"ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் தரணும்.!" ஆதரவாக நிற்கும் ஐரோப்பிய நாடுகள்

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற இந்தியாவின் நீண்டகால கோரிக்கைக்கு ஐரோப்பாவை சேர்ந்த 4 நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. ஐநா கூட்டத்தையொட்டி நடைபெற்ற முதல் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்றிருந்த போலந்து, ஹங்கேரி, ஸ்லோவாக்கியா மற்றும் செக் குடியரசு ஆகிய 4 நாடுகளும் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

உலகின் உள்ள மிக முக்கியமான ஐநா சபைகளில் ஒன்று ஐநா பாதுகாப்பு சபை.. இந்த சபையில் சீனா, பிரான்ஸ், ரஷ்யா, பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகள் நிரந்தர உறுப்பினர்களாக உள்ளன. மேலும், 10 நாடுகள் சுழற்சி முறையில் தற்காலிக உறுப்பினர்களாக இருக்கும். தற்காலிக உறுப்பினர்களின் பதவிக்காலம் 2 ஆண்டுகள் மட்டுமே ஆகும்!

India UN

இந்தியாவுக்கு ஆதரவு

இதில் நிரந்தர உறுப்பினராக இருக்கும் நாடுகளுக்கு வீட்டோ உள்ளிட்ட பல கூடுதல் அதிகாரங்கள் உள்ளன. இந்த ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் தான் நிரந்தர உறுப்பினராக இந்தியா நீண்ட காலமாகவே முயன்று வருகிறது. இந்த முயற்சிக்கு தான் இப்போது 4 முக்கிய ஐரோப்பிய நாடுகள் ஆதரவு கொடுத்துள்ளன. விசெக்ராட் குழுமம் எனப்படும் V4 அமைப்பில் உள்ள போலந்து, ஹங்கேரி, ஸ்லோவாக்கியா மற்றும் செக் குடியரசு ஆகிய நாடுகள் தான் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

இந்த 4 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் இந்தியாவுடன் முதன்முறையாக இணைந்து கூட்டம் நடத்திய நிலையில், இந்தியாவின் ஐநா பாதுகாப்பு கவுன்சில் நிரந்தர உறுப்பினர் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த கூட்டத்துக்கு பிறகு பேசிய ஸ்லோவாக்கியா வெளியுறவு அமைச்சர் ஜுராஜ் பிளானர், V4 நாடுகள் அனைத்தும் இந்தியாவின் கோரிக்கையை ஆதரிப்பதாக தெரிவித்தார்.

ஐநா கவுன்சில்

இது குறித்து அவர் கூறுகையில், "V4 நாடுகளாகிய நாங்கள் அனைவரும் ஒருமித்த கருத்தில் இருக்கிறோம். குளோபல் சவுத் நாடுகளின் ஒரு பகுதியாகவும், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் வளர்ந்து வரும் வல்லரசாகவும் உள்ள இந்தியா, ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக இடம்பெற வேண்டும்" என்று தெரிவித்தார். இதன் மூலம் போலந்து, ஹங்கேரி, ஸ்லோவாக்கியா மற்றும் செக் குடியரசு ஆகிய 4 மத்திய ஐரோப்பிய நாடுகளும் இந்தியாவின் நிரந்தர உறுப்பினர் முயற்சிக்கு வெளிப்படையான ஆதரவை தெரிவித்துள்ளன.

வரலாற்று நிகழ்வு

முதல்முறையாக நடந்த இந்த V4-இந்தியா வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், "புதிய வரலாற்று நிகழ்வு" என்று குறிப்பிட்டார். கூட்டத்தில் இந்தியாவுக்கும் V4 நாடுகளுக்கும் இடையிலான அரசியல், பொருளாதாரம், தொழில்நுட்பம், பாதுகாப்பு தொடர்புகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து ஒப்புக்கொள்ளப்பட்டது. மேலும், ஆண்டுதோறும் வெளியுறவு அமைச்சர்கள் அளவில் கூட்டம் நடத்தவும், வருடாந்திர வர்த்தக மாநாட்டை நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியா மற்றும் V4 நாடுகளுக்கு இடையே தொழில்நுட்ப துறையில் ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

ஒத்துழைப்பு

பாதுகாப்பு துறையில் ஏற்கெனவே இரு தரப்புக்கும் வலுவான உறவு இருப்பதாக ஜெய்சங்கர் தெரிவித்தார். அந்த ஒத்துழைப்பை மீண்டும் வலுப்படுத்தி, அடுத்தகட்டத்துக்கு கொண்டு செல்ல இந்தியா விரும்புவதாகவும் அவர் கூறினார். விண்வெளி, ஆராய்ச்சி, கல்வி, கலாச்சார பரிமாற்றம் உள்ளிட்ட துறைகளிலும் ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்து அமைச்சர்கள் விவாதித்தனர்.

மேலும், உக்ரைன் மோதல் மற்றும் வளைகுடா பிராந்திய நிலவரம் உள்ளிட்ட முக்கிய சர்வதேச விவகாரங்களும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன. அரசியல் ரீதியான நெருக்கமான ஒத்துழைப்பு, பொருளாதார உறவுகளை விரிவுபடுத்துதல், தொழில்நுட்பம், ஆராய்ச்சி ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கவும் முடிவு செய்யப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+