ஈரானின் 10 கண்டிஷன்.. தடைகளை நீக்கு... நஷ்டஈடு கொடு.. அமெரிக்காவை அதிரவைத்த ஈரானின் அமைதி டீல்
நியூயார்க்: ஈரான் - அமெரிக்கா இடையில் 2 வார போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. ஹார்மூஸ் ஜலசந்தி இதனால் இரண்டு வாரங்களுக்கு திறக்கப்படும். ஆனால் இதற்கு ஈரான் 10 முக்கியமான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் "அமைதி... அமைதி..." எனப் பேசிக்கொண்டிருக்க, ஈரான் அரசு ஊடகமான (State Broadcaster) 'சஹார்' (Sahar) வெளியிட்டுள்ள அந்த 10 அம்சத் திட்டம் சர்வதேச அரசியலில் அணுகுண்டாக வெடித்திருக்கிறது. "நாங்கள் சொல்வதைக் கேட்டால் மட்டுமே போர் நிறுத்தம்" என ஈரான் வைத்துள்ள நிபந்தனைகள், அமெரிக்காவின் மேலாதிக்கத்திற்கு விடுக்கப்பட்ட நேரடி சவாலாகப் பார்க்கப்படுகிறது.

ஈரான் முன்வைத்துள்ள அந்த அதிரடி 10 அம்சங்கள் இதோ:
ஈரானின் 10 அம்ச நிபந்தனைகள்:
கூட்டுப் போர் நிறுத்தம்: ஈராக், லெபனான் மற்றும் ஏமன் ஆகிய நாடுகள் மீது நடத்தப்படும் போரை அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் உடனடியாக, முழுமையாக நிறுத்த வேண்டும்.
ஈரான் மீது இனி போரே இல்லை: ஈரான் மீதான ராணுவ நடவடிக்கைகள் நிரந்தரமாகக் கைவிடப்பட வேண்டும். இதற்கு காலக்கெடு கிடையாது.
மத்திய கிழக்கு அமைதி: பிராந்தியத்தில் நிலவும் அனைத்து மோதல்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்.
ஹார்முஸ் ஜலசந்தி திறப்பு: சர்ச்சைக்குரிய ஹார்முஸ் ஜலசந்தி மீண்டும் கப்பல் போக்குவரத்திற்காகத் திறக்கப்படும்.
புதிய பாதுகாப்பு நெறிமுறை: ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்தின் சுதந்திரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய புதிய நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் உருவாக்கப்படும்.
போர் நஷ்டஈடு: இதுவரை நடந்த போரினால் ஈரானுக்கு ஏற்பட்ட சேதங்கள் மற்றும் மறுசீரமைப்புப் பணிகளுக்கான முழு இழப்பீட்டுத் தொகையையும் அமெரிக்கா வழங்க வேண்டும்.
தடைகள் முழு நீக்கம்: ஈரான் மீது விதிக்கப்பட்டுள்ள அனைத்துப் பொருளாதாரத் தடைகளையும் நீக்குவதாக அமெரிக்கா உறுதி அளிக்க வேண்டும்.
முடக்கப்பட்ட நிதி: அமெரிக்காவால் முடக்கி வைக்கப்பட்டிருக்கும் ஈரானின் பல பில்லியன் டாலர் நிதி மற்றும் சொத்துக்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்.
அணு ஆயுத உறுதிமொழி: பதிலுக்கு, ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்க மாட்டோம் என முழுமையாக உறுதி அளிக்கிறது.
உடனடி அமல்: மேற்கண்ட நிபந்தனைகள் ஏற்கப்பட்ட அடுத்த நிமிடம், அனைத்து முனைகளிலும் போர் நிறுத்தம் உடனடியாக அமலுக்கு வரும்.
இது சாத்தியமா?
இந்த நிபந்தனைகளைப் பார்த்தால், ஈரான் ஒரு 'வெற்றியாளராக' நின்றுகொண்டு அமெரிக்காவுக்குக் கட்டளை இடுவது போல இருக்கிறது. குறிப்பாக, "நஷ்டஈடு கொடு" மற்றும் "அனைத்துத் தடைகளையும் நீக்கு" என்ற நிபந்தனைகளை ட்ரம்ப் நிர்வாகம் அப்படியே ஏற்குமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறி.
இருப்பினும், கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் அமெரிக்கத் தேர்தலைக் கருத்தில் கொண்டு, ட்ரம்ப் இதில் சில முக்கிய அம்சங்களுக்குப் பச்சைக்கொடி காட்டியிருப்பதாகவே தகவல்கள் வருகின்றன.
இதன் விளைவு என்ன?
ஈரான் அரசு ஊடகம் வெளியிட்டுள்ள இந்தத் திட்டம் உண்மையாக இருக்கும் பட்சத்தில், இது அமெரிக்காவுக்கு ஒரு கசப்பான மருந்தே. ஒருவேளை அமெரிக்கா இதற்கு இணங்கினால், அது ஈரானின் மிகப்பெரிய ராஜதந்திர வெற்றியாகவும், ட்ரம்ப்பின் அரசியல் வரலாற்றில் ஒரு 'பெரிய பல்டி'யாகவும் பதியப்படும்.
நிபந்தனைகளை அமெரிக்கா ஏற்குமா? அல்லது இது வெறும் 'மைண்ட் கேம்' தானா? வரும் வெள்ளிக்கிழமை இஸ்லாமாபாத் சந்திப்பில் விடை தெரிந்துவிடும்!
-
பாகிஸ்தானில் ‘லாக்டவுன்' அறிவிப்பு.. ஈரான் வைத்த பெரிய ஆப்பு.. பதறும் மக்கள் -
முடிவுக்கு வந்த போர்.. "ஈரான் மீதான தாக்குதல் 2 வாரங்களுக்கு நிறுத்தம்.." அதிபர் டிரம்ப் அறிவிப்பு -
"உங்க நாடு சுக்கு நூறாக சிதறும்.." வாயை விட்ட பாகிஸ்தானுக்கு அவர்கள் மொழியிலேயே ராஜ்நாத் சிங் பதிலடி -
டிரம்ப் நினைப்பது போல் ஈரானை முற்றாக அமெரிக்காவால் அழித்துவிட முடியுமா? உண்மை என்ன -
கோயம்பேடு வா.. தாம்பரம் காதலியிடம் இருந்து வந்த அழைப்பு.. காதலனுக்கு கனவிலும் நினைக்காத சம்பவம் -
முதல் கூட்டத்திலேயே வானதிக்கு நோஸ் கட்.. கோவையில் ஆட்டத்தை ஆரம்பித்த பாஜக -
பி.எஃப் கணக்கு வைத்திருக்கும் எல்லோருக்கும்.. அடிக்குது மெகா ஜாக்பாட்.. தேடி வரும் பணம்.. எவ்வளவு? -
சிறகடிக்க ஆசை: விஜயா ஆட்டத்தை அடக்க வரும் புது மருமகள்.. சரியான பதிலடி கொடுத்த மீனா! சந்தோஷத்தில் மனோஜ் -
கேஸ் சிலிண்டர் புக்கிங்கில் 35 நாட்கள் இடைவெளி.. புதிய 5 ரூல்ஸ் தெரியுமா? மானியம் வரவில்லைனா உஷார் -
சவுதி அரேபியாவுக்கு வேட்டு வைக்கும் ஈரான்.. சூயஸ் கால்வாய்-க்கு செக்.. ஹாட்ஸ்பாட் ஆக மாறும் பாப் அல்-மண்டப்! -
தமிழக தேர்தல்.. எந்த கட்சிக்கு அரியணை ஏறும் வாய்ப்பு.. இதுவரை வந்த கருத்து கணிப்புகள்.. சொல்வது என்ன? -
கூட்டணி மாறியதால் தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் கொடுக்கலை! ஆனால் அது உண்மைதான்! எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications