ராஜதந்திரங்கள் எல்லாம் தோல்வி..கண்டிப்பாக போர்தொடுப்போம்.. ஈரான் அதிரடி.. மேற்கு உலகமே அதிருதே

Subscribe to Oneindia Tamil

டெஹ்ரான்: இஸ்ரேலுக்கு பதிலடி கொடுப்பதை தவிர்க்குமாறு இங்கிலாந்து மற்றும் பிற மேற்கத்திய நாடுகளின் அழைப்புகளை ஈரான் நிராகரித்துள்ளது. பதட்டங்களைக் குறைக்கும் நோக்கில் சர்வதேச நாடுகள் மேற்கொண்ட இராஜதந்திரங்கள் அனைத்தும் தோல்வியில் முடிந்து உள்ளன.

இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தொலைபேசி உரையாடல் மூலம் ஈரானிய ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியானிடம் பேசினார். அதில் இஸ்ரேல் மீதான இராணுவத் தாக்குதல் தொடர்பான அதன் தற்போதைய திட்டங்களை கைவிடுமாறு வலியுறுத்தினார். ஆனால் இதை ஈரான் ஏற்றுக்கொள்ளவில்லை. மேற்கு உலக நாடுகள் சொன்னதை கேட்க முடியாது. கண்டிப்பாக இஸ்ரேல் மீது பதிலடி தாக்குதல் நடத்தியே தீருவோம் என்று ஈரான் தெரிவித்துள்ளது. இதனால் கண்டிப்பாக இந்த நாடுகளுக்கு இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

போர் தாக்குதல் வாய்ப்பு: ஈரான் - அமெரிக்கா - இஸ்ரேல் இடையே போர் மூண்டு.. ஒருவேளை அது உலகப் போராக மாறினால் யார் முதலில் தாக்குதல் நடத்துவார்கள் என்ற கேள்வி உள்ளது. எந்த நாடு.. எந்த குழு முதல் தாக்குதலை நடத்தும்.. என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த தாக்குதல்கள் பற்றி பார்க்கும் தாக்குதலுக்கான காரணங்கள் பற்றி முதலில் பார்க்கலாம்.

காரணம் 1 - இஸ்ரேல் பாலஸ்தீன போரின் ஒரு பகுதியாக காஸாவில் உள்ள Al-Ahly Baptist என்ற மருத்துவமனை மீது ராக்கெட் வீசி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. விமான ரெய்டில் அவர்கள் ராக்கெட்டை ஏவினர். இதில்தான் மருத்துவமனை தாக்கப்பட்டது. இந்த தாக்குதலில் மொத்தம் 800 பேர் வரை பலியாகினர்.

காரணம் 2 - இதற்கு பதிலடியாக கடந்த 2 மாதங்களுக்கு முன்பே இஸ்ரேல் மீது ட்ரோன், ஏவுகணை தாக்குதலை தொடங்கியது ஈரான்.

காரணம் 3- இதற்கு பதிலடியாக ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனிஹ் சமீபத்தில் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டார். இந்த ஹமாஸ் அமைப்புதான் பாலஸ்தீனத்தில் இஸ்ரேலுக்கு எதிராக போராடி வருகிறது. இவர்களுக்கு உறுதுணையாக ஹிஸ்புல்லா அமைப்பு உள்ளது.

காரணம் 4 - இதையடுத்து சமீபத்தில் ஹிஸ்புல்லாவின் மூத்த தளபதி ஃபுவாட் ஷுக்ர் இதேபோல் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டார்.

காரணம் 5 - ஹிஸ்புல்லா அமைப்பு ஈரான் ஆதரவை பெற்று இஸ்ரேலில் போர் செய்து வருகிறது. லெபனாலில் இருந்து இந்த அமைப்பு இயங்கி வருகிறது. இந்த இரண்டு அமைப்புகளின் தலைவர்கள் கொலை செய்யப்பட்டது, சிரியாவில் தங்களுடைய தூதரகம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல், இஸ்ரேல் பாலஸ்தீன போரின் ஒரு பகுதியாக காஸாவில் உள்ள Al-Ahly Baptist என்ற மருத்துவமனை மீது ராக்கெட் தாக்குதல் இதெல்லாம் நிலைமையை மோசமாக்கியது.

காரணம் 6 - இதோடு நிற்காமல் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி பயணித்த ஹெலிகாப்டர் விபத்து, பாலஸ்தீன போர் தொடங்கி பல விஷயங்கள் இந்த மோதலுக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.

உலகப்போர்: இப்போது இதற்கு பழிவாங்கவே இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்த முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்துகிறது என்றால் அந்த பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க ராணுவ மையங்கள் மீதும் தாக்குதல்களை கண்டிப்பாக நடத்தும். அதன்படி, அறிவித்தப்படியே ஈரான் தற்போது அமெரிக்கா மீது தாக்குதல் நடத்தி உள்ளது. ஈராக்கில் இருக்கும் அமெரிக்காவின் ராணுவ மையம் மீது ஈரான் தாக்குதல் நடத்தி உள்ளது.

ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா குழுக்கள் மற்றும் ஈரான் நாட்டு ராணுவத்தின் கூட்டு தாக்குதலாக இது இருக்கலாம் என்று கருதப்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன் தெஹ்ரானில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே படுகொலை செய்யப்பட்டதற்கு தாங்கள்தான் காரணம் என்று அமெரிக்கா ஒப்புக்கொண்டது.

சரி யார் முதலில் தாக்குவார்கள்:

1. ஈரான் இப்போது தாக்குதல் நடத்ததாது.. நேரம் வந்ததும்.. பெரும்பாலும் அடுத்த வாரம் ஈரான் தாக்குதல் நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2. அதற்கு முன் இஸ்ரேல் அல்லது அமெரிக்கா பதிலடி நடத்தலாம். ஏற்கனவே ஈராக்கில் இருக்கும் அமெரிக்காவின் ராணுவ மையம் மீது ஈரான் தாக்குதல் நடத்தி உள்ளது. ஈராக்கில் உள்ள இராணுவத் தளத்திற்கு எதிரான தாக்குதலில் குறைந்தது ஐந்து அமெரிக்க வீரர்கள் காயமடைந்தனர் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதற்கு அமெரிக்கா பதிலடி கொடுத்தால் அது உலகப்போர் ஆகும்.

3. ஆனால் இவர்களுக்கு முன் சர்ப்ரைஸாக ஹிஸ்புல்லா தாக்குதல் நடத்தும் என்கிறார்கள். ஈரானுக்கு முன்பாக.. இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா தாக்குதல் நடத்தும் என்கிறார்கள். இதுவே கூட போரின் தொடக்கமாக அமையும் வாய்ப்புகள் உள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+