உலக அரசியலே புரளும்.. நேட்டோவில் இருந்து வெளியேறும் அமெரிக்கா? டிரம்ப்பின் திட்டம் என்ன? ஷாக்
நியூயார்க்: சர்வதேச நாடுகள் பார்க்கும் வகையில் மீடியா முன் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை அமெரிக்க அதிபர் டிரம்ப் அவமானப்படுத்தி உள்ளார். ஏற்கனவே நேட்டோவுடன் சண்டை உள்ள நிலையில் டிரம்ப்பின் இந்த செயல் கடுமையான விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில்தான் நேட்டோவில் இருந்து வெளியேறும் யோசனையில் அமெரிக்கா இருப்பதாக கூறப்படுகிறது.
நேட்டோ படைகள்
வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு (நேட்டோ) 32 உறுப்பு நாடுகளைக் கொண்டுள்ளது
ஐரோப்பா: அல்பேனியா, பெல்ஜியம், பல்கேரியா, குரோஷியா, செக் குடியரசு, டென்மார்க், எஸ்டோனியா, பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, கிரீஸ், ஹங்கேரி, ஐஸ்லாந்து, இத்தாலி, லாட்வியா, லிதுவேனியா, லக்சம்பர்க், மாண்டினீக்ரோ, நெதர்லாந்து, நார்வே, எஸ் போலந்து, போர்ச்சுகல், எஸ். போலந்து, போர்ச்சுகல், எஸ். துருக்கி, ஆகிய நாடுகள் உள்ளன.

வட அமெரிக்கா: கனடா, அமெரிக்கா ஆகிய நாடுகள் உள்ளன.
நேட்டோ என்பது அதன் உறுப்பு நாடுகளிடையே பாதுகாப்பு மற்றும் அமைதியை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட நாடுகளுக்கு இடையிலான இராணுவக் கூட்டணியாகும். கூட்டு பாதுகாப்பு கொள்கையின் அடிப்படையில் இந்த கூட்டணி செயல்படுகிறது, அதாவது ஒரு உறுப்பினர் மீதான தாக்குதல் அனைவருக்கும் எதிரான தாக்குதலாக கருதப்படுகிறது. அதாவது ஒரு நேட்டோ நாட்டை தாக்கினால் மற்ற நாடுகள் சேர்ந்து வந்து பதிலடி தரும்.
இப்படிப்பட்ட நிலையில்தான் நேட்டோவுடன் சண்டை உள்ள நிலையில் டிரம்ப்பின் இந்த செயல் கடுமையான விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில்தான் நேட்டோவில் இருந்து வெளியேறும் யோசனையில் அமெரிக்கா இருப்பதாக கூறப்படுகிறது. அதிபர் டிரம்ப்பிறகு நெருக்கமான பலர், உயர் அதிகாரிகள் இது தொடர்பாக ஆலோசனைகளை வழங்கி வருவதாக கூறப்படுகிறது. மற்ற நாடுகளுக்கு இதை செய்வதை விட.. அமெரிக்காவின் நட்பு நாடு ஒன்றிற்கு அவர் இதை செய்ததுதான் கடுமையான விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. ஐரோப்பா, நேட்டோ படையில் உள்ள மற்ற உலக நாடுகளை இது கடுமையான கோபத்திற்கு உள்ளாக்கி உள்ளது.
அடுத்து எங்களையும் இப்படித்தான் நடத்துவார். நேட்டோ படையில் உள்ள நாடுகளை டிரம்ப் காக்க மாட்டார். சமீபத்தில்தான் ஐநாவில் உக்ரைனுக்கு ஆதரவாக நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் ரஷ்யா, அமெரிக்கா ஒன்றாக சேர்ந்து இந்த தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்துள்ளது.
இதன் மூலம் ரஷ்யா - உக்ரைன் சண்டையால் உருவாக இருந்த உலகப்போரை டிரம்ப் தடுத்து உள்ளார். ஆனால் நேட்டோவை டிரம்ப் கிட்டத்தட்ட காலி செய்துவிட்டார். டிரம்ப் எடுத்த இந்த முயற்சி.. மொத்த ஐரோப்பிய கண்டத்தையும் அதிரவிட்டுள்ளது. ஏனென்றால் இந்த விவகாரத்தில் ஐரோப்பிய நாடுகள் எதையும் டிரம்ப் ஆலோசனை செய்யவில்லை. முக்கியமாக நேட்டோ நாடுகள் யாரையும் டிரம்ப் ஆலோசனை செய்யவில்லை. இதனால் ஐரோப்பிய நாடுகள் அவசர அவசரமாக ஆலோசனை செய்ய தொடங்கி உள்ளன.
நேட்டோவை பகைத்து ரஷ்யாவுடன் அமெரிக்கா நெருக்கமாகி உள்ளது. இப்போது உக்ரைனை அவமானப்படுத்தி ரஷ்யா - அமெரிக்கா கிட்டதட்ட நண்பர்களாகவே மாறிவிட்டனர்.
சண்டையில் என்ன நடந்தது?
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி - அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று முதல்நாள் சந்திப்பு நடத்தினர். இந்த சந்திப்பு இருவருக்கும் இடையில் கடுமையான மோதலில் முடிந்தது.
அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்சை நோக்கி உக்ரைன் அதிபர் கேள்விகளை வைத்ததே இந்த சண்டைக்கு காரணம் ஆகும். நேற்று வான்ஸ் பேசுகையில், அமெரிக்க ராஜாங்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. போரை நிறுத்துவதற்காக ரஷ்யா உடன் ராஜதந்திர முறையில் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது. உங்களின் செயல்பாடு.. உங்களின் நாட்டிற்கே அழிவை ஏற்படுத்தி விடும்.. உங்களின் நிலைப்பாடு உங்களின் நாட்டை அழித்துவிடும், என்றார்.
இதை கேட்டு கோபப்பட்ட ஜெலன்ஸ்கி, ரஷ்யாவை நீங்கள் தடுக்கவே இல்லையே.. ரஷ்யா 2019ல் இருந்தே போரை மேற்கொண்டு வருகிறது. அவரை நீங்கள் தடுக்கவே இல்லை. நீங்கள் எதை ராஜாங்க செயல்பாடு.. ராஜதந்திர செயல்பாடு என்று சொல்கிறீர்கள்? போர் என்றால் சிக்கல்தான்.. உங்களுக்கும் ரஷ்யாவிற்கும் இடையே கடல் இருக்கிறது என்பதால் உங்களுக்கு ஆபத்து இல்லை என்று நினைக்க வேண்டாம். எதிர்காலத்தில் ரஷ்யாவால் உங்களுக்கும் ஆபத்து வரும், என்றார்.
இதற்கு பதிலடி தந்த அதிபர் டிரம்ப் - உக்ரைன் நல்ல நிலைமையில் இல்லை.. நீங்கள் மிக மோசமான சூழலில் உள்ளீர்கள். உங்களுக்கு சாதகமாக எதுவும் இல்லை. இதற்கு எல்லாம் காரணம் நீங்கள்தான். உக்ரைன் மோசமான சூழலுக்கு மாற அனுமதித்து நீங்கள்தான்.. இந்த மோசமான சூழலில் உங்களுக்கு சாதகமான அம்சங்கள் இல்லை, நீங்கள் பல கோடி மக்களின் உயிரோடு விளையாடிக்கொண்டு இருக்கிறீர்கள் என்றார்.
இதற்கு கோபமாக பதில் சொன்ன ஜெலன்ஸ்கி, நீங்கள் இரண்டு நாட்டு போரை பற்றி சத்தமாக இப்படி மீடியா முன் பேசுவது சரியா என்று பார்த்துக்கொள்ளுங்கள். நாங்கள் விளையாடவில்லை.. இந்த போரை நாங்கள் தனியாக எதிர்கொண்டு வருகிறோம்.. நாங்கள் தனித்துவிடப்பட்டு உள்ளோம்.. அதற்கு நன்றி என்றுள்ளார்.
டிரம்ப் - அப்படி எல்லாம் பேசாதீர்கள்.. நீங்கள் தனியாக இல்லை.. நீங்கள் தனியாக இருந்தால் கதையே வேறு. அமெரிக்கா உதவி இருக்கிறது உங்களுக்கு. முன்னாள் பதவியில் இருந்த முட்டாள் பிரதமர் உங்களுக்கு 350 பில்லியன் டாலர் தந்திருக்கிறார் என்பதை மறக்க வேண்டாம். வான்ஸ் சத்தமாக பேசவில்லை. நாங்கள் இருப்பதால் எதோ உங்கள் நாடு இருக்கிறது. இல்லையென்றால் இந்த போரில் நீங்கள் இன்னும் மோசமாக சிக்கி இருப்பீர்கள். உங்களுக்கு இந்த போரில் வெல்லும் வாய்ப்பே இல்லை.. நீங்கள் 3ம் உலகப்போரை வைத்து விளையாடிக்கொண்டு இருக்கிறீர்கள்.. டீல் செய்ய விருப்பம் இருந்தால் அடுத்த முறை இங்கே வாருங்கள்.. என்று கூறினார்.
-
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
Iran us war: போரில் ஜெயிச்சுட்டோம்.. அணு ஆயுதம் வைத்துக்கொள்ள மாட்டோம் என ஈரான் சம்மதம்.. டிரம்ப் பேச்சு! -
வெறும் 20 நிமிடங்களில் ரூ.840 கோடி லாபம்.. டிரம்ப்பால் போரை வைத்து பணம் பார்க்கும் மர்ம டிரேடர்! -
எங்க நிபந்தனையை ஏற்றால்தான் போர் நிறுத்தம்.. அமெரிக்கா திட்டத்தை நிராகரித்த ஈரான்! தீவிரமாகும் போர் -
அமெரிக்க அதிபர் டிரம்பின் ராஜதந்திரம்.. கண்டுபிடித்த ஈரான்.. அடுத்த நொடியே தலைகீழான எண்ணெய் விலை -
ஈரானை காலி பண்ணாம விடாதீங்க.. டிரம்புக்கு நெருக்கடி கொடுக்கும் சவுதி பட்டத்து இளவரசர்? ஏன் தெரியுமா? -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
ட்ரம்ப் சொல்லி வாயை கூட மூடல..ஈரானில் விழுந்த ஏவுகணைகள்! பற்றி எரிந்த எல்பிஐ மையம்..மீண்டும் சிக்கல் -
பிரதமர் மோடி - அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பேச்சு.. ஈரான் போருக்கு நடுவே நடந்த முக்கிய ஆலோசனை -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம்












Click it and Unblock the Notifications