ஈரான்! டிரம்ப் பெருமிதம் -
Donald Trump: டிரம்ப் மிகப்பெரிய தாக்குதலை நடத்த தயாராகி வருகிறார்.. ஈரானை மீண்டும் மிரட்டும் அமெரிக்கா












Click it and Unblock the Notifications