அமெரிக்கா மீது அடுத்தடுத்து பறந்த "யுஎப்ஓக்கள்".. எல்லாமே ஏலியனா? ஆஹா! எலான் மஸ்க் இப்படி சொல்லுறாரே
நேற்று முதல்நாள் அதிகாலை அமெரிக்காவில் அலாஸ்கா மாகாணம் மேலே பறந்து கொண்டு இருந்த மர்ம பொருள் ஒன்றை அமெரிக்க விமானப்படை முதல்முறையாக சுட்டு வீழ்த்தியது.
நியூயார்க்: அமெரிக்கா மற்றும் கனடா வானில் பறந்த யுஎப்ஓ குறித்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் போஸ்ட் செய்துள்ளார். இது தொடர்பாக அவர் அடித்த கமெண்ட் இணையம் முழுக்க வைரலாகி உள்ளது.
Recommended Video
யுஎப்ஓக்கள் குறித்த அச்சம் உலகம் முழுக்க எழுந்துள்ளது. அமெரிக்கா மற்றும் கனடாவில் அடுத்தடுத்து யுஎப்ஓக்கள் கடந்த 3 நாட்களாக கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன.
சீனாவிலும் இன்று ஒரு யுஎப்ஓ கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதை சீன விமானப்படை சுட்டு வீழ்த்தியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

விமானம்
நேற்று முதல்நாள் அதிகாலை அமெரிக்காவில் அலாஸ்கா மாகாணம் மேலே பறந்து கொண்டு இருந்த மர்ம பொருள் ஒன்றை அமெரிக்க விமானப்படை முதல்முறையாக சுட்டு வீழ்த்தியது. அமெரிக்காவின் எப் 22 விமானம் மூலம் இந்த யுஎப்ஓ சுட்டு வீழ்த்தப்பட்டது. அலாஸ்கா மீது பறந்து கொண்டு இருந்த போது அதை அமெரிக்கா விமானப்படை சுட்டு வீழ்த்தி உள்ளனர். கிட்டத்தட்ட கார் அளவிற்கு இந்த யுஎப்ஓ இருந்துள்ளது. இந்த நிலையில் நேற்று கனடா வானில் பறந்த மர்ம பொருள் அதிகாலை சுட்டு வீழ்த்தப்பட்டது. அமெரிக்க விமானப்படை மூலம் மர்ம பொருள் சுட்டு வீழ்த்தப்பட்டது.

அச்சம்
இன்று அதிகாலை மூன்றாவது முறையாக அமெரிக்கா - கனடா எல்லையில் லேக் ஹுரோன் என்ற பகுதியில் இன்னொரு யுஎப்ஓ சுட்டு வீழ்த்தப்பட்டது. கனடா - அமெரிக்கா எல்லைக்கு அருகே பறந்து கொண்டு இருந்த போது இந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதையடுத்து திடீரென கடந்த இரண்டு நாட்களாக யுஎப்ஓ குறித்த அச்சம் அதிகரித்து உள்ளது. இதன் மூலம் அமெரிக்காவில் ஒரே வாரத்தில் 3வது முறையாக வானத்தில் பறந்த யுஎப்ஓ சுட்டு வீழ்த்தப்பட்டு உள்ளது. அமெரிக்காவில் நடந்த இந்த சம்பவம் அந்நாட்டு மக்கள் மட்டுமின்றி உலக மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

குழப்பம்
இந்த யுஎப்ஓக்கள் ஏலியன்களின் வாகனங்களாக இருக்குமோ என்ற கேள்வி எழுந்துள்ளது. பொதுவாக ஏலியன்களின் வாகனங்கள் யுஎப்ஓ என்று அழைக்கப்படும். உலகம் முழுக்க இதுவரை பல முறை யுஎப்ஓக்கள் கண்டறியப்பட்டதாக மக்கள் பலர் தெரிவித்துள்ளனர். 2020ல் அமெரிக்காவின் பென்டகனும் யுஎப்ஓ இருப்பதை உறுதி செய்து ரிப்போர்ட் வெளியிட்டது. பொதுவாக எந்த ஒரு விமானம் அல்லது பறக்கும் பொருள் அடையாளம் காண முடியாத நிலையில் இருந்தாலும் அதை யுஎப்ஓ என்றுதான் அழைப்பார்கள். அதாவது வானில் பறக்கும் ஒரு பொருள் என்னெவென்றே தெரியவில்லை என்றால் அது யுஎப்ஓ ஆகும். இதனால் யுஎப்ஓக்கள் ஏலியன்களின் வாகனங்களாக இருக்குமோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

மஸ்க்
இந்த நிலையில், இந்த யுஎப்ஓக்கள் குறித்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் போஸ்ட் செய்துள்ளார். இது தொடர்பாக அவர் அடித்த கமெண்ட் இணையம் முழுக்க வைரலாகி உள்ளது. அதில், கவலைப்படாதீர்கள். என்னுடைய சில ஏலியன் நண்பர்கள்தான் என்னை பார்க்க வந்து சென்றுள்ளனர் என்று குறிப்பிட்டு உள்ளார். கூடவே இதில் சில ஏலியன் எமோஜிகளையும் பயன்படுத்தி உள்ளார். ஏற்கனவே ஏலியன் குறித்த விவாதம் அதிகரித்துள்ள நிலையில் எலான் மஸ்க்கின் இந்த போஸ்டும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications